அகன் அவர்கள் தேர்ந்தெடுத்த -சிறப்புக் கவிதை 4 -காதல் தேன் வெண்பாக்கள் -ஆதிநாடா-விமர்சனம்

இன்னும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுகிறது..... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இன்னும் ஒரு முறை காதலிக்கத் தோன்றுகிறது.....

"காதல் காதல் காதல்...... போயின்....... சாதல் சாதல் சாதல்...."

"அது................... சொல்லாமல்........ ஏங்க ஏங்க.......... அழுகை வந்தது...........................எந்தன் காதல் சொல்லும் போது சொல்லாமல் வந்த அழுகை நின்றது......"

"வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா.................. வந்து தழுவுது பார்......"

காதல்.........ம்ம்ம்ம்ம்............

கவிதைக்குள் நுழைந்து வெளி வராமலே போகும் காதலுக்குள்..... அவள்....
அவளுக்குள் நான்....
எங்களுக்குள் காதல்...
காதலுக்குள் கவிதை......என்று கவிஞர்...... காதலை கவிதையாக்கி இருக்கிறார்..... அவரை காதலோடு வியக்கிறேன்......அவர் வரிகளில் வியந்து தேடுவது காதலி என்ற காதலைத்தான்.....

தேனீ கொட்டினாலும், வானம் முட்டினாலும், மது பானம் திகட்டினாலும், புது கானம் கட்டினாலும் காதல் தோன்றும்....காதலே தோன்றும்....

அவள் சிரிப்பில் காட்சி மாறும், கவனம் மாறும், கதைகள் மாறும்.....காதல் தேன், கவிதையில் சொட்டும், கவிதையே தேனாய் கொட்டும்.

விண்மீன் விழி பிளக்கும்...வீதி உலவும் வெண்ணிலவும் கன்னக் குழி சிரிக்கும்.... மலராய்...இதழாய்...மை விழி சிரிக்க, மங்கை அவள் முகம் திறந்தால், தீ சுடினும் சூரியனின் முகம் சிரிக்கும்....பார் முழுக்க அவளாய் தெரியும்...அவளாய் தெரிந்தால்....அகல் விளக்காய் விரியும் என்று வரியில் ஜோதி ஏற்றுகிறார் கவிஞர்...

குலப் பெருமை தாங்கிய பூந்தோட்டம் காவல் இருக்கும் இத்தனை அழகான பெண்ணை காதலிக்காமல் இருப்பதே பாவம் என்றே கவிஞர் எனக்கு சொல்வதாக நினைக்கிறேன்..... ஆக, காதலி-யாக, அவள் காத்துக் கொண்டு இருக்கும் போது.... அழகை ஆராதிக்கும் நான் காதலிப்பதில் என்ன குற்றம் இருந்து விட முடியும் .. என்று கவிதைக்குள் ஒரு காணமுடியாத காதலனை உலவ விட்டிருப்பது காதலின் வலிமையாக கவிஞர் சொல்வதாக தோன்றுகிறது........

ஜாடை சொல்லி வண்டு அழைக்கும் வாடைக் காற்றின் புது சொல், பெண்ணவள் அன்பு ....மேடை போட்டுக் கொண்டாடும் புதுக் கவிதையின் மரபு சொல், பெண்ணவள் பண்பு..........போதை போதியாக, போதி போதையாகும் புது மலரின் புது அர்த்தம், தேடி திரியும் தேன் கூட்டின் ஒவ்வொரு கண்ணிலும் வா வா என்றே விரியுது...காட்சி...... வந்துண் என்றே உருகுது சாட்சி....

வஞ்சியவள் தஞ்சம் புகும் பார்வையில் வரிகள், மின்னல் விதைக்கிறது....ஒரு பார்வை, சிறு விளக்கம் புரிந்த மனதுக்குள், கவிதை பெண்மை புதைக்கிறது....

மலராகி, பூவிதழாகி, அழகாகி, குலப் பொருளாகி, இருளாகி, ஒளி சுருளாகி, முகிலாகி, விண் ஒளியாகி, பா ஆனாய்.........புது தேனானாய்....

வெண்பாக்கள்.... பெண்- கண் -கள் என்பது சிந்தனை.... அது கவிதையாகி உடைவதுதான் வஞ்சி இளமானின் புன்னகை.....

கவிதை விதைத்த கவிஞர்..... படிப்பவர் மனதில் இலை மறை காயாய் காதலையும் விதைப்பதுதான் கவிதையின் ஆன்மாவின் தூரத்து வேதியியல். ஏறி இறங்கி.....இறங்கி ஏறி.... வளைந்து நேராகி, நேராகி வளைந்து, வசப்படும் வார்த்தைகளில் வஞ்சியவள் முகம் சிவக்கிறாள்.... சிவப்பினில் எழுதுகிறார் கவிஞர், தேன் சொட்டும் நொடிகளை.......... கவிதையில் படிக்கிறோம், வான் முட்டும் முகில்களை....

மொத்தத்தில் பெண்மை... இனிக்கிறது....அவர் பேனாவைப் போலவே.....

எழுதியவர் : கவிஜி (21-Apr-14, 9:17 pm)
பார்வை : 184

சிறந்த கட்டுரைகள்

மேலே