விரிவடையும் பகலின் விருப்பம் - எண்ணப்பகிரல் 4

இந்த மின்னோட்டமானது கண்களுக்குப் புலப்படுவதில்லை..ஆனால் அதன் ஓட்டம் செவிக்கு சிலவேளைகளில் கேட்கக்கூடியது.அதன் இயக்கங்கள் உணரக்கூடியது.அதன் துடிப்பு நிகழக்கூடியது..என்றாலும் இதன் பங்கு பெரிதாக நினைவில் கொள்ளப்படுவதில்லை அது அணையும்வரை ….....இயக்கமற்றுப்போன உயிரைப் போலவும்....எந்த மனிதனுக்கும் அவனது திறமையும் அதற்குண்டான பெயருமே இறுதியில் அடையாளமாகப் பதியப்படுகின்றது இந்த மின்னோட்டம் போலவும் …....

ஒரு பகலை திறமையாகச் செய்வதன் முழுமுதற்ப்பொறுப்பும் சூரியனை மட்டுமே சார்ந்தது . அப்படியா ..?!பிற எந்தப் பொறுப்புகளுக்கும் அந்த வாய்ப்பு தாரைவார்க்கப்படவில்லையா என்றால் நமட்டுச் சிரிப்புக்குள் அடங்கிவிடுகிறது இதற்கான பதில் மட்டும்....

எந்தப் பௌர்ணமி பகலில் தோன்றுகிறது....அதுவும் உள்ளங்கைகளோடு நிறைந்துவிடுகிறதோ...?!காண்பதெல்லாம் வெறும் காட்சிகளாகவே இருந்துவிட்டால் மாற்றுவழிகளுக்கு வழியே இல்லாமல் போயிருக்கும்...எந்தக்கவிஞரும் அவர் எழுத நினைத்த கவிதையை எழுதமுடிவதே இல்லை..எழுதமுடியாமலும் போகலாம்..
ஒரு திட உணர்வைச் சுமந்துகொண்டே பயணித்தேன் விழாவிற்கு முந்தய நாட்களில்....ஏன் இது ?ஆம் நமது எழுத்துக்களுக்கு நமது அங்கீகாரம் கிடைப்பதே அரிது..அதிலும் பிறரின் அங்கீகாரம் கிடைத்தலரித்து...ஒரு விருது என்பது மூத்த அங்கீகாரம் அல்லவா.சற்று கவனம் தப்பும் . பிறகு நிலையாகிப்போகும் முன்னதைவிடவும் …..

"தமிழன்பன் 80 விருதுகள் "

கவியரங்கம் பொறிகிளப்பிக் கொண்டிருந்த சமயம் , திரு . அகன் அவர்கள் மேடையில் ... எண்பது நபர்களின் தெரிவின் சாரம் அவர் கூறிய சில வரிகளில் விளங்கிற்று …... பல்வேறு தளங்களிலும் , துறைகளிலும் தங்களின் திறமைகளைக் கொண்டு கோலூன்றியிருக்கும் திறமைசாலிகளைக் கண்டெடுப்பதன் சுலபம் பார்க்க எளிமை ..ஆராயக் கடினம் …...

ஏன் இந்த இடைநிற்றல் என்று கேட்க வேண்டுமே ..கேட்பதற்குள் பதில் கிடைப்பது கூட எளிமையாகத் தான் தோன்றுமல்லவா.காத்திருக்கலாம் சில வினாடிகள் …...

எழுத்துத் தளத்திலிருந்து தமிழன்பன் 80 விருது"களுக்காக””.....

திரு. ராஜேஷ்குமார் (இணையதள தமிழ்ச் சேவைக்காக )
திரு.காளியப்பன் எசேக்கியல்
திரு. பொள்ளாச்சி அபி
திரு .கிரிகாசன்
திரு.ரமேஷாலம்
திரு.ஜோசப் ஜூலியஸ்
திரு.சிந்தா மத்தார்
திரு .பிரேமா பிரபா
திரு.சரவணா
திரு.ரொஷான் ஏ ஜிப்ரி
திரு.கன்னியப்பன்
திரு.வா.நேரு
திரு.கவிஜி
திரு.ஹரிஹர நாராயணன்
திரு.அஹமது அலி
திரு.நிலா சூரியன்
திரு.கலைஞானகுமார்
திருமதி.ஹூஜ்ஜா
திரு.வினோத்கண்ணன்
திரு.தேவா
திரு.தமிழ்தாசன்
திரு.புலமி

தமிழகத்திலும் புதுவையிலுமாகச் சேர்த்து மொத்தம் எண்பது நபர்களுக்குள் கவியரங்கப்பட்டாசுகளும் அடக்கம்..இன்னும் புகை கிளம்பிக்கொண்டுதான் இருக்கின்றது...

விழாவிற்குள் தனிச்சிறப்பு ஒன்று அல்ல பலவுண்டு...திரு .அகன் அவர்கள் இருவரை மட்டும் அழைத்து , "தமிழன்பன் 80 விருது " கிடைக்கச் செய்தது தனியொரு மேடை...திரும்பினோம் அவரின் குரல் எதிரொலித்த திசையை நோக்கி....யார் அவர்கள் ?இயல்பு தானே....இதோ அவர்கள் …

செல்வி . முத்துநாடன் (கைவினைக் கலைஞர் )
செல்வி . கமலா (அரசு ஊழியர் )

அடுத்தடுத்து வந்துவிழும் வார்த்தைகளோடு கவனம் எல்லாமும் அவ்விருவரையும் ஊன்றிக்கவனித்தபடியிருந்தது....ஒருவர் கைவினைக் கலைஞர் , மற்றொருவர் அரசுப்பணியில் இருப்பவர்..இதன் பொருள் வாசிக்ககூடியது மட்டுமல்ல …..அவ்விருவரின் திறமைகளும் அங்கீகரிக்கபடுதலின் பொருட்டு விருதுகள் அளிக்கப்படுகையில் அதைக் காணும்போது மட்டுமே திறமைக்கான மதிப்பு எவ்வளவு உயர்ந்தது , அரியது என்று புரியவரும்....ஒரு எண்ணம் கூட விரிவடைகின்றது ...எத்தனையோ திறமைசாலிகள் காணாமல் போன கதைகளும் உண்டு.....கேட்டிருப்போம் ஆனால் அதன் பொருளை ஏறிட்டுப்பார்க்கும் உந்துதல் , இல்லாமல் கூட போகலாம்.....இதோ விருதினைப் பெற்ற கைகளில் புன்னகைப் பூக்கள் மனமொடு . அது பூக்கக் காத்திருந்த பூக்களாகவும் இருந்திருக்கலாம் அதுவரையிலும் …....எமது விழிகளிலும் …..

ஆனால் ஒன்று கூறவேண்டும் ….நண்பர்கள் ஒன்றுசேர்ந்தால் அந்த இடம் என்னவாகிப் போகும்...மீண்டும் கவியரங்கம் தொடர்ந்த நிலையில் ரசனைக்குள் எவ்வளவு தான் மூழ்கிப் போனாலும் அப்படியும் இப்படியுமாக முகம் பார்த்துக்கொண்டு சிரிப்பதும் , சில விதங்களில் சிரிப்பூட்டிக்கொள்வதும் தேவையானதாகத் தானே இருக்கவேண்டும்.....இல்லை தேவை என்பதைவிட அதனைத் தோழிகளின் மொழி என்று கூறலாம்...

நட்பின் வேரானது ஒன்றாக இருந்த போதும் அதன் கிளைகள் பலவுண்டு ...எந்தக் கிளைகளுக்கும் அளவு உண்டு …....தனிப்பண்பு உண்டு ...நட்பிற்கு பலமுகங்களும் உண்டு ...அதன் அழகுகளும் தனியே...தோழியிடம் , தோழனிடம் , தாயிடம் , தந்தையிடம் , சகோதரியிடம் , சகோதரனிடம் , மனைவியிடம் , கணவனிடம் ,காதலியிடம்...இந்தப் பட்டியல் இதே போல் நீளும் ….. எல்லா உறவுகளிடமும் ஒரே மாதிரி முகம் காட்டுவது போல் இந்த நட்பு தன்னைக் காட்டிக்கொள்வதாக இருந்தாலும் , அதன் அளவுகளும் முகங்களும் குறிப்பிட்டபடியே தன்னை வரையறுத்துகொள்ளும் . அது அவசியமாகவும் இருந்துவிடுகின்றது எதார்த்தமாகவே. . ஒரு மனிதர் எல்லாரிடமும் நட்பைப் பகிர்வதில் அழகாகத் தன்னைச் செதுக்கிகொண்டவர் இதனமைந்தபடி....இவரின் நட்பு வெகு எதார்த்தமானது....அனைவரிடமும் நட்பு பாராட்டுதல் அனைவருக்கும் வாய்ப்பதே இல்லை....வாய்த்தவரின் நட்பு அலாதியானது...அபி சார் , அது என்னவாக இருக்கும் ?, அபி சார் அவர் வரலையா ? அபிசார் …..அடடே எங்கே ஆளைக் காணோம் ?இப்படித்தான் சென்ற முறையும் , நண்பர்களோடே இருக்கும்படியாகத் தான் இருப்பார் . திரும்பிப் பார்ப்பதற்குள் சுற்றிலும் தேட வேண்டும் …..அதோ அவர் ..எப்போது சென்றார் ?ஒரு மேடையை அலங்கரித்தல் போலானது விழாவினை ஒழுங்குபடுத்துதலும் …..தனக்கான விழா இது ..எந்தக் குறையும் வந்துவிடக்கூடாது என்பதன் ஈக்கள் ஆய்ந்து கொண்டே இருப்பதில் மனிதர் ஓடிக்கொண்டே இருப்பார்....முகம் முழுக்க எந்த பரபரப்பும் ஓடாது …....ஆனாலும் எங்குதான் பதுங்கிக்கொள்ளுமோ அது.....வந்தமர்கையில் ஒரு புன்னகை மட்டும் ...பதிலுக்கு புன்னகைக்க வேண்டுமல்லவா ...பிறகு என்ன …...?ஆம் இதே புன்னகைதான் …..

அடுத்தொரு பரபரப்பில் அடங்கிப்போனது பசியின் தாக்கம் ..குட்டிக் குட்டிக் கதைகள்...விழாவின் நிகழ்வுகளை காணொளிப்படமாகச் சேகரித்துக் கொண்டிருந்த கைகளுக்கு மீண்டும் வேலை கொடுத்தேன்...இப்போது ஒரு ஆவல் மேடைச் சௌகரியத்தை எழுதி எழுதி அழித்துக்கொண்டிருந்தது கைகளுக்கான விருந்தில்...நமது தளத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட கவிஞர்கள் , ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு திரு . தமிழன்பன் அய்யா அவர்களின் எழுதித் தீராக் கைகளின் மூலம் " தமிழன்பன் 80 விருதுகள் " வழங்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம் ...எப்படித் தீரும் இனி இந்தத் தாகம் ?!காணொளி மூலம் கண்டுகொண்டே இருந்தபொழுது எனக்கான அழைப்பும் வர விரைந்தேன் மேடையை நோக்கி....அய்யா தமிழன்பன் அவர்களின் ஆசியோடு விருதினைப் பெற்றுவிட்டுத் திரும்பும் போது எனக்குள் ஒரு கேள்வி தன்னைப் பலப்படுத்திக்கொண்டிருந்தது ...எழுத்தின் அடுத்த பரிணாமம் எப்படி இருக்க வேண்டும்....?ஆம் எப்படி ?! நில்லாத ஓடலையும் , முடிவில்லாத தேடலையும் எதைக்கொண்டுதான் பிணைத்துக் கட்டிவைப்பது …...அதுவும் தேடவேண்டியதாகவே இருக்கின்றது ….

இந்தப் பௌர்ணமியின் ஒளியில் திளைப்பது சுவைதானே ...விரு(ந்)தின் சுவையும் அதுவாகத் தானே இருந்தது....அந்த ஒளிப் பரவலில் நிறைந்திருப்பது இங்கேயும் காணக்கூடும் …....

வந்துவிட்டார் ….தனது இருக்கையில் அமர்ந்துவிட்டுத் திரும்பிக் கையை நீட்டி ஒரு தண்ணீர் பாட்டிலை தந்துவிட்டு மீண்டும் அதே புன்னகையுடன் அபி சார் ...பசிநேரம் புரிந்தே இருக்கவேண்டும் அவருக்கு …...கூடவே எங்களின் புலம்பல்களும் ….உங்களுக்கும் கேட்க வேண்டுமே இது....இப்பசி கூர்பார்த்துவிடும் காதுகளை …...காலையில் எங்களுக்களித்த சிற்றுண்டிப் பையில் இருந்த ரொட்டிப் பாக்கெட்டுகளை பிரித்துப் பசியாறிக்கொண்டே தொடர்ந்தோம் விழாவினை.....அகரனிடமும் தாரகையிடமும் தண்ணீர்பாட்டிலைப் பகிர்ந்து கொண்ட பொழுதில் திரும்பிப் பார்க்கிறேன் முன் இருக்கை காலி....

இந்த கண்களுக்கான விருந்துபற்றி வாய் திறக்கவில்லையா ?…..இன்னும் விழா முடியவில்லையே …...பகிரவேண்டிய விவரங்கள் கூடுதலாகவும் இருக்கவிருப்பது அலங்கரிக்கப்படுவதற்கில்லை எண்ணங்களாக விரிவடைவது …...

விழாவினைச் செய்தி மூலம் காண வந்தவர் பற்றிக் கூறவேண்டுமே.ஒரு அழைப்பு அலைப்பேசிக்கு ...நமது நண்பர் கே.எஸ்.கலை . விழாவின் எதிரொலிப்பு அரங்கு முழுவதும் . விழா பற்றிய ஆவலுடன் பேசியவர் ஒரு செய்தியினை எமக்குத் தந்தார்.அது பொறுப்பும் கூட..நமது நண்பர் சரவணா அவர்களுக்காக விருதினைப் பெற்றுக்கொள்ள வந்த ஒரு தோழி (சரவணாவின் முன்னாள் மாணவி )பற்றியது....அவரை எங்களோடு அமர்த்திக்கொள்ளும்படியாகக் கூறினார் கலை....பிறகென்ன எப்படியோ தேடித் பிடித்து கொண்டுவந்தாயிற்று அந்தத் தோழியை அரங்கிலிருந்து எங்களது பக்கத்திற்கு......

வாருங்கள் . சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்களின் அணிவகுப்பு கடந்து ...
வணக்கம் சொல்லலாமே "வணக்கம் வள்ளுவ"வின் வணக்கங்களின் குவிப்பு உங்கள் முன்னதாக....

இறுதிவரையிலும் நிரம்பிக் கிடந்த காத்திருப்புக்களின் கையிருப்புகள் யாவும் எந்தக் கணத்திலும் கரையாதபோது , மேடையையும் அரங்கையும் தன்வசமாக்க விழா நாயகன் முன்வந்த நேரத்தில் தம்மைச் செலவழிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது...இந்தக் கையிருப்புகள் என்னவாக இருக்கும் ?...வேறென்ன பேசாத மௌனங்களின் எழுத்துக்களாகத் தான் இருக்கும் ...அரங்கின் ஒவ்வொரு பக்கங்களும் இப்படியாகத் தான் எழுதித் தீர்க்கப்பட்டது...என் முன்னே ஒருவர் (தெரியாத முகம் ) மேடைப்பேச்சுக்களுக்கு வடிவம் தந்துகொண்டே அரங்கை மறந்திருந்தது நினைவில் இன்னமும்..... அவரின் குறிப்புகள் கூட விரிவில் அடக்கவியலாது போயிருக்கும்....மனக் கண்களிலும் கூட..விரியக் காத்திருக்கிறது மீண்டும் .....

செங்காத்து வீசக் காத்திருந்த நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்தோம் …..ஒரு கூடு எங்களை அழைக்கவிருப்பதும் , சிலரின் முகத்திரைகள் கழற்றவிருக்கும் தருணங்களும் ஒருசேரக் காத்திருந்தது அந்த மேடை.....

(இன்னமும் உண்டு …..........அபி சார் கூட மீண்டும் வந்துவிட்டார்....)

எழுதியவர் : புலமி (18-Apr-14, 3:47 pm)
பார்வை : 98

சிறந்த கட்டுரைகள்

மேலே