பிறருடுத்த மாசுணியுந் தீண்டார் - ஆசாரக் கோவை 12

இது இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

தலையுரைத்த எண்ணெயா லெவ்வுறுப்புந்
...தீண்டார்
பிறருடுத்த மாசுணியுந் தீண்டார் செருப்புக்
குறையெனினுங் கொள்ளா ரிரந்து. 12 ஆசாரக் கோவை

பொருளுரை:

தலையில் தேய்த்த எண்ணெயினால் தனது வேறோர் உறுப்பும் தீண்டக் கூடாது.

பிறர் உடுத்த அழுக்காடையும் உடுத்தக் கூடாது.

பிறர் இரந்து தமக்குக் காரியமென்று வேண்டிக் கொண்டாலும், பிறர் அணிந்த செருப்புக்களையும் நம் காலில் அணிந்து கொள்ளக் கூடாது.

கருத்துரை:

தலையில் தேய்த்த எண்ணெயை வழித்து மற்ற உறுப்புக்களில் பூசுவது, அடுத்தவர் ஆடையை அணிவது மற்றும் மற்றவர் உபயோகித்த செருப்புகளையும் அணிவது ஆரோக்கியக் கெடுதலாகும். நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-14, 3:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 82

சிறந்த கட்டுரைகள்

மேலே