விதியின் விளையாட்டு39

குடும்பத்தினரின் விருப்பப்படி ரிஷானிக்கும் மனோஜ்க்கும் திருமணம் ஜோசியர் முன்னிலையில் எளிமையாக உறவினர்கள் மத்தியில் இனிதாய் நடந்து முடிந்தது இரு வீட்டாருக்கும் பெரும் மகிழ்ச்சி ரிஷானியும் மிகுந்த உற்சாகத்துடன் மண வாழ்க்கையிக்குள் காலடி எடுத்து வைத்தாள்.....!

மதனை முழுமையாக தனது மனதிலிருந்து வெளியேற்றிவிட்டு மனோஜை மனதில் புகுத்திவிட்டாள் ரிஷானி.

திருமணம் முடிந்த அன்று புது இடம் என்பதால் ரிஷானிக்கு கொஞ்சம் பயமாக இருந்தது எனவே தன பெற்றோரையும் தன்னுடன் வந்து தங்குமாறு கெஞ்சி வேண்டிக்கொண்டாள் அவளின் பிடிவாதத்தால் பெற்றோரும் மனோஜ் வீட்டில் தங்கிவிட்டனர்.
இதுவரை மனோஜின் முகத்தை சரியாக கவனிக்காத ரிஷானி இன்று தனக்கு சொந்தமானவன் என்பதால் அறைக்குள் சென்றவள் அவனை காதல் கலந்த பார்வையுடன் பார்த்தாள்....ஆனால் அவனோ அவள் பார்வையை நிராகரிப்பவனாக வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்...!

இவள் பேச முயற்சித்தும் அவன் பேசவில்லை.

அன்றைய பொழுதை இருவரும் யாரோ போல் நினைத்து முடித்தனர்....!

அதிகாலையில் ரிஷானி துயில் எழுந்து அத்தையுடனும் அம்மாவுடனும் சேர்ந்து சமையல் வேலைகளை முடித்து குளித்து முடித்து அழகாய் ஒரு டம்ளர் காபியுடன் வந்து மனோஜ் முன் நின்றாள் அவன் அப்பொழுதும் விழிக்கவில்லை...அவனை தட்டி எழுப்பினாள் நிமிர்ந்து பார்த்தவன் ஷிவானி என்று ஒரு நிமிடம் நினைத்து புன்னகைத்து விட்டு நினைவு வந்தவனாய் முகத்தை இறுக்கிக்கொண்டான்.........

அவனது செய்கையை புரிந்துகொண்ட ரிஷானி காபி டம்ளரை அவனருகில் வைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

மனதில் வருத்தம் இருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

மனோஜ் தனது காலைக்கடன்களை முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்............

அவனது தாயார் வந்து என்னடா இது இன்னிக்கு உடனே கிளம்பணுமா?என்றாள்..?
பதில் ஏதும் பேசாமல் வெளியேறினான்.

எப்படியும் ரிஷானி இவன் மனதை மாற்றி விடுவாள் இவனும் இவளை பார்த்ததும் பழையதை மறந்து விடுவான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது ரிஷாநிக்கும்தான்...!

சாயங்காலம் மனோஜ் வருகையை நோக்கிக்கொண்டிருந்தாள்...

அவன் கையில் ஒரு பையுடன் வந்தவன் ரிஷானியிடம் நீட்டி இந்தா உனக்கு புடிக்குமே அதான் வாங்கிவிட்டு வந்தேன் என்றான் அதை சந்தோஷமாக வாங்கியவள் பிரித்து பார்த்ததும் அதிர்ந்தாள் தன அக்காவிற்கு பிடித்த திராட்சை வாங்கி வந்திருந்தான் அவள் கண்களில் கண்ணீர் மின்னியது..........

மறுபடியும் திரும்பி வந்தவன் மன்னிச்சிடு ஷிவானி நினைவுல வாங்கிட்டேன் இங்கே கொடு என்றான்??

எனக்கும் புடிக்கும் அத்தான் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

அவள் மனது கஷ்டப்பட்டதை பார்த்ததும் ஒரு நிமிடம் துடித்து போனான் தனக்கே தெரியாமல் தனக்குள் வந்த மாற்றம் அது என்பதையும் புரிந்து கொண்டான் மனோஜ

நம் விதி நம் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது பாவம் அந்த பெண்ணின் வாழ்வையும் கெடுக்கவேண்டுமா? என்றவனின் மனது அவளை மனதார நினைத்து கஷ்ட இஷ்டத்தில் பங்கு கொடுக்க தூண்டியது தனது மனதையும் வாழ்வையும் ரிஷானிக்கே கொடுக்க முடிவெடுத்தான

நேரே ரிஷானியிடம் சென்று குளித்துவிட்டு கிளம்பு பக்கத்திலிருக்கும் அம்மன் கோவில்லுக்கு போய் விட்டு வருவோம் என்றான்...இதை கேட்டதும் ரிஷாயின் கண்களில் ஆனந்தத்தில் கண்ணீர் பெருகியத

சரி அத்தான் இதோ வந்துடறேன் என்றவள் தன அறைக்கு சென்றாள் ஒரு நிமிடத்தில் கிளம்பி வெளியே வந்தாள்.
இருவரும் ஒன்றாக காரில் கோவிலுக்கு புறப்பட்டனர

காரை விட்டு இறங்கியதும் இருவரும் முதலில் பார்த்த காட்சி மதனையும் உமாவையும் தான்.......
மதனைபார்த்த நொடி அதிர்ந்தாள் ரிஷானி.............?


தொடரும்...........

எழுதியவர் : ப்ரியா (9-Jul-14, 4:50 pm)
பார்வை : 342

மேலே