ஆரோக்கியமாக சமைக்க சில டிப்ஸ்கள்

* காய்கறி சாலட் செய்யும்போது ஒரு கைப்பிடி பாசிப் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து சேர்த்துக்கொள்ளுங்கள் சத்துக்கும் சத்து; சுவைக்கும் சுவை!

* பஜ்ஜி மாவில் நாலைந்து பூண்டு பற்களை அரைத்தும், ஒரு ஸ்பூன் சீரகத்தைப் பொடித்தும் போட்டு பஜ்ஜி செய்தால், பஜ்ஜி நல்ல சுவையுடனும் இருக்கும். கடலை மாவினால் வரும் வாயுத் தொல்லைகளையும் ஏற்படாமல் தடுக்கும்.

* மோர்க் குழம்பு செய்ய சாமான்களை வறுத்துவிட்டு, தேங்காய்க்குப் பதிலாக பச்சையாகவே துளி கசகசாவை போட்டு அரைத்து மோர்க்குழம்பு செய்து பாருங்கள். சுவையாக இருக்கும். தேங்காய் போடாததால் கொலஸ்ட்ரால் குறையும். கசகசா போடுவதால் வயிற்றுக்கு குளுமை.

* உளுந்து - அரை கப், அரிசி - கால் கப், சிறிது வெந்தயம் இவைகளை ஊற வைத்து நைசாக அரைத்து 4 கப் கேழ்வரகு மாவுடன் கலந்து மறுநாள் காலை தோசை வார்க்கவும். சத்தான, சுவையான தோசை தயார்.

* துவரம் பருப்புத் துவையல் தயார் செய்யும்போது, சிறிது கொள்ளினையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். உடம்பிற்கும் நல்லது.

* சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றைக் கொதித்து இறக்கும் சமயம் துளி வெந்தயப் பொடி தூவி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம்.

* எந்த வகை கீரையானாலும் அதைச் சமைக்கும்போது அளவுக்கு மீறி காரம், உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சமைத்தால், கீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.

* வெந்தயத்தைக் கறுப்பாக வறுத்துத் தூள் செய்து காப்பிப் பொடியில் கலந்து காப்பிப் போட்டுக் குடித்தால் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு நல்லது.

* இரண்டு மிளகு, அரை ஸ்பூன் தனியா - தூள் செய்து தேநீர் கொதித்து வரும்போது தூவி இறக்கி வடிகட்டி சர்க்கரை கலந்து சாப்பிட உடம்புக்கொரு ஊட்டச்சத்து கிடைத்து களைப்பு நீங்கும்.

* மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் உறையாது. உறையூற்றும்போது பாலைச் சற்று சூடாக்கி ஊற்றி ஒரு பாத்திரத்தையும் கவிழ்த்து மூடிவிட்டால் விரைவில் உறைந்துவிடும்.

* மிக்ஸியில் மாவு அரைக்கும்போது அது எளிதில் சூடாகிவிடும். சூட்டைத் தணிக்க மாவில் ஐஸ் வாட்டர் தெளித்து அரைக்கலாம்.

* ரத்தக்கறை படிந்த துணிகளை உப்புக் கலந்த தண்­ரில் சிறிது நேரம் ஊற வைத்து துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.

* குழந்தைகளின் நகங்களில் அழுக்குச் சேர விடக்கூடாது. நகத்தை வெட்டிவிட வேண்டும். அப்படி வெட்டுவதற்கு முன்பு குழந்தைகளின் விரல்களைத் தண்­ரில் முக்கித் துடைத்துவிட்டு, அதன் மேல் பவுடரைப் பூசினால் எதுவரை நகத்தை வெட்டலாம் என்பதைத் தெளிவாகக் காட்டும்.

* காரணமின்றி திடீரென வயிறு வலித்தால், இரண்டு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டு தண்­ர் குடித்தால் வலி பறந்துவிடும்.

எழுதியவர் : கணேஷ் கா (13-Jan-14, 8:56 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே