ஓர் எழுத்தாளனின் கதை-14

போலீஸ் அதிகாரி காவியாவை அடித்ததால் வெகுண்ட தினகரன் அந்த அதிகாரியை தாக்க, அது போலீஸ் -மாணவர்கள் மோதலாக உருவெடுக்க காரணமாக அமைந்துவிட்டது.

” ராஸ்கல் போலீஸ்காரன் மேலயே கையை வைக்கிறீயா? “ போலீசார் தங்களின் ஒட்டு மொத்த துறையே அவமானப்படுவதை எப்போதும் விரும்பமாட்டார்கள். அதுவும் தினகரன் போன்ற மிக சாதாரண குடிமகனிடம்..!

ஐந்து ஆறு போலீசார்களின் முரட்டு தடித்த லத்திகள் தினகரனை தாக்க முற்பட்டன. இல்லை இல்லை கொலை செய்ய முற்பட்டன.

முதல் அடி தினகரனின் மீது விழந்தபோதே “ காவி.. தள்ளிப்போ.. நான் சமாளிச்சுக்கிறேன் “ என்று சொல்லியவாறே காவியாவை வேகமாக , படு வேகமாக தள்ளிவிட்டான்.

இன்ஸ்பெக்டர் மேலயே கை வைப்பீயா?

என்ன கவிதை எழுதி பேசினா நீ பெரிய ஹீரோன்னு நினைப்பா?

டெடரரிஸ்ட் கிரிமினல் கேஸ்ல உள்ள போட்டு தொலைச்சிடுவோம்

பி எம் யை தாக்கி பேசுற தையரித்துல எங்க மேல எச்சில் துப்புவீயா ?

என்று பலப்பல போலீஸ் வீரவசனங்கள் போலீசரால் பேசப்படுகிறது. மிரட்டப்படுகிறான் தினகரன். அடிகள் பலமாக விழுகிறது. அடிவிழுந்தாலும் வலியெடுத்து வாய்விட்டு கத்தவில்லை நெஞ்சழுத்தகார தினகரன். கிட்டதட்ட மயக்கநிலைக்கு சென்ற தினகரனை விடாமல் போலீசாரின் லத்தி மேலும் மேலும் தாக்கியது . இதை பார்த்த காவியா கொஞ்சம் கூட பொறுக்கமுடியாமல்,

” நீங்கல்லாம் போலீசா ரவுடிகளா . ஒரு அப்பாவியை இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க .. பொட்டபசங்களா? ” என்று ஆவேசத்துடனும் பயத்துடனும் கத்திக்கொண்டு தினகரனை காப்பாற்ற அவனருகே செல்ல, ஒரு போலீசின் லத்தி பலத்த விசையுடன் தினகரனின் கால் முட்டியை தாக்க வந்தது அதை தடுக்க காவியா தினகரனின் மீது விழ, அந்த நொடி , அந்த அடி அவளின் தலையை பலமாக தாக்கியது. அவளின் பின் தலை தேங்காய் ஓடு கீறல் விழுந்ததை போல உடைந்து இரத்தம் பீறிட்டு வெளியேறி , அடிப்பட்டு மயக்கமாக இருந்த தினகரனின் முகத்தில் பட்டு முத்தமிட்டது.

ஒரு பெண் ஆண் காவலர்களால் பலமாக தாக்கப்பட்டாள் அது பெண்களை வதைப்பது உள்ளீட்ட பல சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்பதால் போலீசார் தாக்குதலை நிறுத்தி , மற்ற மாணவர்களை கூடாமல் கலைத்தனர்.

நடுரோட்டில்... சுற்றிலும் காக்கி சட்டைகள்.. நடுவே சிவப்பு வெள்ளத்தில் காவியா மற்றும் தினகரன்.
அந்த காட்சி...............

உறுமிக்கொண்டிருந்த வெகுளியான புலிக்குட்டி, சூழ்நிலைக்கு ஏற்றவாறு அடங்கிக்கொள்ளாமல் வேடன்களால் தாக்கப்பட்டு, அதன் வீரத்தை தகர்க்கப்பட்டு வெறும் பிண்டமாக மண்ணில் உயிர் ஊசலாடும் சடலமாக கிடக்கையில், புலி மீது காதல் கொண்ட கஸ்தூரி மான் புலியின் கம்பீரத்தை காக்க தன் இன்னுயிரை துச்சமாக எண்ணி அடிப்பட்டு வீழ்ந்த சரிந்து பின்னர், புலியின் மார்பில் மான் மயங்கி கிடந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இந்த காட்சி..!

சற்று நேரத்திற்கு முன் வீரமாக எழுச்சியாக பேசிய இருவரும், அடிப்பட்ட நாய்களாக.. மனிதமுள்ள மனிதர்களின் வேடிக்கை பார்வையில் காட்சி பிம்பமாக..., டி.வி நாடகங்கங்களை பார்த்தே சமுதாய அக்கறையில் உச் கொட்டும் வீரமங்கைகள் விளம்பர இடைவேளையில் வீட்டிலிருந்து எட்டிப்பார்த்து “ பாவம் மனசாட்சி இல்லாம அடிக்கிறானுங்க “ என்று தங்கள் மனசாட்சி சாம்பிளாக காட்டி செல்கிறார்கள்.

“ஓ பாசிட்டிவ்” ரத்தமும் “ஓ நெகிட்டிவ்” ரத்தமும் சாலையில் உறவாடி காதல் கொண்ட நேரத்தில்,
மாவட்ட ஆட்சியர் அங்கு விரைந்து வந்து பார்வையிடுகிறார். மாவட்ட ஆட்சியர் ஒரு பெண். பெயர் கிறிஸ்டி சபாஸ்டின் .
காவல் துறை கண்காணிப்பாளரை நோக்கி “ நீங்க இப்படி நாய்களை அடிக்கிற மாதிரி அடிச்க ஆர்டர் கொடுத்து இருக்கீங்களே..? ஸ்டூண்ட்ஸ்ட்ன்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா.. அதுவும் அந்த பொண்ணையும் அடிச்சு இருக்கீங்க,, ரெண்டு பேரையும் மட்டும் ஏய்ம் பண்ணி தாக்குதல் நடத்தின மாதிரி தெரியுது. இத நான் சும்மா விடமாட்டேன். “ என்று பலமாக எச்சரித்து இருவரையும் மருத்துவமனையில் உடனடியாக சேர்த்து சிகிச்சை அளிக்க உத்திரவு இடுகிறார்.

(((எப்போதும் மாவட்ட ஆட்சியாளர் (IAS)- காவல்துறை கண்காணிப்பாளர் (IPS) என்ற இருதுறையில் இருக்கும் அதிகாரிகள் கெளரவ போரில் இருப்பார்கள். தனக்கே எல்லா அதிகாரம் இருப்பது போன்று மமதையில் இருப்பார்கள். அவர்களின் பதவி அப்படி. அரசாங்க நிர்வாக சீர்கேட்டிற்கு இப்படிப்பட்ட முரண்படும் அதிகாரிகளும் ஒரு காரணம் )))

சட்டத்தின் மனசாட்சிப்படி தினகரன் - காவியா இருவரையும் தூக்கி செல்ல வந்தது அவரச ஊர்தி.

அதுவே அமரர் ஊர்தியாக இருவருக்கும் ?????????

----------------------------------------------------------------------------

ஒரு சில எழுத்தாளர்கள் விளம்பரத்தனமான புகழுக்கு தன்னை பச்சோந்தி பரம்பரையாக உருமாற்றி எழுதுகோலில் அவ்வப்போது மையின் தன்மையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். சிலரில் சில எழுத்தாளர்கள் மட்டும் தங்களை எதற்கும் வளைத்தும் , மற்றவர்களின் முன்பு நெளிந்தும் கொள்ளாமல் தன்னையும் தன் எழுதுகோலையும் நிலை நிறுத்திக்கொண்டு தன் சிந்தனையும் பெருமைப்படுத்த உயிரை துச்சமாக எண்ணி உடலிருந்து உயிரை எச்சமாக துப்பியும் விடுவார்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் யார் என்ற கேள்விக்கு தான்.. விடை தெரியாமல்....................... விடை தேடி பயணிக்கிறது ..........................................


ஓர் எழுத்தாளனின் கதை முடிக்கப்பட்டது,

இந்த கதையில் சொல்லப்பட்ட பல சம்பவங்கள் கற்பனையே...!! சில சம்பவங்களை தவிர..!

நன்றி..........!!!


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (4-Apr-14, 11:17 am)
பார்வை : 223

மேலே