புதுசு

தூரத்தில் யாரோ
துருவிப் பார்ப்பதாய்
ஆறாம் புலன்
சொல்லியது

சரிவாய் நின்று
தொட்டுப் பார்த்ததும்
சரியாய்ச் சரிந்தான்
மேனியில்

கஞ்சிவாசம் கூட
போகாத
புத்தம் புதிய சட்டை

உண்மையில் எனக்குப்
பிடித்தது
வேண்டும் வேண்டும் என்று
உள் மனது சொல்லியது

முதல் பார்வையிலேயே
விரும்பியது
எனக்குக் கூட சங்கடம்தான்

வெட்கத்தை விட்டுக்
கேட்டால் என்ன?
கேட்கவே வேண்டாம்
சட்டையைக் கழற்றுவோம்
யார் என்ன சொல்ல.

ஒவ்வொரு பொத்தானையும்
மெதுவாகக்
கழற்ற ஆரம்பித்தேன்
யாரும் தடுக்கவில்லை

பின்னால் இருந்து யாரோ
தோளில்
தட்டியது விளங்கியது

பணிப்பெண் கேட்டு
சுற்றித் தந்தாள்
அண்ணாவுக்கு வாங்கிய
சட்டையை

புடவைக்கடையில் ஆண்
பொம்மைக்கு
இன்னொரு சட்டை
மாற்றப்பட்டது
இன்னொரு தங்கையை
எதிர்பார்த்து

எழுதியவர் : மது மதி (21-Apr-14, 6:50 pm)
Tanglish : puthusu
பார்வை : 171

மேலே