விதியின் விளையாட்டு15

மதன் மருத்துவமனை வாசலுக்கு சென்றதும் அவன் அருகில் அவனை வரவேற்பதை போன்று ஒரு போலிச் அதிகாரி வந்தார்..

மதனுக்கு மனதிற்குள் கவலை என்ன நடக்குமோ? என்ற கேள்விக்குறியில் அவருடன் உள்ளே சென்றான்?????

உள்ளே செல்ல செல்ல மதனுக்கு பயமாக இருந்தது, நண்பன் கூடவே இருந்ததால் சற்று தைரியத்துடன் சென்றான்.......

அங்கு தனி ரூமில் அட்மிட் செய்யப்பட்டிருந்த நிஷாவை பார்த்ததும் அதிர்ந்தான் மதன்!!!!!

அவள் மயக்கநிலையில் வாயில் ட்யுப், கையில் என்றும் நிறைய குழாய்கள் போன்று இவன் கண்களுக்கு தெரிந்தது அப்படியே நிலை குலைந்துதான் போனான்.

அந்த பொண்ணு மயக்க நிலையிலிருக்கிறாள், அவளின் பெற்றொர் உன் மேல் கம்பிளைன்ட் கொடுத்திருக்கிறார்கள் அவள் நார்மல் நிலைக்கு வந்த பிறகுதான் விசாரணை நடத்த முடியும் அதுவரை வெளியூருக்கெல்லாம் செல்லக்கூடாது நாங்கள் கூப்பிட்டதும் வரவேண்டும் என்று போலிச் அதிகாரி கட்டளையுடன் சொல்லிவிட்டு நகர்ந்தார்......!



அதை கேட்டதும் மதனுக்கு கண்களில் நீர் ததும்பியது.

பதில் பேசாமல் தலை அசைத்துவிட்டு உட்கார்ந்தான்.....எந்த தவறும் செய்யாத எனக்கு தண்டனையா? கடவுளே என்று தன் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டான்....

மறுபடியும் நிஷாவை ஒருமுறை பார்த்துவிட்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினர்.......!

வீட்டிற்கு வந்த மதன் சோகமாக இருக்க அவனது தங்கை ஒடி வந்து "அண்ணா ஒரு குட் நியூஸ்"என்று அவனருகில் வந்து உட்கார்ந்தாள்.

என்ன அண்ணா எனக்கு வேலைதரகூடாதுன்னு நீயே அண்ணிக்கிட்ட போய் பேசிட்ட போல,,,,,,,
என்று நக்கலடித்தாள்......

என்ன அண்ணா நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கேன் பதிலே சொல்ல மாட்டேங்குறா? என்ன ஆச்சி என்றாள்????

ஒன்றுமில்லை எனக்கு லைட்டா தலைவலியாக இருக்கிறது என்று சமாளித்தான்....!

சரி!சரி!இப்பொழுது உன் தலைவலியெல்லாம் காணாம போயிரும் என்றவள் அவன் செல்போனை அவனிடம் நீட்டினாள்.

செல்போன் எடுக்காமல் போய்ட்டேன்! என்று சொல்லி தன் பாக்கெட்டில் போட்டான்....!

ஹலோ! என்ன பாக்கெட்டில் போடவா அதை தந்தேன் செல்போனை ஓபன் பண்ணி பாரு என்று சொல்லி சிரித்தாள்.............

திறந்து பார்த்தான் மதன் ! ரிஷானியிடமிருந்து 17 கால்ஸ் மற்றும் 32 தகவல்கள் வந்திருந்தன.....!

ஓபன் பண்ணி பார்த்தான் முதல் மெசேஜ்-"என்னங்க ஏதாவது ப்ராப்ளமா? ஏன் பேசமாட்டேங்குரிங்க" இப்டி நிறைய மெசேஜ் கொடுத்திருந்தாள்.....!

அவள் கால் பண்ணியதும் மெசேஜ் அனுப்பியதும் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் நிஷாவின் நினைவுகள் அலைமோதியது இவன் மனக்கடலில்...........


ரிஷானியின் தோழி என்னடி மதன் கால் அட்டன்ட் பண்ணலியா? சரி அப்புறம் பேசலாம் நீ கவலைப்படாதே என்றவள்.......எப்போது நீ மதனிடம் காதலை சொன்னாய் எனக்கு தெரியாமல் என்று கேட்டாள்.......!


தன் அக்காவிடம் நடந்த உரையாடல்களை சொல்ல ஆரம்பித்தாள்................

நேற்று ஏன் அக்காவிடம் மதனை பற்றி அனைத்து விஷயங்களையும் சொன்னேன்!

அப்படியா?என்று அதிர்ந்து கேட்டாள் தோழி!

ஆம்! அனைத்தையும் கேட்டவள் முதலில் எதுவும் சொல்லவில்லை இறுதியில் மற்றவர்கள் சொன்னதை தவறாக புரிந்து மதன் மேல் புத்தகத்தை எறிந்து விட்டு வந்தேன் அதன் பிறகுதான் உண்மை தெரிந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று அக்காவிடம் முடிவு கேட்டேன்.......!

அதற்கு அவள் கோவத்தில் என்னை திட்டி ஒரு நல்ல பையனை இப்படியா அவமானப்படுத்துவது என்று சொல்லி அடிக்கவும் செய்தாள்.....

என் மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது உடனே மதனுக்கு கால் பண்ணி நான் உன்னை காதலிக்கிறேன் எனக்கு முழு சம்மதம் என்று சொல்லிவிட்டு அவன் பதிலையும் எதிர்பார்க்காமல் கட் பண்ணிட்டேன்.


அதன் பிறகு இன்னும் அவனிடம் பேசவில்லை என்று சொல்லி முடித்தாள் ரிஷானி!

அனைத்தையும் ஒரு சிலை போல் கேட்டுக்கொண்டிருந்தாள் ரிஷானியின் தோழி...!

அப்பொழுது ரிஷானி ரிஷானி என்று கீழிருந்து குரல் கேட்க இருவரும் கீழே சென்றார்கள்.................???.....!





விதி தொடரும்.......

எழுதியவர் : ப்ரியா (4-Apr-14, 1:01 pm)
பார்வை : 267

மேலே