காரணத்த புரிஞ்சுக்கோங்க

அப்பா : ஏண்டா...இந்த வருசமும் முழுப்பரிச்சையிலே பெயிலாயிட்டியே....ஏண்டா இப்படி படிக்காமலே மானத்தை வாங்குறே...

மகன் : எப்பா....சும்மா சும்மா திட்டிகிட்டே இருக்காதப்பா...நான் ஏன் படிக்க முடியலை தெரியுமா...?

அப்பா : ஏண்டா...?

மகன் : எப்பா.... வருசத்துல மொத்தம் 365 நாள்ல 52 ஞாயிற்றுக்கிழமை போயிருது...மிச்சம் 313 நாள்ல 50 நாள் முழுவாண்டு லீவு போயிருது...மிச்சம் 263 நாள்ல,ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் கணக்கு பண்ணா அதுல ஒரு 122 நாள் போயிருது..மிச்சம் 141 நாள்ல,தினம் 1 மணி நேரம் விளையாட்டுக்குன்னு வச்சாலும் அதுல 15 நாள் போயிருது..மிச்சம் 126 நாள்ல தினம் 2 மணி நேரம் சப்பட்டுக்குன்னு வச்சா அதுல ஒரு 30 நாள் போயிருது, மிச்சம் 96 நாள்ல தினம் 1 மணி நேரம் பேசினா அதுல ஒரு 15 நாள் போயிருது, மிச்சம் 81 நாள்ல பரிட்சைக்குன்னு 35 நாள் போயிருது மிச்சம் 46 நாள்ல அரசாங்க விடுமுறைக்குன்னு 20 நாள் போயிருது,மிச்சம் 26 நாள்ல டிவி,தியேட்டர்னு 25 நாள் போயிருது,மிச்சமிருக்குற 1 நாள் பிறந்த நாள்.... இப்படி கொஞ்சங்கூட நேரமே கிடைக்காம ரொம்ப பிசியா இருக்குறதுனாலதான்பா படிக்க முடியல....அத முதல்ல புரிஞ்சுக்கோங்கப்பா....

அப்பா : அடி செருப்பால நாயே! பெயிலானது மட்டுமில்லாம பேச்சை பாரு அரசியல்வாதிகணக்கா.....

(பையன் ஓட்டமெடுக்கிறான்...)

எழுதியவர் : உமர் ஷெரிப் (5-Mar-14, 9:20 pm)
பார்வை : 245

சிறந்த நகைச்சுவைகள்

மேலே