போராளி

அவர்கள் என் அருகில் வருவதை என்னால் உணர முடிந்தது.என் மரணம் இன்று நிச்சியம் நிகழப்போகிறது.அதற்காக நான் கவலைப்படவில்லை .சாவதற்கு முன் நிச்சியம் இவர்களில் ஒருவரை கொன்றுவிடுவேன் . அதற்கு முன் .............

இரவில் உறங்கும் எங்கள் மக்கள் சூரியனை பார்ப்பது இல்லை .இன படுகொலை என்பது எங்கள் நாட்டில் விளையாட்டு போல் நடந்து கொண்டு இருக்கிறது . எங்கள் குழந்தைகள் தாய் தந்தையை தேடுவதும், பெண்கள் தங்கள் கணவரை இழந்து கதறி அழும் காட்சி கல்லையும் கரைய வைக்கும். இவைகள் போதாது என்று வருண பகவான் இவ்வரக்கர்கள் செய்யும் பாவத்தால் நாட்டிற்கு வருவதில்லை. பஞ்சம் எங்கள் சொந்தக்காரன். இவன் பசியாலும் தாகத்தாலும் எங்களை மரண படுக்கைக்கு அழைத்து செல்வான். உயிர் பிழைப்பதற்காக நாங்கள் அகதியாய் வரும் பொழுது பயங்கரவாதிகள் என்று நினைத்துகொண்டு எங்களை தாக்குவதும் சுட்டு கொல்வதும் உண்டு.

எங்களில் சிலர் சிறையில் தள்ளப்பட்டு கொடுக்கும் உணவை உண்டு வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரம் என்பது நாங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத ஓர் கனவு. கைதியில் ஒருவனான நான் சிறையில் இருந்து தப்பித்து பலரை கொன்று என் பகையை தீர்த்துக்கொண்டேன்.

என் நாட்டிற்கு நான் திரும்பிக் கொண்டு இருந்தபோது நீண்ட நடை பயணம் என்னை களைபடைய செய்தது .சற்று நேரத்தில் நான் மயங்கினேன்."ஐயோ புலி! புலி ! " என்று சத்தம் கேட்க தொடங்கியது. அவர்கள் என் அருகில் வருவது என்னால் உணர முடிந்தது. மரணத்திற்கு தயாரானேன்.

என் முன்னால் இருந்தவன் என்னை சுட முயன்ற போது அவன் மேல் பாய்ந்து அவன் கழுத்தை கடித்து கொன்றேன். ஒரு குண்டு என் உடலை துளைத்தது. உறுமிக் கொண்டே தரையில் விழுந்தேன். எங்கள் நாட்டின் வளத்தை இவர்கள் சுரண்டி கொண்டு இருக்கிறார்கள். இதனால் . இவர்களின் அழிவு நெருங்கி கொண்டு இருக்கிறது.

எனது மரணம் இவர்களுக்கு தோண்டப்படும் சவக்குழி..எனது உறுமல் இவர்களுக்கு ஊதப்படும் சங்கு. இவர்களது ஆரவாரம் இவர்கள் கேட்க;ப் போகும் மரண ஓலம்!

எழுதியவர் : பாலாஜி லெனின் (5-Feb-14, 1:20 pm)
பார்வை : 426

மேலே