சிறப்புக் கவிதை 9-வழிக்கதவின் முன்பாக - பொள்ளாச்சி அபி

நமது சமூகத்தில் இருக்கப்படாதவர் இருக்கும் வரை இருக்கப்பட்டவர் பாவப்பட்டவரே என்பதன் மையக் கருத்தில் சுழல்கின்றது கவிதை...மானுடம் என்பது ஒன்றே.இன்று இல்லாதவர் நாளை இல்லாமலே போகும் வீதிகள் ஏராளம் ...கொடுப்பதற்கு கைகளுண்டு ..எடுப்பதற்கு மனமில்லை.பழக்கப்படாத ஒன்றாகப் பழகிப்போய்விட்டதாய் சீரமைத்துக்கொண்டிருக்கின்றது இயன்றதைக் கொடுக்கும் குணமும் ....மாறிக்கொண்டேவருவது காலம் மட்டுமா ?! மனித இயல்புகளுமே..தொடர்ந்து பிறரது தவறுகளை மட்டுமே உடைத்துப் பார்க்கின்ற ஆவலுக்கு தனக்கான இடம் எங்கென்று தெரியாமல் போய்விடுகின்றது...

ஒரு சமூக அக்கறையின் தோன்றலாக எந்தப் பகட்டுகளும் இருக்கமுடிவதில்லை ..இருப்பதும் சாத்தியமில்லை...இன்றைய நாகரீகம் கதவினை மூடிக்கொண்டு இருப்பவர் தாமே இருக்கிறோமா இல்லையா என்றபடி போய்க்கொண்டிருக்க கவிஞர் . அபி தனது வீட்டின் முன்பாக வாகனங்களை நிறுத்துவதையும் இடையூறாக எண்ணியிருப்பது , அவர்தம் வழிக்கதவுகளின் காத்திருப்பு பற்றி உணர்த்திப் போகின்றது .....

வண்ணங்களே அல்லாத வாழ்க்கையில், வயிற்றுக்கான வண்ணங்களையாவது ஒருவேளையேனும் கண்டுவிடமாட்டோமா என அன்றாடம் அல்லல்படுவோர் மத்தியில் ,

கறுப்பு,நீலம்,சிவப்பென
பல வண்ணங்களில்
உங்கள்
இருசக்கர,நான்கு சக்கர
வாகனங்கள்,
மனிதர்கள் நுழையமுடியாதபடி
நின்று கொண்டேயிருக்கின்றன.

என்பதன் மூலம் ஒரு சமூக அவலத்தைத் துடுப்பாக போட்டிருப்பது காரியப் படகிற்கு வீரியமூட்டுவதாக உள்ளது.....

மூடிவிட்ட கதவுகளனைத்தும் சுவராகவே காட்சிப்படுத்திக்கொண்டிருப்பதில் ஏதோ ஒரு கதவின் வழியே மட்டும் வெளிச்சம் கசிந்துகொண்டே இருப்பது வாழ்வின் அடுத்தகட்ட ஓட்டத்திற்கான திறப்பல்லவா ....அது வரவேற்பும் கூட... அதனையும் அடைத்துவிடும்படியாக தெரியாமல் வீசுகின்ற பலத்த காற்றும் இடையூறே என்றபோது முரண்பாடுகள் கோபத்தினைத் தூண்டும்படியாகவே இருக்கும்...
.
உங்களை எச்சரிப்பதற்காக
அறிவிப்பு பலகை வைத்தும்
பொருட்படுத்தும் அறிவென்பது
உமக்கில்லை..!

காற்றைப் போலவும் தெரியாமல் தவறிழைத்தல் இல்லை இங்கனம் பலர்...இதோ எச்சரிக்கைப் பலகை மூலம் ஓர் எச்சரிக்கையினை வலுத்துக் காட்டியிருக்கின்றது கவிஞர் . அபியின் மேற்குறிப்பிட்ட வரிகள்....

ஏதோ என்றில்லாமல் ஏன் என்று கேட்டுக்கொள்ளப்படுவதில், கொஞ்சமேனும் அர்த்தப்படுவதில் ஆதங்கப்படுகின்றது "வழிக்கதவின் முன்பாக " காத்திருக்கும் மனிதம் .....

எழுதியவர் : புலமி (23-Apr-14, 4:11 pm)
பார்வை : 78

மேலே