ஊமையின் வாழ்வில் விளக்கேற்றியவன்

"பூ வேணுமா....பூ.....பூ.....வேணுமா.......பூ" என்று வளன் மதுரை நகரின் சுட்டெரிக்கும் வெயிலில், அழுக்கான சாலைகளில் கால்களில் செருப்புகள் இன்றி கந்தைத்துணியுடன் நடந்து கொண்டிருந்தான்........


ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தின் முன் வந்த பொது சில சிறுவர்களின் ஆரவாரம் அவனை சுண்டி இழுத்தது.

ஹேய்!ஊமை பொண்ணு! என்று ஒருவன் கத்தினான்.

டேய்!அதுக்க தலைய பாருடா?எண்ண தேச்சு பத்து வருஷம் ஆயிருக்கும்!என்று இன்னொருவன் சொல்ல!

இன்னொருவன் முகத்த பாரு தேவாங்கு மாதிரி...!
என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் செய்து கொண்டிருந்தன.........!

வளன் மெல்ல எட்டிப்பார்த்தான் பத்து, பன்னிரெண்டு வயதிருக்கும் ஒரு சிறுபெண் பரிதபிக்கப்பட்ட காட்சியோடு அந்த ஜன்னலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள், கண்களில் ஏக்கமான பார்வையோடு சோகமும் கலந்திருந்தது.......


வளன் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான், தனது விதவை தாய்க்கு உதவியாய் பூ வியாபாரம் செய்து தங்களது வறுமையை விரட்டி வந்தனர்......


தாய் தொடுத்து வைத்திருக்கும் பூக்களை தெரு தெருவாய் சென்று விற்று பணம் சேமித்து வந்தான் வளன்.....இதில் ரோஜா பூக்களும் அடங்கும்.......!

அந்த சிறுமியின் பக்கத்து பங்களாவில் சென்று பூ.... பூ என்று கத்தினான்...........

அங்கு பருத்த உடலுடன் அழகிய சேலையில் ஒரு நடுத்தர பெண்மணி வந்து 3முழம் மல்லிகைப்பூ வாங்கினாள்.

வளன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்...ஆன்டி!
அடுத்த வீட்டில ஒரு பொண்ணு இருக்குது இவள பற்றி சொல்லுவீங்களா????என்று.

ஏன் தம்பி! அந்த ஊமைப்பெண்ணை பற்றி அப்படி என்ன அக்கறை? அது ஒன்றுக்கும் உதவாது.
அந்த பெண் பிறந்ததும் அவ அம்மா செத்து போச்சி, வளர்த்து வந்த தாத்தாவும் செத்துட்டாங்க, அப்பன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டான்....!


மொத்தத்தில வீட்டை கெடுக்க பிறந்து வந்த மூதேவி என்று படபடவென கொட்டித்தீர்த்தாள்..
இப்பொழுது அவளுடைய சித்தி இவள ஒரு ரூமுல அடச்சி போடுவா வெளியே விடமாட்டா!

அங்கிருந்துதான் அது வெளியே பார்த்துட்டிருக்கும் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.........

அதை கேட்டதும் வளனுக்கு கஷ்டமாக இருந்தது!
மறுநாளில் வளன் நேராக அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்றான்....

அதே ஜன்னல்!அதே முகம்!

தன்னிடம் இருந்த பூக்களிலே மிகவும் அழகான பூவை நீட்டினான்.

அவள் பார்வை அதில் பட்டது மாதிரியே தெரியவில்லை, கவலையோடு இருந்தாள்.

"இந்தா! உனக்குதான்", வாங்கிக்கோ என்று முகத்தின் முன் மேலும்,கீழும் ஆட்டினான்.

அவள் பார்த்தது போலவே இல்லை. இவனுக்கு சற்று ஏமாற்றம்தான் என்றாலும் ரோஜாவை ஜன்னலின் உள்ளே வைத்து விட்டு சென்று விட்டான்.............

அடுத்து வந்த நாட்களிலும் இதே சம்பவம் சில நாட்கள் தொடர்ந்தது.....அவள் கவனிக்கவில்லை என்றாலும் இவன் பூக்கள் வைப்பதை மட்டும் நிறுத்தவில்லை தொடர்ந்தான்.


ஒவ்வொரு நாட்களிலும் கலர் கலராக பூக்கள்!
ஒருனாள் ஆவலாய் வனிடமிருந்து அப்பூவை வாங்கினாள், கண்களில் சோகம் மாறியிருந்தது, முகத்தில் மெலிதாக மகிழ்ச்சி ரேகை படர்ந்திருந்தது.........!


இவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றான்.

மறுநாளில் மகிழ்ச்சியுடன் அவளை பார்க்க சென்றான் அவளை ஜன்னலில் காணவில்லை!

குழம்பி போனான் வளன்.

ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தான், வெறும் இருட்டுதான் அவன் கண்களில் பட்டது.

நேராக அடுத்த வீட்டு ஆன்டியிடம் ஒடினான்........

என்ன ஆன்டி அந்த பொண்ணை இன்று காணோம் என்று படபடப்புடன் கேட்டான்!

"அதுவா?அது நேற்று ராத்திரிதான் செத்துப்போச்சி. நேற்று சாயங்காலம்தான் ஒரு ஓவியப்போட்டியில் சேர்ந்துதாம், முதல் பரிசு கிடச்சிதாம்.

"அழகான ரோஜா பூக்களை இயற்கை காட்சிகளோட வரிந்தாம், அதுக்கு எப்டிதான் அந்த கலை கிடச்சோ தெரில!"என்று சோகமாக சொன்னாள்......!

வளன் அவள் பிரிவை எண்ணி மிகவும் வருந்தினாலும் தன்னால் ஒரு உயிர் சந்தோஷமாய் இவ்வுலகை விட்டு பிரிந்ததை எண்ணி ஆனந்த கண்ணீர் விட்டான்.

"முதல் பரிசு கிடச்ச சந்தோஷத்துல் செத்துபோயிற்றுப்போல" என்று சொன்ன அந்த பணக்கார வீட்டு பெண்ணின் குரல் வளனின் காதில் உரைக்க விழுந்தது.


ஒரு ஊமையின் வாழ்வை அர்த்தமுள்ளதாகவும், சந்தோஷமாகவும் மாற்றியதை எண்ணியபடியே வீடு திரும்பினான் வளன்.

ஊமைக்காயம் அவனால் மாறியது........!

எழுதியவர் : ப்ரியா (22-Mar-14, 3:03 pm)
பார்வை : 283

மேலே