விதியின் விளையாட்டு22

ரிஷானியும் மதனும் சேர்ந்திருப்பதை ஷிவானியும் மனோஜும் பார்த்ததும் சமாளிப்போம் என்று மெல்ல சொல்லிவிட்டு எழுந்தாள் ரிஷானி........

ஷிவானி பக்கத்தில் போய் அத்தான் எப்டி இருக்கீங்க என்று மனோஜை வினவினாள்?

ம்.........நான் நல்லா இருக்கேன் என்று சொல்லிவிட்டு அவனும் நலம் விசாரித்துவிட்டு மதன நோக்கினான்.

அத்தான் இது மதன் என் துறைதான் என்று சொல்லி அவனையும் அறிமுகப்படுத்தினாள்.......!

ஹலோ சார் என்று வணக்கம் வைத்துக்கொண்டான்.

மனோஜுக்கு எல்லாம் புரிந்தும் புரியாதவனாய் பேசிக்கொண்டான்.

மழை மெல்ல நிற்க மறுபடியும் நால்வரும் அமர்ந்து டீ குடித்து விட்டு கிளம்பினர்.

வீட்டிற்கு வந்தது ஷிவானி ரிஷானியிடம் என்னடி இப்டி பண்ணிட்டா அவங்க என்ன நினைச்சிருப்பாங்க என்று கடிந்தாள்....!

இல்லை அக்கா அவங்க வேலைக்கு போகப்போறாங்க வெளிமாநிலம் அதைப்பற்றி நேரில் சொல்லத்தான் வந்தாங்க மன்னிச்சிக்கோ அக்கா அத்தான் ஒன்றும் நினைக்கமாட்டாங்க??
என்று ஐஸ் வைத்தாள்........

சரி!சரி விடு என் திருமணம் முடிந்த பிறகு பேசலாம் அதுவரைக்கும் கவனமா இரு என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே செல்போன் அடிக்க அவளிடமிருந்து விலகினாள் ஷிவானி.....

தப்பிச்சோம்டா சாமி!!! என்று மனதிற்குள் நினைத்தவள் செல்லை எடுத்து மதனுக்கு ஒன்றிரண்டு மெசேஜ் அனுப்பிவிட்டு கட்டிலில் சரிந்தாள்.........!

அம்மா அப்பாவை இன்னும் காணவில்லை அழைப்புக்கொடுத்துப்பார் என்று சொல்லிவிட்டு மறுபடியும் உள்ளே வந்தாள் ஷிவானி......
________________________________________________

ஷிவானியின் அப்பா அம்மாவைப்பார்த்ததும் அந்த ஜோசியர் உள்ளே வந்து எதோ பேச நினைத்தவர் கூட 2புது முகங்கள் இருக்கவே.......

என்ன இந்த பக்கம் என்ன விசேஷம் என்று கேட்டார்?

எல்லாம் நல்ல விஷயம்தான் ஐயா நம்ம ஷிவானிக்கும் இந்தமாதம் இறுதியில் திருமணம் வைத்துள்ளோம் அதற்குதான் பத்திரிகை வாங்க வந்தோம் என்று பதளித்தார் ஷிவானியின் அப்பா..

அதற்குள் அம்மா இடைமறித்து பத்திரிகை வந்த பிறகு உங்களை பத்திரிக்கையுடன் வந்து பார்க்கலாம் என்றுதான் இருந்தோம் என்றார்....

நம்ம பெரியப்பொண் ஷிவானிக்கா திருமணம் என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்டார் ஜோசியர்.

ஆமா! என்று பதிலளித்தவர் இதுதான் என் சம்மந்தி பையன் கல்லூரி விரிவுரையாளராக பணிபுரிகிறான் நல்ல பையன் நல்ல குடும்பம் என்று புகழ்ந்தார்........!

அதற்கு இவர் எந்த பதிலும் பேசாமல் என்னை வந்து பாருங்க என்று சொல்லிவிட்டு கோவமாக அந்த இடத்தை விட்டு கிளம்பினார்...........




விதி தொடரும்........

எழுதியவர் : ப்ரியா (19-Apr-14, 10:56 am)
பார்வை : 301

மேலே