விழியோரம்

மோகனுக்கு அன்றய விடியல் அற்புதமாக இருந்தது. சேவல் கோவும் முன்னே எழுந்து சேவலுக்கு குட் மார்னிங் சொன்னான். மனதில் எதோ உற்சாகத்துடன் எழுந்து வாசலுக்கு ஓடினான். வேலிக்கருவைக் கம்பில் செய்த தட்டியை திறந்து கொண்டு ஒரு தூக்கு வாளியையும் சொக்கையும் எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் கிணற்றை நோக்கி வேகமாக எடுப்பான நடையில் சென்றான்.
என்னடா... இன்னிக்கு சீக்கிரம் எழுந்திருசிடே ! என்ற குரல் கேட்க , குரல் கேட்ட பக்கம் நோக்கி பார்வை சென்றது . அங்கே பாலு பல் துலக்கிகொண்டே ஆட்ச்சர்யத்தில் முகத்தில் கொமாளிசிரிப்பை வெளிக்கட்டிக்கொண்டு நின்றான். அவனை பார்த்தவன் பென்னோக்கி பார்த்துக்கொண்டே ஆமாடா... நான் காலேச் கவுன்சிலிங்க்கு போறேன் என்று சொல்லிக்கொண்டே பாலுவின் பார்வையில் இருந்து மறைந்தான்.
வழக்கமாக ஒருமணிநேரம் குளிப்பவன் அன்று காக்காய் குளியலுடன் திரும்பி ஓடி வந்துவிட்டான். அவன் வருவதற்குள்ளேயே அம்மா சமையலை அசத்திவிட்டு தானும் ரெடியாக தயாரானாள்.
அதற்குள் மோகன் என்னமா... இன்னும் கிளம்பாம இருக்க... சீக்கிரம் கிளம்பு பஸு போயிடும், அப்புறம் இதை விட்டா 8மனிக்குதான் பஸ் இருக்கு...
அடே... இருடா... பரத்தாம , சாப்பாடு ரெடிபண்ண வேணாமா என சொல்லிகொண்டே பெரிய வாளியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு குளிக்க தயாரானாள்.
ஆடுக்கு குலை வெட்டச்சென்ற மோகனின் தாத்தா வந்தார். யம்மா.. கொஞ்சம் நீரார் தண்ணி கொடும்மா...இன்னு சொல்லிகொண்டே ஆடுகளுக்கு கொலையை பிரித்து போட்டார். குளிக்கச்சென்ற செல்லம்மா வீடிற்குள் வந்து ஈயபதிரத்தில் இருந்த பழைய சொற்றை திறந்து தண்ணீரை சொம்பில் நிரப்பி கொஞ்சம் உப்பு சேர்த்து கையேலே விரலால் கலக்கினாள். பிறகு செம்பின் வாய்பகுதியை தன கைவிரலால் கவ்விக்கொண்டு இந்தாப்பா... நான் கேளம்பனும்னு சொல்லிக்கொண்டே குளிக்கச்சென்றாள்.
அதற்குள் கிளம்பி நின்றான் மோகன் சற்று முன்னே தொங்கலான முடியை கோரிக்கொண்டு. முகத்தில் பவுடர் சற்று எடுப்பாகவே இருந்தது. நல்ல வெள்ளை கட்டம்போட்ட சட்டை சிப்பு வாய்த்த பேண்டு சற்று தரையை கூட்டும் அளவிற்கு அகலமான கால்பகுதி தொடையெல் நல்ல இறுக்கம் . இதை கவனித்துக்கொண்டு மிச்சறைக்கொரிதுக்கொண்தேருந்த கமலா அண்ணே வாச்ச மறந்துட்டேன்னு குரல் கொடுத்தாள். அதையும் எடுத்து கட்டிக்கொண்டான். செல்லம்மா போன பொங்கலுக்கு எடுத்த பூப்போட்ட சில்க் சேலையை சுத்திக்கொண்டு , அப்பா வீட்டை பாத்துக்குங்க... என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
பாருந்து நிற்க்குமிடம் மோகன் வீ ட்டில் இருந்து நான்கு வேடு தால்லி இருக்கிறது. இருவரும் வீட்டின் வெளியே வந்து அதிகாளைசூரியனை வரவேற்கும்படி நடந்து சென்றனர்.
வாசலில் பூத்த பக்கத்துக்கு வீடு பெண்கள் இருவரும் செல்வதை எலனபார்வையுடன் கோலம்போட்டுக்கொண்டே நோட்டமிட்டனர். குமரன்பேருந்து வரும் சப்தம் கேட்க்க மெதுவாக தன்னையே கவனித்துக்கொண்டு நடந்த இருவரும் சற்று வகமாக நடக்க ஆரம்பித்தார்கள். வழக்கம்பூல் வரும் குமரன் பேருந்து அன்று புதிதாக தெரிந்தது மோகனுக்கு. புயலாக வந்த குமரன் பேருந்து மோகனின் கைநீட்டளை பார்த்து சற்று பதுங்கியே வந்து நின்றது. பஸ்ஸில் எறிய இருவரும் நடுசீட்டில் சென்று அமர்ந்தனர். அண்ணே .... காரைக்குடிக்கு ரெண்டு டிக்கெட் கொடுங்க ..இன்னு நூறு ரூபாய் நோட்டை எடுத்து neettinaal.
ஏம்மா... சில்லறை இல்லியா..? காலைஎலே சில்லறைக்கு எங்கே போறது என்று முனகிக்கொண்டே டிக்கெட்டின் பின்புறம் எதோ கிறுக்கி அதை மோகனிடம் நீட்டினார்.
விர்ர்ர்ர்... ரென்று சென்ற பஸ் ஒருமநிநேரதுக்குள் காரைக்குடி சென்றது. பஸ்ஸைவிட்டு இறங்கிய மோகன் புதிதாக பார்த்த காரைக்குடியை பேந்த பேந்த ன்னு முளிதுக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். அவனது கண்களுக்கு எடுப்பான போஸ்டர்களும் மினுக்கான மனிதர்களும் ஸ்கேன் செய்ய நினைத்தது. திடீரென்று யாபகம் வந்தவனாய் டிக்கேடிற்கு சில்லறை வாங்க ஓடினான். கண்டக்டரும் டிக்கெட்டை வாங்கி பார்த்துவிட்டு தோளில் தொங்கிய அழுக்கு கலர் பையில் இருந்து சில்லறையை இரண்டு மூன்று தடவை என்னிபார்துவிட்டு கொடுத்தார். மோகனும் சிலரையை வாங்கி எண்ணிக்கொண்டே வந்தவன் அவன் அம்மாவின் பக்கத்தில் நின்றான். கல்லூரி பேருந்து வந்ததும் முன் வாசல் வழியாக ஏறிவிட்டால் செல்லம்மாள். மகளிர் பேருந்து என்று அறியாமல் பின்வாசல் வழியாக ஏறினான் மோகன். உள்ள இருப்பவர் அனைவரும் பெண்கள். முளிதுக்கொண்டே சுற்றி பார்வையை சுழலவிட்டான். தம்பி இது மகளிர் பஸ் என்றுஒரு பெண் ஒலி எழுப்ப இலக்கென குதித்துவிட்டான். அம்மாவையும் இறங்க ஒள்ளலாம்மென முன்னாடி பார்த்தான். அதற்குள் பஸ் நகர்ந்தது. அம்மா... என்று கத்தினான்.கூட்டத்தில் கதிவிலாத செல்லம்மா பஸ்ஸில் பயனப்பட்டாள். மோகனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒன்றும் புரியவில்லை. மோகனிடம் சொள்ளமள்ளே அவன் கண்ணீர்த்துளிகள் அவன் கண்களை எட்டிப்பார்த்தது. அவனின் மண்டைக்குள் ஒரே ஒரு நொடி நுரான்கள் தன் வேலையை செய்ய மருத்தது. கைகளில் லாசன நடுக்கம் அந்த நடுக்கம் துணைக்கு காலையும் பற்றிக்கொண்டது. அருகில் நிற்பவரை பார்த்தான் அடுத்த காலச் பஸ் எப்பவரும் என்று காத்க்கலாம் என வாயைதிரந்தான். சார்...பஸ்..காலேச் ..என்று உளறினான். வார்த்தைகளும் கருத்தும் பின்னிக்கொண்டது. ஒரு வழியாக தன்னை திடப்படுத்திக்கொண்டு அவரிடம் கேட்டான். இருப்பா... இப்ப வந்திடும் என சொல்ல சிரிதுனாரம் தன்னை தாற்றியபடி மொபை போனில் உள்ள தனது கல்லூரியில் படிக்கும் நண்பனுடைய நம்பரை டயல் செய்தான்.
டேய்... ரமேஷ் எங்கம்மா பஸ் மாறி ஏறி பொயெட்டங்கடா ... உங்க காலேச்க்கு தான் வருவாங்க கொஞ்சம் தேடி பார்த்து சொல்லுடான்னு அலைபாசியில் பதிவு செய்தான் தன் நண்பனிடம். தம்பி இதுதாம்பா காலேச் பஸ்சினு பக்கத்தில் நின்றவர் சொல்ல பஸ்ஸில் பதட்டத்துடன் ஏறி அமர்ந்தான். மனதிற்குள் அம்மவி பற்றிய மனபதட்டம். மனம் ஆயிரம் கதை சொன்னது சிந்தனை முடியும் முன்னரே கல்லூரி ஸ்டாப் வந்தது. ஆர்வத்தில் வேற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இறங்கினான். எதிரே நண்பன் சிரித்த படி நின்றான் அருகில் மோகன் அம்மாவுடன். மகிழ்ச்சியில் கடைக்கண் கசிந்தது. அப்பொழுதுதான் அவன் உடல் உறுப்புகள் இயல்பு நிலைக்கு வந்ததது. மோகன் எப்புடிட இருக்கே... என கேட்க்க வந்த விஷத்தை சொல்லி முடித்தான்.பிறகு கல்லூரிக்கு இரண்டு மணிநேரம் தாமதமானதால் மோகன் நினைத்த கோர்ஸ்அவனுக்கு கிடைக்கவில்லை. பிறகு கிடைத்த கொர்சைய தார்வு செய்து கொண்டான். ஆம் அது அவனுக்கு ஒன்றும் புதிதில்லை. சிறு வயதிலிருந்தே அவன் நினைத்த எதுவும் அவனுக்கு கிடைத்ததில்லை. திரும்ப கிடைத்த அம்மாவை தவிர... இந்த கோர்ஸ் மட்டும் விதி விளக்க என்ன ? மிக்க நன்றி அவனை படைத்த கடவுளுக்கு துன்பம் தங்க பலத்த இதயமாவது கொடுத்தானே ....

எழுதியவர் : மா.காளிதாஸ் (29-Apr-14, 3:46 pm)
Tanglish : vizhiyoram
பார்வை : 429

மேலே