வாச்சஸ்பதி - பாமதி காதல்

நான் படித்த காதல் கதைகளில் இது மிகவும் அழகான ஒன்று. இது ஒரு உண்மை நிகழ்வும் கூட. பாரத மண்ணில் மட்டுமே இப்படி நடக்கும். என்னை பொறுத்தவரை இந்தியா பலவிதமான உணர்சிகளையும் வாழ்க்கையின் பலவிதமான பரிணாமங்களையும் கண்ட நாடு. எந்த ஒரு விசயமும் அதன் உச்சத்திற்கு சென்று விடும் மகிமை பெற்றது பாரத நாடு என்றே நான் கருதுகிறேன். உதாரனமாக நம்பிகைகளையும் மூட நம்பிகைகளையும் குறிப்பிடலாம். கற்சிலையை கடவுளாய் நினைத்து வேண்டும் மூட நம்பிக்கையும் அதன் உள்தளத்தில் தன்னை வாழ்க்கையின் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல பிரார்திற்கும் அழகான உன்னதமான நம்பிக்கையும் சமமாகவே உச்சத்தில் இருக்கிறது. மனிதன் தன் உயர்ந்த பக்குவத்தை இந்த மண்ணில் இருந்துதான் பெற்றான்.

இந்த காதல் கதை அபூர்வமாகவே நிகழக்கூடியது. பாரத மண் பல்வேறு தத்துவ மேதைகளையும் தெளிந்த மனிதர்களையும் கண்ட நாடு. அப்படிப்பட்ட ஒருவர்தான் வாச்சஸ்பதி. அவர் கல்வி கற்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இந்தியாவில் ஈடுபாடு என்பது முழுமையாக செயலில் தன்னை அர்பணிப்பது என்று பொருள். அப்போது அவரது தந்தை மரணத்தை எதிர் நோக்கி காத்திருந்ததால் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைபட்டார். ஆனால் அவர் கற்பதில் ஆர்வமாக இருந்த போது அவர் தந்தை சொன்னதை கவனிக்காமலேயே சரி என்று சொல்லிவிட்டார். அவர் அந்த அளவுக்கு அதில் ஈடுபாட்டுடன் இருந்தார்.

திருமணமானது கூட நினைவு இல்லாமல் உரை எழுதிக் கொண்டே இருந்தார். அவரது மனைவி அவர் மீது மிகுந்த காதல் கொண்டிருந்தாள். அவரை தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை. அவள் அவரிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு பணிவிடைகள் செய்து வந்தாள். யார் தனக்கு உணவு கொண்டு வருகிறார்கள் யார் இடத்தை சுத்தம் செய்கிறார்கள் தான் தூங்குவதற்கு யார் படுக்கையை தயார் செய்கிறார்கள் என்று கூட சுற்றுபுறத்தை உணராமல் அவர் உரை எழுதிக் கொண்டு இருந்தார். தான் இருபது கூட தெரியாமல் அவர் உரை எழுதிக் கொண்டிருப்பதை அவளும் உணர்ந்திருந்தாள். அவரின் உரை இதுவரை எழுதப்பட்ட உரைகளிலேயே மிகச் சிறந்தது எனக் குறிப்பிடபடுகிறது. பதராயனரின் பிரம்ம சூத்திரங்களுக்கு அவர் உரை எழுதிக் கொண்டு இருந்தார்.

இப்படி பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்தன.அவரின் உரை முற்று பெரும் நாளும் வந்தது.கடைசி வாக்கியம் மட்டுமே இறுதியாக இருந்தது. உரை முடிந்ததும் துறவியாக வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தார். அன்று இரவு கடைசி வாக்கியத்தை எழுதினார். அப்போது மங்கலான விளக்கு வெளிச்சத்தை ஒரு அழகான தேவதையின் கைகள் விளக்கிற்கு உயிரூட்டி அறையை பிரகாசிக்க செய்வதை பார்த்தார். அப்போதுதான் அவர் சுற்றுபுறத்தை உணர்ந்தார். ஆச்சரியமடைந்து அவளிடம் " நீங்கள் யார்? " என்று கேட்டார்.

" இப்பொது நீங்கள் கேட்டதால் நான் சொல்கிறேன், நான் உங்கள் மனைவி , பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னை திருமணம் செய்தீர்கள் " என்றாள்.
வாச்சஸ்பதி கண் கலங்கினர். " இதை ஏன் முதலில் சொல்லவில்லை. நான் உன்னை காதலித்து இருக்க முடியுமே. ஆனால் உரை முடிந்ததும் துறவறம் மேற்கொள்ள உறுதி பூண்டிருந்தேன். என்னால் என்னை மாற்ற முடியாது " என்று கண் கலங்கினார். " ஆனால் நீங்கள் உரை எழுதுவதில் முழு ஈடுபாட்டுடன் இருந்ததால் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை " என்றாள்.

" உன் அன்புக்கும் காதலுக்கும் நான் தலை வணங்குகிறேன்.. என் அன்பை காட்ட, இதோ என் உரைகளுக்கு உன் பெயரை சூட்டுகிறேன்." என்று தன் உரைகளுக்கு தன் மனைவியின் பெயரான பாமதி என்று பெயர் சூட்டினார்.

பிரம்ம சூத்திரங்களுக்கும், பாமதி எனும் பெயருக்கும் துளி கூட சம்பந்தமோ , பொருத்தமோ இல்லை என்றாலும் அந்த உரைகளுக்கு இதைவிட ஒரு உயிரோட்டமான ஒரு தலைப்பு இருக்கவே முடியாது. ஏனெனில் பன்னிரெண்டு ஆண்டுகள் பாமதியின் அன்பான பணிவிடைகளினால்தான் அவரால் வெளி சூழ்நிலைகளின் சிரமம் தெரியாமல் எழுத முடிந்தது. எனவே அதுவே சிறந்த தலைப்பு ஆகும்.

பாமதியும் "இதுவே எனது பாக்கியம் இந்த உலகத்திலே நானே மிகவும் அதிர்சடசாலி. என்னை பற்றி கவலைபடாதீர்கள். உங்கள் நோக்கம் நோக்கி செல்லுங்கள். அதுவே என் காதலும் கூட.." என்றாள்.

இப்படி இந்திய சரித்திரம் பல அழகான காதல் கதைகளை தன்னிடம் கொண்டுள்ளது. உதரணமாக மைத்ரேயி - யக்யவல்கியர் , ராதை - கிருஷ்ணன் , மீராபாய் - கண்ணன் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இப்படி வாசகர்கள் தங்களுக்கு தெரிந்த காதல் கதைகளை கவிதை நடையில் தந்து இந்த பிப் 14 ஐ சிறபிக்கலாமே என்று நான் கருதுகிறேன். இதை கவிதை போட்டியாகவும் அறிவிக்கலாம்.

இன்னும் சொல்ல போனால் சரித்திரக் கதைகள் மட்டுமல்லாமல், நம் வாழ்கையில் நம் அருகில் நடந்த சிறந்த காதல் நிகழ்வுகளை கவிதையாக்கலாம். என் தங்கையின் காதல் திருமணம் கூட அழகானது. அவள் போரட்டங்கள் பல சந்தித்து வெற்றி பெற்றாள். அதே போல் என் நண்பனின் தோழி ஜாதி பிரச்சனையை வென்று வாழ்க்கையை அடைந்தாள்.

இது போன்ற அழகான காதல் கதைகளை கவிதையாக்கும் போட்டியை இந்த பிப் 14 க்கு வைக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அதாவது பா. விஜய் எழுதிய உடைந்த நிலாக்கள் மாதிரியான கவிதை தொகுப்பு கிடைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.

எழுதியவர் : Karthikeyan (24-Jan-14, 11:36 am)
பார்வை : 313

சிறந்த கட்டுரைகள்

மேலே