சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 11 எந்த முத் தோ எந்த ஸொக – ராகம் பிந்து மாலிநி

பல்லவி:

எந்த முத் தோ எந்த ஸொக ஸோ
எவரிவல்ல வர்ணிம்ப த கு நே (எந்த)

அனுபல்லவி:

எந்த வாரலைந கா நி காம
சிந்தாக்ராந்துலைநாரு (எந்த)

சரணம்:

அத்தமீ த கநுலாஸகு தா ஸுலு
ஸத்த பா க வத வேஸுலை ரி
து த்த பாலுருசி தெ லியு ஸாம்யமே
து ரீணுடௌ த்யாக ராநுநுதுடு (எந்த)

பொருளுரை:

உலக பாரத்தை வகிக்கும் பகவானின் அழகு எத்தகையதோ?
அவன் சொகுசு எத்துணையோ? இவற்றை யாரால் வர்ணிக்க இயலும்?

இப்படி இருந்தும் மாந்தர் எத்தகையோராயினும் காமம்
முதலியவற்றிற்கு வசமாகி விடுகின்றனர்.

பெண்களின் கடைக்கண் வீச்சிற்கு அடிமைகளாயிருந்தும்
பரமபாகவதர்கள் போல் வேஷம் போடுகின்றனர்.
இது பால் காய்ச்சும் சட்டிக்குப் பாலின் ருசி
தெரியாததை ஒக்கும் த்யாகராஜனே.

(மும்மூர்த்தி ட்ரினிடி ப்ளாக்ஸ்பாட்டில் சாருலதா மணி பாடுவதைக் கேட்கலாம்)

எழுதியவர் : டி.எஸ்.பார்த்தஸாரதி (25-Jul-14, 3:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே