நூற்றுக்கு நூறு வாங்க

வெளிநாட்டு நாளிதழ்களில் வந்த விளம்பரம்:

அன்புப் பெற்றோர்களே மாணவர்களே,
நம் நாட்டில் படித்தால் கணிதப் பாடத்தில் மட்டும் தான் ஒரு சிலர் 100/100 மதிப்பெண் பெற முடிகிறது. வேறு பாடங்களில் இது கடினமாக உள்ளது. கனவாக்வும் போகிறது. கீழை நாடு ஒன்றில் கல்விக்கு ஆகும் செல்வும் குறைவு, அங்கே எல்லாப் பாடங்களிலும் 100/100 வாங்குவதும் கைகூடுகிறது. உங்களுக்கு மனப்பாடம் செய்யும் திறன் இருந்தால் போதும் ஒவ்வொரு புத்தகத்தையும் முன் பக்க அட்டை பின்பக்க அட்டை ஆகிய இரண்டுக்கும் இடையில் அச்சடிக்கப்பட்ட அனைத்தையும் மனப்பாடம் செய்து அழகான கையெழுத்தில் புத்தகம் அல்லது கைடில் இருக்கும் பதிலை உள்ளது உள்ளவாறே எழுதினால 100/100 நிச்சயம்.
ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களிலும் 100/100 மதிப்பெண் பெறலாம். எங்கள் நிறுவனத்தை அணுகவும். பாஸ்போர்ட். விசா எல்லாம் நாங்கள் பர்ட்த்துக். கொள்கிறேம். இரண்டு ஆண்டுகளில் நீங்கள் எல்லாம் பாடங்களிலும் 100/100 பெற்று நம் நாடு திரும்பலாம் ஆலோசனை இலவசம். அந்த நாட்டில் உள்ள(நன்றாக மனப்பாடம் செய்யவைக்கும் ) பள்ளி ஒன்றி. இடம் பெற்றுத் தருவது எங்கள் பொறுப்பு. இரண்டு ஆண்டு கட்டணம் ரூ. 20 லட்சம் மட்டும். பணம் பெரிதா? 100/100 பெரிதா? சிந்திப்பீர்! சீர்தூக்கிப்பார்ப்பீர்!

ஐரோப்பிய நாடுகளின் கல்வி வியாபரிகள் முன்னேற்றச் சங்கம்

எழுதியவர் : மலர் (11-May-14, 9:31 am)
பார்வை : 372

மேலே