009, கோதுமைமாவு குழிப்பணியாரம்

பணியாரம்னு ஒரு பலகாரம் இருக்குன்றதே நிறைய குழந்தைகளுக்கு இப்போ தெரியல.. எல்லாம் ஜங் புட் காலமாப் போச்சு.. ஆனா.. இந்த மாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் ஒடம்புதான் கெட்டுப்போகும். அதனால வீட்லயே குழிப்பணியாரம், பொரி உருண்டைனு செஞ்சு கொடுத்து குட்டீஸ்கள குஷிப்படுத்தலாமே......

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
பட்டாணி - கால் கப்
மிளகாய்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைக்கவும்.

* உருளைக்கிழங்கை தோல் உரித்து, வெங்காயம், மிளகாய்தூள், சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

* கோதுமை மாவில் உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

* உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டைகளை, கோதுமை மாவில் தோய்த்து, குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, போட்டு, திருப்பியதும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.

எழுதியவர் : கணேஷ் கா (10-Jan-14, 4:57 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 139

மேலே