ஓர் எழுத்தாளனின் கதை-12

முன்குறிப்பு : இந்த படைப்பு 1997-2000 ம் வருடத்தில் நடந்தவையாக சித்திரிக்கப்பட்ட கதை .
---------------------------------------------------------------------------
காலை மணி 9

”கோயம்புத்தூர் சந்திப்பு உங்களை வரவேற்கிறது” என்று வளைந்த நிற்கும் பலகையுடன் காட்சியளிக்கும் கோவை ரயில் நிலையம் முன்பு மாணவ அமைப்பை சேர்ந்தவர்களும் கோவை மாவட்டத்திலுள்ள் ஓவ்வொரு கல்லூரியில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் அணி அணியாக வந்துகொண்டிருந்தனர்.

தினகரனின் வீட்டில் காவியா..!

“ ஹாய் தினா.! ரெடியாகிட்டீயா..? நேத்து நைட் ஃபுல்லா நீ எழுதின கவிதையை வாசிச்சு நல்ல மனப்பாடம் பண்ணிட்டேன். உன்கிட்ட இப்போ ஒருதரம் பேசிக்காட்டவா ? “

“ ம்ம் சரி காவி. “ என்ற தினகரனை நோக்கி அவனின் தந்தை... ஹேய்ய் திருட்டு பசங்களா.. என்னடா பண்றீங்க, எனக்கு தெரியாம அப்படி என்ன கவிதை, காவியா நீ எங்க வாசிக்க போற ?

இதுவரை தினகரன் - காவியா போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள் என்று மட்டும் தான் தெரியும் ஆனால் போராட்டத்தில் காவியா கவிதை வாசிப்ப்பாள் என்று இருவரும் தினகரனின் தந்தையிடம் சொல்லவில்லை.


“ அங்கிள்.. இத உங்ககிட்ட அன்னிக்கு சொல்ல மறந்துட்டேன். தினாவும் நானும் ரொம்ப நேரம் பேசினோம்ன்னு சொன்னேன்ல அப்போவே இந்த கவிதை எழுதிட்டான்.”

தினகரனை பக்குவநிலைக்கு கொண்டுவந்து நோயை குணப்படுத்த காவியா எடுத்த முயற்சி ஏற்கனவே சொல்லியிருந்தாள். இந்த கவிதையை தவிர...

“ ஓ சரி புரியுது...! எங்கே அதப்படி.. “

“ அப்பா லேட் ஆகிடுச்சு.. அங்க எல்லாரும் அசெம்பிள் ஆகியிருப்பாங்க.. இந்தாங்க நான் எழுதியது பாருங்க.. வாசிக்க நேரமில்ல “ என்ற தினகரன் போராட்டத்திற்கு செல்ல அவசரப்பட்டான்.

கவிதை படித்து பார்த்த தினகரனின் தந்தை மிகவும் ஆத்திரப்பட்டார்.. தினா நீ எழுதியது சரியல்ல. இத உன் தமிழ் ஆசிரியர் பார்த்தாங்களா ? “

“ இல்லப்பா ஏன்... இதுல என்ன தப்பு இருக்கு...”

“ டேய்... இதுவரை உன்னை திட்டியது இல்ல.. ஏதோ ஆவேசத்தில எழுதலாம். அதுக்காக இப்படியா? இரு உன் தமிழ் பேராசிரியர்கிட்ட பேசுறேன். 10 நிமிஷம் இரண்டு பேரும் நில்லுங்க..”

தினகரனின் தந்தை பேராசிரியரிடம் தொலைபேசியில் பேசினார். கல்லூரி தமிழ் பேராசிரியரும் கவிதையில் சில வரிகள் பிரச்சினை உண்டுப்பண்ணும் என்று கூறி அதை கொஞ்சம் மாற்றி கொடுத்தார்.

“ டேய் தினா... பேராசிரியர் சொன்ன திருத்தம் இது.. இந்த மாதிரி எழுது... “

“ அங்கிள் என்ன அங்கிள் ? எங்க உணர்வை காட்ட எழுதியிருக்கான். தப்பான விஷயத்தை சொன்னா தப்பாதான் தெரியும் “ காவியா வாதம் செய்ய ஆரம்பித்தாள்.

தினகரனுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. போராட்டத்திற்கு செல்லும் நேரம். இப்போது எப்படி சிந்தித்து மாற்றம் செய்ய முடியும். காவியாவும் அதை படிக்க வேண்டும், குழம்பி போனான் என்பதை விட மனதில் அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டான்.

“தினா - காவியா ரெண்டு பேரும் பயமறியா கன்றா இருக்கீங்க... நான் சொல்வதற்கு மரியாதை கொடுத்து சில வரியை மட்டும் மாத்துங்க. உங்க நல்லதுக்குதான் சொல்றேன். தமிழர் நலன் தேவைதான். ஆனா இப்படி சொல்லி வரக்கூடாது “

இருவரும் தினகரனின் தந்தையின் பேச்சை மீற முடியவில்லை.

5 நிமிட இடைவெளியில் தினகரன் மிகுந்த மனப்பாரத்துடன் ஏதோ வரிகளை மாற்றிவிட்டான். ஆனால் அவனுக்கும் காவியாவிற்கும் இதற்கு முன்பு இருந்த கவிதையின் அந்த வலிமையும் திருப்தியும் இல்லை.

தினகரன் எழுதிய அதே வேகத்தில் காவியாவும் படித்து மனப்பாடம் செய்துக்கொண்டாள். அவளுக்கு கவிதையை பார்த்து படிப்பது என்பது பிடிக்காது. எதையும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் குணம் கொண்டவள்.

--------------------------------------

தினகரன் - காவியா போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அங்கே சில அளவிலே காவல் துறையினரும், இரண்டு மூன்று பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு இது வெறும் கண் துடைப்பு மாணவர் போராட்டம் தான். கடமைக்கு பணியாற்றவே வந்திருந்தனர்.

ஆனால் போராட்டம் நடக்கும் இடத்திற்கு 500 க்கும் அதிகமான மாணவர்கள் குவிந்தனர். கோஷமிடும் போராட்டம் என்று அனுமதி வாங்கப்பட்டு அது உண்ணாவிரத போராட்டமாக கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. காரணம் அன்று காலை வந்த பத்திரிக்கை செய்தி

**** தமிழக மீன்வர்கள் 20 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டார்கள், 15 பேர் சுட்டுகொல்லப்பட்டனர் என்று அஞ்சப்படுகிறது.சென்னை, நாகை, தூத்துக்குடி கடலோர மாவட்டங்களில் பதற்றம். மத்திய அரசு மீண்டும் அலட்சியப்போக்கு, மீனவர்களின் குடும்பத்தினர் கதறல்****

------------என்ற இந்த செய்தி தமிழக முழுவதும் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆகவே போராட்டம் உண்ணாவிரத போராட்டமாக மாறியது.

கோவை ரயில்நிலையம் முன்பு தீடிரென சார்மினார் பந்தல், ஒலிவாங்கி, ஒலிபெருக்கி, விரிப்புகள், நாற்காலிகள் ஆகியன மாணவர்களால் கொண்டுவரப்பட்டு போராட்ட மேடை தயாராகின. அதுவரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு மாணவர்கள் உண்ணாவிரதம் நடத்துவதாக செய்திகள் சென்றடையவில்லை.
--------------------------------------------
காலை மணி 10:

போராட்டம் ஆரம்பமானது.

பல கல்லூரியின் மாணவர்கள் ஆவேசமாக பேசினர். ஆனால் அதில் வெறும் மீனவர்களின் மீதான அனுதாபம் மற்றும் மத்திய அரசை கெஞ்சி கேட்கும் பேச்சாக இருந்தன.

---போராட்டம் - உண்ணாவிரதமாக மாறியதால் காவல்துறையினர் மாணவ அமைப்பினரிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர். வாக்குவாதம் முற்றியது. மாணவர்களின் பலத்த எதிர்ப்பையும் , ஆக்ரோஷத்தில் அவர்கள் உண்ணாவிரத்தை விட்டுகொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்துக்கொண்ட உயர் காவல் துறை அதிகாரி.... மாலை 4 மணிக்குள் போராட்டம் கைவிட வேண்டும். அனுமதியில்லாமல் உண்ணாவிரதம் இருப்பதும் , பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதும் சட்டப்படி குற்ற செயல் என்று எச்சரித்து விட்டு மாலை வரை மாணவர்களுக்கு வாய்ப்பளித்தார் ----

நண்பகல் மணி 12 :

மாணவ அமைப்பின் தலைவர் பேசினான். இவனின் பேச்சில் மீனவர்கள் படும் இன்னல்கள், அவர்கள் கடலில் இலங்கை கடற்படையினரால் எப்படி தாக்கப்ப்டிகிறார்கள் , மத்திய அரசின் கவனக்குறைவு என்று ஆவேசமாக பேசி கூடியிருக்கும் 500 க்கு மேற்ப்பட்ட மாணவர்களின் மனதில் ஆவேசத்தை கொண்டு வந்தான்.

அதிகளவில் மாணவர்கள் கூடி உண்ணாவிரதம் நடத்துவது , அதில் மாணவர்களின் உணர்வை அறிந்து பத்திரிக்கை செய்தியாளர்கள் அதிகளவில் கூடினர், தனியார் தொலைக்காட்சி ஒன்றும் நிகழ்வை பதிவு செய்தன. புகைப்பட வெளிச்சங்கள் அதிகம் கண் சிமிட்டின.


மதியம் மணி 2 :30

தினகரன் பேச அழைக்கப்பட்டான். “ நண்பர்களே ...! இன்று நம் மனதில் இருக்கும் இந்த ஆவேச உணர்வை அப்படியே கொஞ்சம் திசை மாற்றுங்கள். நமக்கான தீர்வு, நம் தமிழ் மீன்வனுக்கான தீர்வு, நம் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கு வேண்டுமென்றால் நாம் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்துவிட்டோம் என்றே எனக்கு தோன்றுகிறது. நான் எழுதிய கவிதையை என் தோழி காவியா இப்போது உங்களுக்கு வாசித்து காட்டுவாள் “ மிகவும் நிதானமாக அழகாக பேசி முடித்தான் தினகரன்.



ஒரு கல்லூரி பெண் ஒலி வாங்கியின் முன்பு பேசபோகிறாள் அதுவும் மிக ஆக்ரோஷமான கவிதை எனும் போது அனைவரின் மத்தியில் ஆர்வம் மேலோங்கியது, அதற்கு முன்பு தினகரன் கவிதைக்கு கொடுத்த அறிமுகம் , பத்திரிக்கை செய்தியாளர்களின் காதுகளை உன்னிப்பாக கவனிக்க வைத்தன. . மாணவர்கள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட நிலையில் காவியாவின் கவிதை வாசிப்பை கேட்க தயாராகினர்.

எப்போதும் சாதாரணமாக கவிதையை மனதிற்குள் படிப்பதை விட அதை அழுத்தம் திருத்தமாக கவிதையின் உணர்ச்சியோடு கூடிய குரல் பாவனையில் படிக்கும்போது ,அந்த கவிதையின் ஆற்றல், உணர்ச்சி, நயம் ஆகியவற்றால் கவிதை எழுச்சி பெற்று கேட்பவரின் மனதை அதிகம் உணர்ச்சி வசப்பட வைக்கும். அது எதிர்மறை பாதிப்போ , நேர்மறை பாதிப்போ தரலாம் . அது குறிப்பிட்ட கவிதையின் கருத்தை பொறுத்து இருக்கும்.

காவியா எழுந்தாள்.
சிலப்பதிகார காவியத்தில் பாண்டிய மன்னனிடம் நீதி கேட்ட கண்ணகியின் ஆக்ரோஷத்தை காவியா வெளிக்காட்ட ஆரம்பித்தாள்.
***************************************
வணக்கம்..! தோழமைகளே..!



பிரதம மந்திரியே ! இந்திய அரசே..!
இது கோரிக்கையிடும் ஆர்ப்பாட்டம் அல்ல
புது விடுதலையை அறிவிக்கும் மாணவகூட்டம்.. !
-------------------------------
பிரதம மந்திரியே !, பிரதம மந்திரியே !!
மந்திரித்து விட்ட மக்கு மந்திரியே !
எங்கள் மீனவ நண்பனின் கதியை பார் !
உங்கள் ஆணவ ஆட்சியின் சதியை பார்.!

கடல் அன்னையை நம்பி செல்கிறான்
இலங்கை வலையில் சிக்கி திணறுகிறான்
இந்தியதுரோக உலையில் வெந்துமடிகிறான்.
தமிழ் மீனவன் சிங்களவனால் சீண்டப்படுகிறான்.

”இவன் மரணம் .. காரணம் ..உந்தன் துரோகம்”
அந்தாதி செய்யுளாய் அன்றாட செய்தியாகிறது.
உன்னோடு மல்லுக்கட்டி அனுப்பும் கோரிக்கை
மடல்களும் உன் முகத்தில் காறிஉமிழ்கிறது.

செங்கோட்டையில் மங்களமாய்
பறக்கிறது பாரதகொடி
தென்கோடியில் மங்கையிடம்
பறிக்கப்படுகிறது தாலிகொடி
இமயத்தில் குண்டுவெடித்தால்
உனக்கு ஆக்ரோஷம்
குமரியில் மீனவன்
செத்தால் சந்தோஷமோ?

பாரதியும் கட்டப்பொம்மனும்
இன்று இருந்திருந்தால்
உன்னையும் உன்
துரோகத்தையும் பொசுக்கியிருப்பர்.
இங்கே பார்..! எரிமலையினை
கக்கும் மாணவர்களை பார்.!
இந்தியாவிலிருந்து தமிழகத்தை
மீட்கும் படையை பார்..!
------------------------------------
தமிழனை இந்தியனாய் நீ பார்க்கவில்லை
தமிழனின் உணர்வை நீ மதிக்கவில்லை
தமிழ் மீனவனின் நலனை நீ காப்பதில்லை
தமிழக கட்சிகள் துப்பிய ஆதரவில்
நாற்காலியை மட்டும் நக்கிக்கொள்வோயோ?

ஏய் இந்திய நாட்டு
துரோக பிரதமரே...!
இந்தியா, இந்தியன் என
நாங்கள் மார்தட்டி
எங்கள் தலையில்
மண்ணை கொட்டியது போதும்
இந்தியாவின் இறையாண்மையை
பேணியது போதும்
எல்லை மீறிய பொறுமையால்
பொருமியது போதும்.
உன் இறையாண்மை
மலட்டு ஆண்மையென்றே
மாவீரர்கள் நாங்கள்
ஏளனமாய் புரிந்துக்கொண்டோம்.

வந்தே மாதரம் ..!
வந்தே மாதரம்..! என்று
முழங்கிவிட்டு தழிழுணர்வை
முழுங்கியது போதும்..!
உயிர் கொடுத்து பாடிய
தேசிய கீதம் – எங்கள்
தமிழர்களின் உயிரை
எடுத்தது போதும்..!
எங்களின் தேசப்பக்தி
முகத்தில் கொடூர
துரோக அமிலத்தை நீ
துப்பியதும் போதும்!

இந்திய தேசமே..!
நீ எங்கள் தாயா ?
இனியும் நாங்கள்
இந்தியர்களா....?
இனியும் எங்கள்தேசம்
இந்தியாவா ?
துளியும் பற்றுஅற்று
வெறுத்துவிட்டோம்

இது இளித்துக்கொண்டிருக்கும்
அரசியல் பேச்சல்ல
இடி சத்தத்தில் வெடிக்கும்
மாணவனின் வீரமுழக்கம்.
இந்திய தேசத்தின் தெற்கில்
விடுதலை கூப்பாடு ..!
அணுகுண்டாய் வெடித்து
பிறக்கும்பார் தனி நாடு ..!
------------------------------------
வேண்டும் வேண்டும்
தமிழ்நாடு, தனிநாடு!
வெட்டியெடுப்போம்!
வெட்டியெடுப்போம் 1
இந்தியாவிலிருந்து
தமிழகத்தை வெட்டியெடுப்போம்!
ஒன்றுப்படுவோம் !!
ஒன்றுப்படுவோம் ..!!
தமிழர்களே ! ஒன்றுப்பட்டு
குமரிக்கண்டத்தை கண்டு எடுப்போம்

.................

மாணவ நண்பர்களே........!
எம் தமிழ் தேசத்து வீரர்களே..!


அங்கே ஈழத்தில்
உறுமிக்கொண்டிக்கிறான்
ஓரு தன்மான தமிழன்
புலித்தலைவன் பிரபாகரன்.
அவனின் மூத்திரத்தை
கொஞ்சம் குடித்தாவது
மாணவர்களே ! மாண்டுப்போன
தமிழுணர்ச்சியை மீட்டெடுப்போம்..!

................................................................
தமிழக இளைஞர்களே..!


தனிநாடாய் தன்மானம் காப்போம் !
தனி ஈழமாய் இலங்கையை மீட்டெடுப்போம்.!
கரிகாலனின் தலைமையை ஏற்போம்..!
விடுதலை புலிகளாய் புறப்படுவோம் ..!

வாரீர் ..! வாரீர்..! வாரீர்..!
இளம் புலிகளே வாரீர் ..!
அணி திரண்டு வாரீர்..!
நம் படைக்கண்டு
மிரண்டு கொண்டு
ஓடட்டும் எதிரிகள்.
பயமின்றி பயணிக்கட்டும்
மீனவ படகுகள்.

தமிழ்த்தாயே ..!
புது புரட்சி ஒன்று ஆரம்பிக்கிறோம்
புது தேசம் என்று ஆளப்போகிறோம்
விடுதலை கோஷம் ஏந்திய
மாணவ படை நாங்கள்
எரிமலையின் சீற்றத்துடன்
புலி கொடி ஏந்தி நிற்கிறோம்..!

தமிழ்தாயே..! வரம் கொடு ! வீரம் கொடு..!

வெற்றிவேல்...! வீரவேல்....!

*****************************************************


கவிதை கேட்ட மாணவர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டனர். செய்தியாளர்கள் வாயடைத்து ஆச்சரிய கண்களை விரித்தினர். தொலைக்காட்சி கேமரா நிகழ்வுகளை உள்வாங்கிக்கொண்டது. அந்த இடமெங்கும் ஆக்ரோஷம் , கொந்தளிப்பு சூழ்நிலை.

காவியா ஆவேசத்துடன் படித்துகொண்டிருந்த போதே..

உண்ணாவிரத போராட்டம் திசை மாறுகிறது என்று உணர்ந்த உயர் காவல் துறை அதிகாரியிடமிருந்து சில ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. மகளிர் காவல் படை வரவழைக்கட்டனர். போராட்டத்தை கலைக்கும் புகை கக்கும் வண்டி ஆயுத்தமான நிலையில் நிற்க வைக்கப்பட்டன.

மிகப் பெரிய வன்முறையாக மாறப்போகிறதோ ..! மாணவர்களின் மீது தடியடி நடத்துப்படுமா? என்று அங்கிருந்து பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உண்டுப்பண்ணியது.

இந்த போராட்டத்தின் பலன் தனிநாடு தமிழ்நாடாக கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் தினகரன் அல்லது காவியாவின் நிலை என்னவாகும்.? தினகரனின் எழுதுகோல் கேள்விக்குறியோடு அவனின் சட்டைப்பையில்...!
இந்த பரபரப்பான சூழ்நிலையை தினகரனின் மூளையிலுள்ள நோயை அடக்க அவனால் முடியுமா ?


(தொடரும்)

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (22-Mar-14, 5:28 am)
பார்வை : 299

மேலே