சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 13 மாகேலரா விசாரமு – ராகம் ரவிசந்த் ரிகா

பல்லவி:

மாகேலரா விசாரமு
மருக ந்ந ஸ்ரீராமசந்த் ர (மாகேலரா)

அனுபல்லவி:

ஸாகேதராஜகுமார
ஸத் ப க்தமந்தா ர ஸ்ரீ கர (மாகேலரா)

சரணம்: ஜதகூ ர்ச்சி நாடகஸூத்ரமுநு
ஜக மெல்ல மெச்சக கரமுந நிடி
க தி தப்பகாடி ஞ்சேவு ஸும்மீ
நத த்யாக ராஜ கி ரீசவிநுத (மாகேலரா)

பொருளுரை:

எங்களுக்கென்ன கவலை? மதனனைப் பெற்ற ஸ்ரீராமசந்திர!

அயோத்தி ராஜ்யத்தின் சக்கரவர்த்தித் திர்மகனே! மெய்யடியாரின் மந்தார விருட்சமே! திருவளிப்பவனே!

(உலக மாந்தரை) ஜதை சேர்த்து, நாடகத்தின் சூத்திரக் கயிற்றைக் கையில் பிடித்து,
உலகம் புகழும் வண்ணம், நடை தவறாமல் ஆட்டி வைக்கிறாயல்லவா?
(ஆகவே எங்களுக்கென்ன கவலை?) த்யாகராஜனே! சிவனால் தொழப்படுபவனே!

(பொதிகை தொலைக்காட்சியில் சீர்காழி சிவசிதம்பரம் பாடினார்)

எழுதியவர் : டி.எஸ்.பார்த்தஸாரதி (28-Jul-14, 10:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 88

சிறந்த கட்டுரைகள்

மேலே