சிறப்புக்கவிதை 30 விமர்சனம்-அசரீரியின் இசையில் எனது ஓலம் அகரமுதல்வன்

கல்லுருட்டி வீடு செய்யும் சிற்றெரும்பை போல பயணிக்கிறேன் இக்கவிதைக்களுக்கான விமர்சனங்கள் எழுதுகையில்.. விமர்சிப்பது என்பது ஒரு எழுத்தை மற்றொரு எழுத்தால் வரையறுக்கும் பொழுதுமட்டும் எத்தனை கடினமாக இருக்கிறது..

அகரமுதல்வன்... தளத்தின் அடிமூலையில் நின்று நான் தளவிருட்சத்தின் நுனித் தளிரை பார்ப்பது போல் நான் வியந்து நோக்கும் ஒரு படைப்பாளி..
"அசரீரியின் நிழலாகவும் இசையாகவும் நீள
கவிதையின் தொடக்கத்தில் என்னுயிர்
இருந்ததைவிட
இன்னும் மரணித்துவிட்டதை
நீங்களும் அறிய வாய்ப்பில்லை "

என்று எழுதி குதறிக்கிடக்கும் குற்றுயிர்களின் வழிந்தோடும் குருதி எடுத்து வலிகள் வணர்த்தி வைப்பவன்....!! பிண வாடைகள் நுகந்து அதன் இறப்பின் மூலம் என்னவென்று எழுத வந்திருப்பவன்.. ! போராளி அல்ல... உணர்வன்...

இவரின் படைப்புகளை வாசிக்கும்பொழுது நாம் அறியாமலேயே எழுத்தின் நிறம் மாறும். பொதுவாக சிவப்புக்கு.. கலங்கிய கண்களின் வழி எழுத்தின் நிறம் மங்கும்.. ஒழுகி வழிவதெல்லாம் கிட்டத்தட்ட இரத்தத்தின் சாயலை ஒத்திருக்கும்...!


"ரணங்களின் மேடுகளில் முளைவிடும் புற்களென
என்னிலிருந்து வழியும் ரத்தங்கள்
காலத்தின் குளத்தில் குமிழிவிடுகிறது "

என்னும் மூன்று வரிகளில் ஒரு புதினம்.. ஒரு காவியம்..ஒரு அழிக்கப்பட்ட வரலாறு புதைந்து கிடக்கிறது வலிகளில் முனகியபடியே.. மீட்டெடுத்துக் கழுவி அழகு பார்க்க விரல்கள் தூக்கியபடியே காத்துக்கிடக்கிறது... என்ன்ன செய்ய .. இழுத்து வெளியேற்றத்தான் இன்னும் ஆயுதம் வரவில்லை..

இவரின் படைப்புகள் முடித்துவிட்டு நிமிரும் பொழுதெல்லாம் இந்தக் கொடுமையின் ஏதாவது ஒரு காரணியை எப்படியாவது ஒரு தருணத்தில் பழிவாங்கத் தோன்றுகிறது... !!! படைப்பு சீற்றம்...!!!

எழுதியவர் : சரவணா (12-May-14, 9:38 am)
சேர்த்தது : கட்டாரி
பார்வை : 74

மேலே