ரயில்

அன்று ஒரு வேலை விசயமாக நான் சென்னை கிளம்பினேன், அதற்காக ரயில் ஏற சென்றேன் . கொல்கத்தா ரயில் சந்திப்பில் அன்று பலத்த கூட்டம் காணப்பட்டது , ஒவ்வொருவரும் தன் இரண்டு கைகளிலும் பெட்டிகளை பிடித்து கொண்டு வேகவேகமாக அந்த நெருக்கடியில் நடந்து சென்றார்கள் .சிலர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களுடன் பைப்பில் முட்டிமோதி கொண்டிருந்தார்கள் . அந்த நெருக்கடியில் ஒரு தமிழ் குரல் ஒலித்தது ." அம்மா யாராவது கொஞ்சம் தருமம் பன்னுகளேன் ,கால் இல்லாத நொண்டிம்மா"நான் அந்த சத்தம் கேட்ட பக்கம் திரும்பி பார்த்தேன் . பல பீடி விளம்பர தாள்கள் ஒட்டிஇருந்த சுவரில் சாயுந்துஇருந்தன். அவனுடைய இரண்டுஊன்று கோலையும் பான் எச்சில் படிந்த சுவரில் சாய்த்து வைத்துஇருந்தான்.அவனுக்கு இரண்டு கால்களும் முட்டிவரை துண்டிக்கபட்டுஇருந்தது . அதில் வெள்ளை துணி சுற்றிருந்தன் ,அந்த துணியை விட்டு ரத்தம் சிறிது வெளியே கசிந்துஇருந்தது . அதை பார்த்த எனக்கு அவ்வளவாக பரிதாபம் ஏற்படவில்லை ,இது போன்று சென்னையில் நிறைய உண்டு ,ஆனால் அதை பற்றி அவர்களிடம் விசாரிப்பதில் எனக்கு ஒருவித ஆர்வம் உண்டு. நான் என்னை அவனிடம் காட்டி கொள்ளவில்லை , என் என்றால்அவன் தமிழன் என்னிடம் உதவி கேட்டால் ? நானே நாய்போல் ஊரூராக சுற்றி சம்பாதிக்க வேண்டும் இதில் நான் எங்கு அவனுக்கு உதவி செய்வது .இதல்லாம் நடக்குரகாரியமா ? இருந்தாலும் அவனை அந்த இடத்தில் விட்டுவர எனக்கு மனமில்லை .அவனிடம் பேச்சு கொடுக்கலாம் என்று வாயை திறந்தேன் ,அப்போது ஹிந்தியில் கண்ணியமான பெண்க்குரல் கேட்டது ரயில் இரண்டு மணிநேரம் தாமதமாம், உடனே ரூமுக்கு போய்விடலாம் என்று யோசித்தேன் ,பிறகு மெல்ல அவனருகே சென்றேன் அவன் என்னை உற்று கவனித்தான் .உன் பேரு என்னவேன்று மட்டும்தான் கேட்டேன் , அதற்கு அவன் ,"அய்யா என்பேரு காசிலிங்கம், எதாவது உதவி பன்னுகய்யா ,இத்தனை நாளாய் இங்க ஒரு தமிழ் ஆளுக்குட வரலைய்யா ,நீங்களாவது எனக்கு எங்க ஊருக்கு போக டிக்கெட் வாங்கிதாங்கய்யா " அவன் பேசிக்கொண்டே இருந்தான் ஆனால் எ பார்வையும் மனதும் அவன் காலை சுற்றி இருக்கும் ஈக்களை போலவே அவன் காலை சுற்றி வந்தன.அவன் எனமுகதின்முன் கை அசைத்துகாட்டி அவன் பக்கம் என் கவனத்தை திருப்பினான் ."உங்களுக்கு எப்டி இந்த்கால் போச்சு " என்று கேட்டேன் .எவ்வளவுதான் கடுபடுதினாலும் என் கண்கள் அவன் கால்களையே நோக்கின ."அய்யா நான் மட்டும் இங்க வரலைய்யா என்னோட என் தம்பியும் வந்தான்"எதற்க்காக இங்க வந்திங்க என்று நான் கேட்பதற்குள் ,"நான் பொறந்ததே வெனய்யா வென ,எல்லாரும் வெளிநாட்டுக்கு பொய் சம்பாதிகுராங்கனு நானும் என் தம்பியும் ஒரு ஏஜென்சி முலமா பணத்த கட்டுனோம் ,அவனும் எங்கள சென்னைக்கு கூட்டிவந்தான் .ஒரு ரயிலுல ஏத்திவிட்டு இதுல போய் கொல்கட்டால ஏறங்குக எங்களுங்க உங்கள சிங்கப்பூருக்கு அனுப்புங்கனு சொன்னான் .அத நம்பி ரயில்ல ஏறுனோம் .இங்க வந்து இறங்கினா ஒருத்தனையும் காணோம் ,அப்படியே பெட்டிபடுக்கயோட வெளியே வந்து நானும் என் தம்பியும் ஒரு ஆட்டோ புடிச்சோம் ,சென்னைல அந்தாளு கொடுத்த விலாசத்த வச்சு அந்த எடத்துக்கு போன அது பொய் விலாசம். வந்த ஆட்டோல திரும்பி ரயிலுக்கு போய்டலாம்னு போனா எங்க பின்னாடியே எமன் பல்ல காட்டிகிட்டு வந்துருக்கான் சாமி ,ஆட்டோ பஸ்ல மோதி என் தம்பி அந்த எடதுலையே இறந்துட்டான்யா ,அப்புறம் பர்தா ஒரு நாத்தம் புடிச்ச ஆசுபுதிரில கால் இல்லாம நான் கிடந்தேன் .என் தம்பி எங்கனு கேட்டேன் அதுக்கு அவங்க சொன்னதும் மொழி தெரியாம புரியலையா ,அப்பதான் என் தலையுல உரைச்சது ,சொந்த ஊர்ல ராஜா மாறி வாழ்றதாவுட்டு காசுக்கு ஆசைப்பட்டு வந்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ,அன்னைகிருந்து ஊருக்கு போக காசுஇல்லாம ஒரு வராம பிச்சை எடுத்து காசு சேத்துக்கிட்டு இருக்கன். நீங்கதான் எதாவது உதவி செய்யணும் அய்யா ,எங்க ஊர்ல நாங்க சிங்கபூர்ல இருக்காத நெனச்சிக்கிட்டு இருபாங்க , வாங்க முன்னாடி இப்டி கால் இல்லாம போய் நிக்க வெக்கமா இருக்கு ,ஆனா போகாம இருந்தா இங்க அனாத பொணமா கிடப்பன் சாமி .உங்கள பார்தப்ரம் தன் இப்ப நம்பிக்கைய இருக்கன் ,டிக்கெட் எடுத்துகுடுபிங்கலய்யா"அப்போது மீண்டும் கண்ணியமான பெண் குரல் கேட்டது சென்னை ரயில் இன்னும் சற்று நேரத்தில் புறபடபோவதாக, அதை கேட்டதும் என் மனச்சாட்சி என்னும் அறைலிருந்து சட்டென்று வெளியே குதித்தேன் .என் அப்பா ஆசுபுதிரியில் இருபது ஞாபகம் வந்தது ,அவன் தன் பொருள்களை மூட்டைகட்டும்போது அவனுக்கு தெரியாமல் ரயிலில் ஏறிவிட்டேன்

எழுதியவர் : (18-Apr-14, 12:55 pm)
சேர்த்தது : ambiraja
Tanglish : rail
பார்வை : 188

மேலே