கோவில்கள்

திருநெல்வேலியில் நெல்லையப்பர்
தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர்
திருவாரூரில் தியாகராஜர்
திருவையாறில் ஐயாறப்பர்
திருவண்ணாமலையில்அண்ணாமலையார்
திருவாவடுதுறையில்கோமுக்தீஸ்வரர்
திருவெண்காட்டில்சுவேதாரண்யேஸ்வரர்
திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்
திருக்கருகாவூரில் முல்லைவனநாதர்
திருவாலாங்காட்டில்வடாரண்யேஸ்வரர்
திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர்
திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர்
திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர்
திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர்
திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்
திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர்
திருச்சியில் தாயுமானவர்
திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர்
திருமணஞ்சேரியில் உத்வாகநாதர்
திருவேள்விக்குடியில் கல்யாணசுந்தரேஸ்வரர்
திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்
திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்
திருமழபாடியில் வைத்தியநாதர்
திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்
திருப்புனவாசலில்விருத்தபுரீஸ்வரர்
திருவண்டுதுறையில்வண்டுறைநாதர்
திருமாணிக்குழியில்வாமனபுரீஸ்வரர்
திருவாளப்புத்தூரில்மாணிக்கவண்ணர்
'த' வரிசையில்
ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன்.
இதற்கே மூச்சு வாங்குது.
இன்னும் மயிலாப்பூரில்
காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில்
நடராஜர் , வைத்தீஸ்வரன் கோவிலில்
வைத்தியநாதர் என ஆரம்பித்தால்
நீண்டு கொண்டே இருக்கும்.
தேவாரம் பாடப் பெற்ற தலங்கள்
மட்டுமே 274. இதில் சோழநாட்டில்
காவிரியின் தென்கரையில் அமைந்த
தலங்கள் மட்டுமே 128. வடகரையில்
அமைந்த தலங்கள் 63.
ஈழத்தில் உள்ள திருகோணமலையில்
அமைந்த திருக்கோணேஸ்வரர்
கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில்
அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும்
தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.

எழுதியவர் : முரளிதரன் (17-Jan-14, 6:42 pm)
பார்வை : 302

மேலே