நெஞ்சினிலே Episode 02

நெஞ்சினிலே.......
( Still I Love You ) தொடர் கதை Episode 02

ரவி மாலை 3 மணிக்கு Private கிளாஸ் சென்று விட்டு 5.00 மணிக்கு வந்து cricket விளையாட சென்று விடுவான். cricket என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவனுடைய ஊரில் அவனுக்கு தனி மரியாதை உண்டு.

மறுநாள் பாடசாலை செல்ல ஆயத்தமானான் அவனுடைய நண்பன் தீபனும் வந்து இருந்தான். தீபன் சாதாரண தரம் படித்து கொண்டுஇருந்தான் இருவரும் அண்ணன் தம்பி போல் பழகி வந்தனர். அவனும் ரவியுடைய அம்மாக்கு ஒரு பிள்ளையாகவே அவனையும் குடும்பத்தில் பார்த்தார்கள். இருவரும் சாப்பிட்டு பாடசாலை சென்றனர்.

ரவி தனது Books ஐ வகுப்பரையில் வைத்துவிட்டு பிரதான வாயிலில் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது ராதா வந்து கொண்டிருந்தால் வழமை போல தலை குனிந்த படி நடந்து வந்தால் அப்படியே ரவியை கடைகன்னால் பார்த்து கொண்டு போனாள். காலை கூட்டத்திற்கு மணி அடிக்கப்பட்டது.

எல்லோரும் காலை கூட்டத்திற்கு சென்றனர். அங்கு அதிபர் பல கருத்தகளை சொன்னார். கூட்டம் முடிந்த பின்னர் எல்லோரும் வகுப்பறைக்கு சென்றனர்.

ரவியின் வகுப்பில் அவனோடு சேர்த்து 10 நண்பர்கள் வணிக பிரிவில் படித்து வந்தனர். வகுப்பில் 4 பாடங்கள் முடிந்த பிறகு இடைவேளை விட்டபின் ரவி கலை பிரிவில் படிக்கும் மாணவ மாணவிகளை
கலை பிரிவில் படிக்கும் கமல் தான் ரவியின் உயிர் நண்பன். கலை பிரிவில் 2 வகுப்புகள் இருந்தன. 1 வகுப்பில் 12 ஆண்களும் 15 பெண்களும் இருந்தனர். அடுத்து வகுப்பில் கிட்ட தட்ட 30க்கு மேல் பெண்கள் இருந்தனர்.

ரவி நண்பர்களுடன் பெசிகொண்டிருகும்போது ராதா மற்றைய வகுப்பறைக்கு வந்தாள். இதை பார்த்த ரவி அவளை பார்த்து கொண்டிருந்தான் அப்போது ராதா வந்து ரவியை லேசாக பார்த்துவிட்டு சென்றுவிட்டாள். ரவி அந்த வகுப்புக்கு சென்று
ரவி: " விமலா யாரு இது?? இங்க வந்துட்டு போகுது " என்று கேட்டான் ஒரு நண்பியிடம்
விமலா: " அவ ரகவிட தங்கச்சிடா "
ரவி : " ஓகே ஓகே "
விமலா : " டேய் என்ன விஷயம் புதுசா கேட்கிற அழகா இருக்காளோ "
ரவி : " அப்படி இல்ல சும்மா கேட்டான் "
சிறிது நேரம் கழிந்து பாடம் ஆரம்பம் ஆனது ரவி வகுப்புக்கு சென்று விட்டான்.

பாடசாலை முடிந்து எல்லோரும் சென்று கொண்டிருந்தனர். முன்னாள் ராதா சென்று கொண்ருந்தாள் ரவி பின்னால் வந்துகொண்டிருந்தான் வீட்டிற்கு செல்லும் வழி வந்ததும் ரவி லேசாக திரும்பி பார்த்தான். அவளும் திரும்பி பார்த்தாள். இருவரும் சிரித்துகொண்டு சென்று விட்டனர்.

இப்படியே 2 மாதங்கள் சென்றன. இருவரும் சைகைனால் பேச தொடங்கினர்.
தொடரும்..............

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (5-Aug-14, 7:08 pm)
பார்வை : 378

மேலே