நீர்நிலைகளில் நீராடும் பொழுது செய்யக் கூடாதவை - ஆசாரக் கோவை 14

நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தா ருமியார் திளையார் விளையாடார்
காய்ந்த தெனினுந் தலையொழிந் தாடாரே
ஆய்ந்த அறிவி னவர். 14 ஆசாரக் கோவை

பொருளுரை:

நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றி நடப்பவர் நீர்நிலைகளில் நீராடும் பொழுது ஒரு நாளும் நீந்த மாட்டார்; நீரில் எச்சிலை உமிழ மாட்டார்;

நீர்நிலையில் அமிழ்ந்து திளைத்து, விளையாட மாட்டார்;

ஆராய்ந்த அறிவுடையவர் எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் தலை காய்ந்திருந்தாலும், தலையில் நீர்படாமல் கழுத்தளவு மட்டும் அமிழ்ந்து குளிக்கமாட்டார்.

கருத்துரை: குளம், ஆறு முதலியவற்றில் நீராடும்பொழுது நீந்துதல், எச்சில் உமிழ்தல் முதலிய அருவருக்கத்தக்க செயல்களைச் செய்யக் கூடாது. தலையை நனைக்காமல் கழுத்து வரை குளிக்கலாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-14, 8:20 pm)
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே