விதியின் விளையாட்டு5

இளநிலை மாணவர்களுக்கு, முதுநிலை மாணவர்கள் project சம்மந்தமாக பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும் போது ரிஷானியை தேடி வந்தார் அவர்.


இங்கு "ரிஷானி யாரு" என்றுக்கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் அந்த இளம் பேராசிரியர்!

ரிஷானி எழும்பி நின்று "நான் தான் sir ரிஷானி" என்ன என்று சற்று தயக்கத்துடன் கேட்டாள்........

இங்கு வாம்மா; என்று தனியே அழைத்தார்!

அவள் மதனை பார்த்தவாறு அங்கிருந்து வெளியே சென்றாள்.

ரிஷானி வெளியே சென்றதும், மதனுக்கு மற்ற பசங்களுக்கும் சொல்லி கொடுக்க தோன்றவில்லை; அவள் வருகையை நோக்கிக்கொண்டிருந்தான்.


ரிஷானியைவெளியே அழைத்த அந்த பேராசிரியர்;

ஹாய் ரிஷானி "நான் மனோஜ்" என்று சொல்லி கைகுலுக்கினார்.

பதிலுக்கு அவளும் கைகுலுக்கி புன்னகை செய்தாள்!

sir நீங்க....என்னை எப்படி தெரியும் என்று இழுத்தாள்,,,,,,

சென்னை LT கம்பெனில work பண்ற ராஜா மாமாவோட பொண்ணுதானே நீ என்று உரிமையாய் கேட்க!

ஆம்! என்றவள் இவர் யார் என்ற யோசனையில் மூழ்கினாள்!!!!!!!


அதற்குள் அவரே "ஹலோ ரொம்ப யோசிக்காதீங்க, நான் உங்க அப்பாவோட நண்பன் மனோகரனோட பையன் மனோஜ் தான்" என்று தன்னை அறிமுகப்படுத்தினான்.


ஓ! மனோகரன் மாமா பையனா? என்று கேட்டு மறுபடியும் புன்னகைத்தாள்...........

நீங்க இங்கதான் வொர்க் பண்றீங்களா?எந்த துறை? என்று கேட்டாள்;

ஆமா, வரலாற்றுத்துறை தான், உங்க அப்பாதான் எங்க அப்பாவுக்கு அழைப்புக்கொடுத்து நீங்கள் இங்கு படிக்கிற விஷயத்தை சொன்னார்கள்......


உடனே என் அப்பா உங்களை பார்த்து விசாரிக்க சொன்னாங்க அதான் வந்து பார்த்தேன்.

சரி ஏதாவது உதவி என்றாள் தயங்காமல் கேளுங்கள்,பார்ப்போம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் மனோஜ்............


அவர் சென்றதும் வகுப்பிற்கு வந்தாள் ரிஷானி!

தன் தேவதை வந்ததும் அவனது பணியைத்தொடர்ந்தான் மதன்.

சந்தேகங்களை பல மாணவர்கள் கேட்க மதன் சரியான பதிலை அளித்துக்கொண்டிருந்தான்.

நேரம் போனதே தெரியவில்லை; பலமுறை இருவரும் ஒருவரையொருவர் புன்னகையுடன் பார்த்துக்கொண்டனர்.

ஆனால் இதுவரை பேசிக்கொள்ளவில்லை;

அவளுக்கு ஏதாவது சந்தேகம் எழுந்து நம்மிடம் கேட்கமாட்டாளா? என்று மதன் ஏங்கிக்கொண்டிருந்தான்...

ஆனால் அவளோ! வாய் திறந்து எதுவும் கேட்கவில்லை.

அவளுக்கு ஏதாவது சந்தேகம் வந்தாலும் தன் பக்கத்தில் இருக்கும் தோழியிடம் கேட்க சொல்லி தெளிவு படுத்திக்கொள்வாள்.


அதையும் மதன் கவனிக்க தவறவில்லை!!!

நேரம் நீடிக்கவே மாணவர்கள் இன்னிக்கு போதும் கிளம்பலாம் என்று சொல்ல,

சரி என்று அனைவரும் புறப்பட தயாரான சமயம்,,,,,,,

மதன் தன்னிடமிருந்த ஒரு புத்தகத்தில் ஒரு கடிதத்தை வைத்து ரிஷானியிடம் நீட்டினான்.

அவள் அதை வாங்க மறுத்து அப்படியே நின்றாள்.

ரிஷானி தயவு செய்து வாங்கிக்கோ; ஆனால் இப்போ திறந்து பார்க்காதே என்று சொல்லிவிட்டு அவள் பக்கத்திலிருந்த பெஞ்சில் அந்த புத்தகத்தை வைத்து விட்டு அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான் மதன்,,,,,,,,,


அவன் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள் ரிஷானி!!!!!!!


கண் இமைக்கும் நொடியில் இங்கு நடந்த நாடகத்தை இன்னும் இரண்டு கண்கள் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தது................







தொடரும்.......

எழுதியவர் : ப்ரியா (3-Mar-14, 12:56 pm)
பார்வை : 247

மேலே