அவள் எனக்கு வேண்டும்-9

“ம்.. என்ன தாத்தா?”, என்றான்.

“அதான் உங்க மாமனார்கிட்ட” என்றார்.

திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க சிவாவின் தாயும், தந்தையும்
வந்து விட, திருமண பத்திரிகையை காண்பித்ததும், சிவாவின் அம்மா சிவாவின் தாத்தாவை பார்க்க

“புரிகிறது அம்மா.. உன் சந்தேகம்.. நீ சிவாவுக்கு எல்லாம் இருந்தும் ஏனோ அவன் திருமணத்தை தடுத்துக்கொண்டே வருவதாக கூறியதை.. நான் தான் உன் அண்ணனிடம் கூறினேன்

அவன் மிகவும் வேதனை பட்டான். நாம் விட்ட சாபம் கூட நம் தங்கையின் வாழ்க்கையை சோதிக்கிறதோ என்று மனம் வருந்தினான்.

அதன் பிறகு தான் அவனை இங்கு வரவழைத்து எப்படியாவது திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க நினைத்தோம். இது உன் கணவனுக்கும் தெரியும் அம்மா”, என்றார்.

"ஆனால் சிவா இங்கு வந்தவுடன் கோமதியை பார்த்து தன் மனதை கொடுத்தது பற்றி உன் மாமியாரிடம் தெரிவிக்க.. எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாகி விட்டது”

“ஆனால் சொந்தம் என்றால் அவனுக்கு” என்று சிவாவின் அம்மா இழுக்க‌..

“விடம்மா.. திருமணம் முடிந்தவுடன் பேசிக்கொள்வோம்”, என்றார்.

அதற்குள் சிவா வந்து விட, “அம்மா” என்று அம்மாவிடம் ஒட்டிக்கொண்டான்.

அப்பா வந்து, “என்னப்பா! புது மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க?”, என்றார்.

“ஓ டாடி! ஐயம் பைன்”

"என் மகனின் பிரம்மச்சரிய கன‌வை கலைத்த அந்த ராணி யாரோ”,
என்றார்.

அவன் முகம் சிவக்க,

அனைவரும் ஒரு பெருமூச்சோடு உள்ளே சென்றனர்.

என்ன நடக்கப் போகிறதோ என்ற கலக்கத்தோடு திருமணத்தின் முதல் நாள் அனைவரும் மண்டபத்தில் காத்திருக்க, அன்று நிச்சயதார்த்தமும், மறு நாள் திருமணமும் நடக்க ஏற்பாடு.

கோமதியின் வீட்டில் அனைவரும் வந்து விட, கோமதியின் அப்பா தன்
தங்கையையும், நண்பனையும் பார்த்து அப்படியே நிற்க, அப்பா சுதாரித்துக் கொண்டு,

“ம் சிவா! நீ போய் சாப்பாடு எல்லாம் ரெடியான்னு பார்த்து வா”, என்றார்.

அவனும் சென்றுவிட, சிவாவின் அம்மா, கோமதியின் அப்பாவை நோக்கி
ஓடினாள்.

“அண்ணா! என்னை மன்னித்துவிடு” என்று கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க அழுதாள்.

சிவாவின் அப்பா வந்து, மனைவியின் கதறலை பார்க்க முடியாமல்
மௌனமாக‌ நின்றார்.

“எழுந்திரிம்மா! அதெல்லாம் மறந்துட்டேன். இப்போ திருமணம் முடியும்
வரை மாப்பிள்ளையின் காதுக்கும்.. கோமதியின் காதுக்கும்.. இது எட்டக் கூடாது”, என்று பேசிக்கொண்டனர்.

பாலிய சினேகிதர்கள் இரண்டு பேரும் இப்போ சம்மந்தியாயிற்றே..
அவர்கள் ஒன்றாக பவனி வந்தனர். நிச்சயதார்த்த மோதிரத்தை கோமதியின்
கையில் அணிவித்தான் சிவா.

அவளின் முகத்தில் கலக்கம் அதிகமாகியது.

“என்ன..!” என்று பார்வையாலேயே பேசினான்.

அவள் ஒன்றும் சொல்லாதது கண்டு கிட்ட வந்தான்.

அதற்குள் சிவாவின் அம்மா வந்துவிட அவன் அங்கிருந்து சென்றுவிட, அவள் கோமதியிடம் “ஏன்மா கலக்கமா இருக்க” என்று கேட்டாள்.

“ஒ ஒன்னும் இல்லேம்மா.. ரொம்ப பயமா இருக்கு", என்றாள்.

"ம் கோமதி! நான் உனக்கு அத்தை", என்றாள்.

"நீ பயப்படாதேம்மா! உன்னை அவன் நல்லா பார்த்துப்பான்.. திருமணமே
வேண்டாம் என்றவன் உன்னைப் பார்த்ததும் பிடித்துப் போய்தானே சம்மதிச்சிருக்கான்" என்றாள்.

அவள் முகம் நாணத்தில் சிவந்தது.

மனதில் கொஞ்சம் பயம் விட்டாலும்... எதோ மனது நெருடிக்கொண்டே
இருந்தது.

யாரும் பார்க்காத நேரத்தில் அவள் பக்கம் வந்தான்.
சட்டென அந்த இடத்தை விட்டு நகரச்சென்றவளை பிடித்து நிறுத்தினான்.

“என்ன சட்டெனச் சொல்... உன் முக வாட்டம் என்னை ஏதோ செய்கிறது”, என்றான்.

எப்போதும் அவள் மனதினை படிப்பவன்.. இன்று ஏனோ அவளில் கரைந்து
போனான்.

திருமணம் பயம்மா இருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டான்.

(தொடரும்)

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (1-May-14, 4:15 pm)
பார்வை : 521

மேலே