வாக்களிப்பது நமது கடமை

தோழர்களே... இன்னும் சிறிது நாட்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது என்பதை நாம் அறிவோம்...

வாக்களித்தல் என்பது நம் பாரதம் நமக்கு அளித்த உரிமை . அதை முறையாக பயன்படுத்துவது நம் தலையாய கடமை .

" நான் சுயமாக உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன் ! அரசின் உதவி எனக்கு என்றுமே தேவையில்லை ! அப்படி இருக்கையில் நான் ஏன் வாக்களிக்கவேண்டும்? ". என்று இருந்திடாமல் அல்லது அவ்வாறு எண்ணும் நண்பர்கள் உடனிருப்பின் அவர்களிடம் வாக்களிப்பதற்கான அவசியத்தைக் கூறி வாக்களியச் செய்யுங்கள். ஏனென்றால், நாம் உபயோகப்படுத்தும் கைக்குட்டையில் இருந்து செயற்கை கோள்கள் வரை அனைத்திலும் அரசியல் மற்றும் அரசாங்கத்தின் பங்கு இன்றியமையாததாகும் .ஆகவே, திறமையான ஒரு
அரசாங்கம் அமைவதற்கு நாம் வாக்களிப்பது அவசியம் .

மேலும், இந்த முறை தேர்தலாணையம் வாக்களித்தலை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிடுவதால், பணிக்கு செல்வதற்கு முன்னமே சீக்கிரமாக சென்று வாக்களித்து விடலாம் . ஆகவே நேரம் இல்லை என்று வாக்களிக்க தவறாதீர்கள் .

மேலும், இந்தமுறை நோட்டா என்ற புதியமுறை உருவாக்கப்பட்டுள்ளது . இது, அரசியலில் சற்றும் விருப்பமில்லாமல், "யாருக்கு வாக்களிக்க வேண்டும் ?" என்ற குழப்பத்தில் இருப்பவர்களையும் வாக்களிக்க வைத்து 100% வாக்குப்பதிவைப் பெறுவதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. ஆகவே, அரசியலில் ஆர்வம் உடையவர்கள், தெளிவான முடிவை எடுக்க கூடியவர்களெல்லாம் நோட்டாவைப் பயன்படுத்தாமல் திறமையான ஒரு வேட்பாளருக்கு வாக்களியுங்கள் .

நல்ல அரசாங்கம் அமைவதற்குக் கண்டிப்பாக வாக்களியுங்கள் ...! ஜெய்ஹிந்த்!!!

எழுதியவர் : மு. ஜீவராஜ் (16-Apr-14, 6:34 pm)
பார்வை : 11163

சிறந்த கட்டுரைகள்

மேலே