சிறுகதையின் தொடர்கதை

வாழ்க்கை என்பது வலிகள் நிறைந்ததே
அதில் வழி தேடி அலைவது வாடிக்கை
ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்தே
இருந்தாலும் ஏனோ பலருக்கு இந்த உலக
வாழ்க்கை ஏமாற்றத்தையே தருகின்றது
வாழ்வோம் போராடி முடிந்தவரையல்ல
நாம் முடியும்வரை என்ற முன்னுரையோடு ,,,,

..."" சிறுகதையின் தொடர்கதை ""...

தாத்தனின் பிள்ளைகள் ஏழு
ஆறாவதாய் பிறந்திட்டதால்
இன்னும் ஆறாத காயத்துடன்
அன்றாடமொரு போராட்டம்
ஆயிரம் ஆசைகலோடுதான்
அவளும் பூமியில் பிறந்தால்
அக்கினியாய் தகிக்கும் என்றே
அறியாதுபோன வாழ்க்கையில்
துள்ளி திறந்திருந்த காலத்தில்
சோகமில்லை கூடியே வாழ்ந்த
அந்த சிறிய கூட்டு குடும்பத்தில்
சீமாட்டியாகவேதான் வளர்ந்தால்
எதிர்வரும் துறந்தம் அறியாமலே
சந்தோசத்தோடு அவள் காதோரம்
தோழிகள் செல்லமாய் கேலிபேச
சிரிப்பினில் சிறைபட்டு நாணியே
வெக்கத்தில் தன் முகம் சிவந்தால்
சிக்கனம் செய்யவில்லை தத்தன்
தன் பாச மகளின் நெஞ்சம் குளிர
ஊரார் வியக்கவே என் தாதனவன்
சிறப்பாய் சீர் வரிசைகளோடுதான்
தன் மகள் கரம்பிடித்து கொடுத்தான்
கனவுகளோடும் கவலையோடும்
கைபிடித்தவனை பின் தொடர்ந்து
அன்னையில்லாம் விட்டு அண்டை
இல்லத்தில் அரசியாய் குடியேற
குதூகலத்தோடு கடந்தது காலம்
திசை மாறிய தென்றல் மீண்டும்
புயலாய் வருமென்று தெரியாதே
கல்யானமாலை ஏனோ அவளுக்கு
மனம்பெறவில்லை ஆண்டுகள்
மூன்று குழந்தைகள் இரண்டும்
சுருங்கிப்போனது வாழ்க்கை
காத்திருக்கிறாள் இன்றளவும்
பிள்ளைகளின் பிள்ளைகளோடு
தன் பெயருக்கு முன்னாலுள்ள
பெயரின் சொந்தக்காரனுக்காய்
தொடரும் சிறுகதை மற்றுமொரு
பாகத்தில் உங்களை வருடவரும்,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன். (23-Apr-14, 1:46 pm)
பார்வை : 137

மேலே