கண்ணீரானவளே-வித்யா

கண்ணீரானவளே........!-வித்யா

காற்றெல்லாம்
வெளியேற்றி
வெற்றிடத்தில்
எனைநிறுத்தி
அறை கதவு நீ தாழிட......

கட்டெறும்பொன்று
கால்கடித்து கெஞ்சியதென்று
நீ சொன்ன கதையெல்லாம்
நான் ரசித்தேன்............!

கறுத்த பறவையொன்று
சிவந்த சிறகோடுவந்து
ஏகாந்த அழகில்
உன்னாடை சுமந்த
பழம் கொத்த......
மனக்கண்ணில் பேனா
தேடுகிறேன் கவிவடிக்க..........!

எங்கே நீயிருந்தாலும்
என் கனவுகளின்
மதில் மேல் நீ நடைபோட....

உலகின் அழகெல்லாம்
உன் பாதம் வழி வழிந்தோடிட
உனை நோக்கியே
நீண்டிடும் எனது கரங்கள்
கவியால் அணைத்திட.........

உன் செவிநெருங்கி
ரகசிய சேதிசொல்ல
தவித்திருந்த என் ஈரிதழ்
ஒதுங்கிய முடிகண்டு
வியர்த்து உலர்ந்து......
மருண்டதொரு கதை.......

வடமேற்கும் தென்கிழக்கும்
என்னவளென வரிந்துகட்ட
ஐந்தாம் திசைதேடி
நான் தொலைந்த கதை
என்ன சொல்ல................!

என் மொத்த உலகின்
தெருவெல்லாம் தொலைந்திட
நான் அமைத்த ஒற்றையடிப்பாதையில்
நாடோடியென நான் திரிய
முடிவில் முடிவாய்
நீ நின்றிட.........!

சரியானதை தேர்ந்தெடுவென்று
நீ கொடுத்த மூன்று வாய்ப்புகளும்
தவறானதாயிருக்க......
எதை நான் தேர்ந்தெடுக்க
என்னுயிரே..............!

யாரடி
நீ.............?
என் தோழியா.........?
என் காதலியா........?
என் மனைவியா...?

உன் இதயம் எரிந்து
மிஞ்சிய சாம்பல்தனை
என்னுயிரில் பூசும்போது
தெரிந்துகொண்டேன்.............!

என் கண்ணீருக்கு
சொந்தமானவள் என்று................!

எழுதியவர் : வித்யா (18-Mar-14, 3:35 pm)
பார்வை : 5474

மேலே