குட்டிப்பாப்பா ஸச்சி

தம்பி பாப்பா பிறந்ததிலிருந்து தினந்தோறும் தன் அம்மாவையையும் ,அப்பாவையும் தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருந்தாள் நான்கு வயது ஸச்சி .

"ப்ளீஸ் ம்மா, ப்ளீஸ் ப்பா என்னை தம்பி பாப்பாக் கூட தனியா விடுங்களேன்... !"

மற்றக் குழந்தைகள் செய்வது மாதிரியே ,தனக்கு அடுத்ததாக பிறந்திருக்கும் தம்பி பாப்பா மீது பொறாமை கொண்டு ,அவன் தோள்களை பிடித்து உலுக்கவோ,அவனை அடிக்கவோ,உதைக்கவோ அவள் செய்யக்கூடலாம் என்ற அச்சம் அவளது பெற்றோர்களின் வாயிலிருந்து "...அதெல்லாம் முடியாது ! " என்கிற வார்த்தையாக வெளிப்பட்டது. ஆனால் அவளிடம் பொறாமைக்கான அறிகுறிகள் துளி அளவு கூட இருந்திருக்கவில்லை.,

பாப்பாவோடு தனியாக இருக்க வேண்டுமென்ற அவளது வேண்டுகோள் மெய்ப்பட வேண்டுமென்ற அவசரம் அவளுக்குள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பாப்பாவை பத்திரமாக பார்த்துக்கொள்ள ஆரம்பித்தாள்

நகர ஆரம்பித்தன நாட்கள்...

அவளது பெற்றோர்கள் இப்போது அவளை தம்பி பாப்பாவோடு தனியாக இருக்க அனுமதித்திருந்தார்கள்

தனிமை - தம்பி பாப்பா -ஸச்சி

அளவிலா சந்தோசம் அவளுக்குள்,தன் தம்பி பாப்பாவின் அறைக்குள் சென்று மெல்லக் கதவைச் சாத்திக்கொண்டாள்.., "உள்ள போயி இவ என்ன பண்ணப்போறா ??..." என்று ஆர்வமாய் இருந்த அவள் பெற்றோருக்கு அவள் செய்கையை கவனிக்கவும் ,அவள் சொல்வதைக் கேட்கவும் கதவில் இருந்த சிறு இடைவெளி ஒன்று கைகொடுத்த்து. கதவின் இடுக்கு வழியாகக் கண்களை செழுத்தி எட்டிப் பார்க்கிறார்கள் ஸச்சியின் அம்மாவும் அப்பாவும்.

தன் தம்பிப் பாப்பாவை நோக்கி மெல்ல நடக்கிறாள்.... ,தன் முகத்தை தன் தம்பியின் முகத்திற்கு மிக அருகில் மெதுவாக கொண்டு சென்று சின்னக்குரலெடுத்து மழலை பேச ஆரம்பிக்கிறாள் "பாப்பா !! பாப்பா !! நான் ஒன்னு கேப்பேன்... சொல்லுவியா.. இந்த கடவுளு இருக்காருல... கடவுளு... அவரு எப்படி பாப்பா இருப்பாரு?? எனக்கு கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டே இருக்கு.... சொல்லுவியா ?? "


Adopted from The Story : “Sachi” by Dan Millman
From The Book : Chicken Soup for Souls
மொழியாக்கம் : அடியேன்

எழுதியவர் : விஜயன்.துரைராஜ் (31-Jan-14, 9:54 pm)
சேர்த்தது : விஜயன் துரைராஜ்
பார்வை : 341

மேலே