பெயர்

விபீஷணின் தோழன் ஒருவன் , அவசரமாக கடலை கடக்க வேண்டியிருந்தது :....அச்சமயம் தோணி கூட இல்லாமல் போகவே....வீபீஷணன் , தன் நண்பனின் மேல் துண்டில் ஏதோ ஒன்றை வைத்து ..ஒரு முடிச்சை போட்டு ,
'' நண்பா ...நீ இப்போது தாராளமாக கடலை சர்வசாதாரணமாக நடந்தே கடக்கலாம் ! ஆனால் , எக்காரணத்தை கொண்டும் முடிச்சை அவிழ்க்க கூடாது !''
என்றான் :
நண்பனும் அவ்வாறே அந்த முடிச்சை கையில் பற்றிக்கொண்டு , வெகு சாவதானமாக கடலின் மேல் நடக்கலானான் !
பாதி கடந்தவுடன் , அந்த முடிச்சில் அப்படி என்ன தான் இருக்கிறது என்கிற எண்ணம் அவனுள் தோன்ற .....
அதை செயல் படுத்தும் நோக்குடன் ஆர்வத்துடன் அவன் முடிச்சை அவிழ்த்து பார்க்க ..
அதில் ராமநாமம் எழுதப்பட்டிருந்தது !!
தன்னையும் மறந்து , ஒரு வித அலட்சியத்துடன் ,
'' ப்பூ ...இவ்வளவு தானா ?''
என்றான் அவன் :
அடுத்த கணமே அவன் கடலில் மூழ்கி விட்டான் !
பகவானின் நாமகரணத்திற்கு தான் எத்தனைசக்தி !!

எழுதியவர் : முரளிதரன் (11-Feb-14, 12:54 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : peyar
பார்வை : 145

சிறந்த கட்டுரைகள்

மேலே