ஓர் எழுத்தாளனின் கதை-8

முன் குறிப்பு : இந்த கதை 1997 -2000 ம் வருடங்களில் நடந்த நிகழ்வுகளாக சித்தரிக்கப்படுகின்றன.
----------------------------------------------------------------------------

காவியா கொடுத்த பேப்பரை உற்று பார்த்துக்கொண்டே இருந்த தினகரனின் தோளில் கைப்போட்டு “ என்ன சார் ? ரொம்ப சிம்பிள் தீம் .. இதுக்கு போய் இவ்வளவு அலட்டிக்கிறீங்க” காவியா தினகரனை கவிதை எழுத தூண்டுகிறாள். இப்படி பேசினால் அவனுள் ஒரு ஆக்ரோஷம் வரும் என்று ஒரளவுக்கு முன்பே கணித்து வைத்திருந்தாள்.

காவியா கொடுத்த கவிதை கருவினை மீண்டும் நிதானமாக படிக்கிறான் தினகரன்...!

அந்த கரு....!

---மீனவர் ஒருவன் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்படுகிறான். இதுனால் ஆவேசமடைந்த அவன் காதலி இந்திய பிரதமரை நேரில் சந்தித்து அரசாங்கத்தை சபித்து தனி தமிழ்நாடு கேட்கிறாள். கவிதையில் தமிழ்நாடு என்று தனிநாடு கேட்பதற்கான வலுவான கோரிக்கைகள் இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரித்தால் தான் தனி ஈழம் சாத்தியமாகும் என்று கூடுதல் செய்தி கவிதையில் அழுத்தமா இருக்கணும். சிலப்பதிகார கண்ணகியின் அதே கோபம் இந்த கவிதையில் இருக்க வேண்டும் . இந்த கவிதை படித்து ஒருவருக்காவது தனி தமிழ்நாடு வேண்டும் என்ற உணர்வு பொங்க வேண்டும்----

” காவியா..! இதுல எதுவுமே எனக்கு தோண மாட்டிங்குது... தனி தமிழ்நாடு எப்படி சாத்தியம்? அண்ட் தனிநாடு எனக்கு உடன்படாத விஷயம்..? இஷ்டமில்லாத விஷயத்தில எப்படி கவிதை எழுத முடியும் . அதுவும் ஆக்ரோஷமா? என்னால முடியாது....! வேற தீம் கொடு..”

“டேய் டேய் நீ தமிழனா டா...? நம்ம மீனவர்கள் கடல்ல மீன் புடிக்கும் போது எவ்வளவு கஷ்டப்படுறாங்க? உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. ? இதுவரைக்கும் இந்தியா இந்தியான்னு சொல்லி நம்மள நாமே ஏமாத்திகிட்டோம்.அது புரியலயா ? லங்காவில் நம் ஆளுங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க...டிவில பார்த்தீல..? நம்ம தலைவர் பிரபாகரன் அவங்களுக்காக எவ்வளவு பாடுப்படுறார்...? உப்பு போட்டு திங்கிறவனா இருந்தா நல்லா யோசித்து எழுது.. இல்லையா.... இப்போவே இந்த செகண்ட்டே நம்ம ப்ரெண்ட்ஷிப் கட்...! “

“ ஹே காவி..! என்ன நீ .. இதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற...? நான் தமிழன் தான்.. ஆனா... தமிழன் உணர்ச்சியை இப்படி வெறும் கவிதையில காட்டிட்டு வெளியில வேஷம் போடுவது எனக்கு பிடிக்கல...! உணர்ச்சி கொடுக்கிற கவிதை எழுதலாம்.. அதுக்கா இப்படி ஒரு வேடிக்கையா சேலேண்ஜ் பண்ற கவிதைக்கு ஏன் தமிழ் உணர்வை இழுக்குற,... ? இது எனக்கு புடிக்கல காவி... இந்த உணர்வு பூர்வமான கவிதைகள் எல்லாம் தானா வரணும். இப்படி வலுக்கட்டாயமா எழுத கூடாது.. இதுதான் என் பாலிசி...! சாரி டீ.. இதுல திங்க் பண்ணி எழுத வேண்டியது இருக்கு,, இந்தியா குடிமகனா... என்னால அதன் இறையாண்மை பாதிக்கிற விஷயத்த எழுத கஷ்டமா இருக்கு...? ”

தினகரன் இப்படி சொன்னதும் அடுத்து என்ன செய்வது என்று காவியா திணறித்தான் போனாள்.. மனதுக்குள் “ இவனை உசுப்பி விட்டா நல்ல கவிதையும் கிடைக்கும், மாணவர்களின் உணர்ச்சியும் கவர்மெண்ட்க்கு காட்ட உதவும்ன்னுதானே நினைச்சேன்.. இதுனால இவன் பிரையன் எவ்வளவு ஸ்ட்ராங்ன்னு பார்த்துக்கலாம்.. இவன் என்னடா இப்படி பேசுறான்...”

” தினா... உனக்கு எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது . என்னோடு லைப்பரிக்கு வா...”

காவியாவுடன் நூலகத்திற்கு சென்றான். அங்கு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ராணுவத்தினர் துன்புறுத்தும் செய்தி. இந்திய அரசு மெத்தன நடவடிக்கை, கச்சத்தீவு பற்றிய செய்திகள், தமிழக அரசியல்வாதிகளின் போலி கண்ணீர். ஈழத்தில் நடக்கும் போர், விடுதலைப்புலிகளின் போராட்டம் என பல தகவல்களை உள்ளடக்கிய பத்திரிக்கை செய்திகளை தினகரனுக்கு எடுத்துக்காட்டினாள். மேலும் தமிழர்களின் வரலாறு, குமரிக்கண்டம் பற்றிய செய்திகள். என பல்வேறு வரலாற்று புத்தகங்களையும் தினகரனை படிக்க வைத்தாள்.

தினகரனின் மூளை.. இப்போது அதிக ஆக்ரோஷ தகவல்கள் உள்வாங்கி கொண்டது. உணர்ச்சி பிழம்பாய் அந்த தகவல்கள் எழுத்துகளாக உருமாற்ற போகும் சிந்தனைகள் அவன் மூளையில் பலத்த ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணும். இயல்பாக இருக்கும் மனித மூளை சிந்திக்கும் போது அதிக இரத்தத்தை வேதியியல் பரிமாற்றத்தில் உபயோகித்துக்கொள்ளும் எனும் போது. இயல்பான நிலையிலிருந்து சற்று பலமிழந்த மூளை உடைய தினகரனுக்கு இரத்த அழுத்தம் காரணமாக இதயத்தின் துடிப்பு அதிகமாகி உடலை ஓரிரு நிமிடம் செயலிழக்க வைக்க நேரிடலாம்.


”தினா...! உன்கிட்ட காரணமில்லாம இப்படி ஒரு கவிதை கேட்கல..! அடுத்த வாரம் நம்ம எல்லாரும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரிக்கை வைத்து மத்திய அரசுக்கு எதிரா தமிழ்நாடு புல்லா ஸ்டிரைக் பண்ணப்போறோம். அப்போ இந்த கவிதையை நான் வாசிக்க போறேன். சரியா..? ஸ்டூண்ட்ஸ் என்ன பெரிசா சொல்லிட போறாங்கன்னு நக்கல் பண்றவங்க மூஞ்சில கரியை பூசணும்... தினா .. ப்ளீஸ்.. “

“ சரி காவி...! ம்ம் எனக்கு தெரியாம என்னமோ ப்ளான் பண்ணி இருக்கன்னு நல்லவே தெரியுது. ஏன் நான் தான் இத எழுதணும்ன்னு நினைக்கிற,., என்னை விட நல்லா எழுதுற சீனியர்ஸ் இருக்கிறாங்களே, அவங்ககிட்ட கொடுத்தா இந்த தீம்ல பட்டை கிளப்பிவிடுவாங்களே? “

“டேய்.... மடையா.. நீ என் பிரெண்டு டா உன் மேல கான்ஃபிடண்ட் இருக்கு... உன்னால வீரமா எழுத முடியுமுன்னு எனக்கு தெரியும். இங்கு பாரு தினா... இந்த கவிதை ரொம்ப முக்கியம். உயிரை கொடுத்து எழுதுடா.. ப்ளீஸ்.. உயிரே போனாலும் எழுதி கொடுத்திட்டுதான் போகணும்....”

“என்ன காவியா.. ஒரு மாதிரியாவே பேசுற..? உயிர் போனாலும் பரவாயில்லைன்னு.... என்னாச்சு உனக்கு ,ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுற...? அதிகமா எமோஷனல் ஆனா உன் ஹெல்த்க்கு ப்ராப்ளம்...”

“ ஓ நீ எனக்கு சொல்றீயா....? நீ தாண்டா மயங்கி மயங்கி விழ்ந்துட்டே இருப்ப., நாங்க எல்லாம் மெண்டலி ஹெல்த்..அண்ட் ஸ்டிராங்கானவங்க சார்.. பார்த்து நீ இந்த கவிதை எழுதறேன்னு செத்து கித்து போயிடாதே... ஹா.ஹா..ஹா.ஹா.ஹா.. “ காவியா வேண்டுமென்றே இப்படி தினகரனுக்கு எதிர்மறையான முறையில் தெம்பு ஊட்டுகிறாள்

“ என்னடி இது வில்லி சிரிப்பு...? காவியா மேடம்.. நானும் ஸ்டிராங் தான்.. பட் நீ மனசுல என்னமோ எண்ணம் வச்சிட்டு பேசுற... காவியா.. ம்ம்ம் இரு இரு உன்னை வச்சிக்கிறேன்...! “

“ஹே ச்சீ என்னடா வச்சிக்கிறேன் கட்டிக்கிறேன்ன்னு அசிங்கமா... “

“லூசு...காவியா..கொழுப்புடி உனக்கு... ஹா...ஹா.ஹா.ஹா. “ தினகரன் பலமாக சிரித்தான்....

இதுவே அவனின் கடைசி சிரிப்பாக இருக்குமா........? காவியாவின் மனதில் ஏனோ இந்த விபரீத எண்ணம்.

-(தொடரும்)

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (4-Mar-14, 10:32 pm)
பார்வை : 344

மேலே