திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 9

ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.

ஏகம் – ஒன்று, பாதம் – அடி.

முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.

தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான். பாடல் எண்: 9

குறிப்புரை :

ஆத்துமாக்களிடத்துக் கருணை பிறக்கும் இடமாயுள்ளவன்.

அக்கினி வீசப்பட்டுத் திருவரையிலே அழுந்தச் சாத்தியுள்ள விரிந்த படத்தினையுடைய பாம்பை அரைஞாணாக உடையவன்.

எல்லாம் இறந்து அந்தமாயுள்ள சிவஞானிகள் குழாத்துக்கு நேரிதாகிய சூனியமாயுள்ள பொருளைத் தோற்றுவித்து உள்ளவனும், புலியினது ஊன் பொருந்திய தோலாடையைத் திருவரையிலே விரித்துடுத்தவன்.

நேரி என்றது நெரி எனக் குறுகிநின்றது. தரக்கு என்றது தர எனக் குறைந்தது. தூசு என்றது துசு எனக் குறுகி நின்றது. பாயான் என்றது பையானெனக் குறுகிப் போலியாயிற்று.

ஆத்தும விகாரமான அகங்காரம் போம்படி என்னறிவில் எதிர்ப்பட்டவன் கயிலாயமலையைத் திருவுள்ளத்தடைத்து எழுந்தருளியிருந்து ஆத்துமாக்களை இரட்சையாக நின்ற விசேஷத்தை உடையவனென்று ஏத்தும் சட்சமயங்களுக்கும் அவரவர் கொண்ட பயனா யுள்ளவன்.

நேரி என்றது நெரி எனக் குறுகி நின்றது.

பத்துத் தலையுள்ள இராவணன் முரியும்படி திருவிரலால் அடர்த்தவன் யாரென்றால், சண்பை என்னும் திருப்பதியிலே வீற்றிருக்கும் கடவுள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-14, 10:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே