அறிமுகம்

நான் அழகில்லை என்றிருந்தேன்உனது அறிமுகத்திற்கு முன்பு...!

நான் அழகாக தெரிந்தேன் உன் கபடமற்ற பார்வையின் அறிமுகத்தால்...!

என் உள்ளம் அழகானது உனது நேசமிகு வார்த்தைகளின் அறிமுகத்தால்...!

என் உலகம் அழகானது உனது மெய்யான புன்னகையின் அறிமுகத்தால்...!

என்னை சுற்றி அனைத்தும் அழகானது உனது எல்லையற்ற அன்பின் அறிமுகத்தால்...!!!

எழுதியவர் : சதீஷ் (31-Jul-14, 4:57 pm)
Tanglish : arimugam
பார்வை : 350

மேலே