சிறப்புக் கவிதை 29 விமர்சனம் கையில் மையெழுதி இந்தியக் கனவெழுதி - எழுத்து சூறாவளி

இந்தக் கவிதையில் எதிர்காலமிருக்கிறது... கவிதையில் மட்டுமல்ல... கவிஞருக்கும்....!

"அந்நிய மண்ணில்
அகதிகள்போல நம்முறவு!
அண்டை நாட்டில்
அடிமைகள்போல நம்சொந்தம்! "

சூறாவளி சில்லுப் பெயர்க்கிறது தேசிய நிர்வாகச் சீர்கேடுகளை. அவலம் உரைக்கிறது படைப்பு. அடுத்த வழி என்ன..?

"உறுதிகொண்ட ஒருவன் தேவை!
நெஞ்சுரம்கொண்டவன் நாடாலட்டும்!
வாழ்த்தி உயர்த்தி அமர்த்துவோம்!
வஞ்சம் கலந்தால் வீழ்த்திடுவோம்! "

களிமண் காலேறி பிசுக்கிறது என்றால் கலப்பு வண்டலும் கால்கிழித்து ருசிபார்க்கிறது. மண்ணைக் காப்பவன் வேண்டும் இந்த மண்ணை நேசிப்பவன் வேண்டும் என விண்ணப்பித்திருக்கிறார் தோழர்.
எப்படி அடையாளம் காண்பது..? மையிட்டு மணைஏற்றி வைத்தால் மகுடமேந்தும் மனிதர் அவருக்கான ஏதோவொரு நிகழ்வில் கறைகளுக்கு சொந்தக்காரயிருக்கிறார் ...
இன்னும் கட்டமைப்புகள் மாறவேண்டும். சனநாயகம் என்னும் பெயரில் இங்கு அடிப்படை கல்வித்தகுதி இல்லாத ஒரு சாமானியனும் அரியணை ஏறலாம் என்றவொரு சட்டம்.... படித்தும் அறிவிலிகளால் சூறையாடப்படுகிறது என்பது நாம் கடினமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை...!!!

இந்தக் கவிதையின் நீட்சி.. ஒரு சிபாரிசுகளற்ற.. ஒரு கைக்கூலி தவிர்த்த... ஒரு மதச்சார்பற்ற... ஒரு சாதி பெயரிட்டுக் கொள்ளாத.. ஒரு நல்லரசு வேண்டும் என்பதன் விண்ணப்பமாயிருக்கிறது..
படைப்பு.. கூர்வாள்..!!!

எழுதியவர் : சரவணா (12-May-14, 9:21 am)
சேர்த்தது : கட்டாரி
பார்வை : 121

மேலே