மகேசுவரமூர்த்தங்கள் 325 இடபாரூட மூர்த்தி

வடிவம்

காளை மீது அமர்ந்த திருக்கோலம் - ரிஷபாரூடர்
காளை அருகில் நிற்கும் திருக்கோலம் - ரிஷபாந்திகர்

காளை(ரிஷபம்) மீது அமர்ந்து இருக்கும் திருமேனி.
நான்கு கரங்கள்.
வலது மேல் கரம் - மழு
இடது மேல் கரம் - மான்
வலது கீழ் கரம் - அபய முத்திரை
இடது கீழ் கரம் - வரத முத்திரை
பிறை சந்திரன் - தலையில்
உமை அம்மை இடப்புறம்
காளையாக மகாவிஷ்ணு
யோக வடிவத்தால் குறிப்பிடப்படும்
சிவனில் பஞ்ச முகத்தில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து தோற்றம்.

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் - மூலவர் - விராதனூர் (மதுரை)
சிதம்பரம்
திருவாவடுதுறை
திருலோக்கி - திருவிடை மருதூர் அருகில்
விசயமங்கை - கோவந்த புத்தூர் - (கோவிந்தபுத்தூர்) – சுதை
திருத்துறையூர் – பண்ருட்டி
திருக்கோலக்கா – நாகப்பட்டினம் – சுதை
திருப்பழுவூர் - தற்போது (கீழைப் பழுவூர்) – அரியலூர் - சுதை
திருவான்மியூர் – சென்னை - சுதை
திருவேற்காடு - – சென்னை - சுதை
குடுமியான்மலை - புதுக்கோட்டை
சங்கரன் கோவில் - சங்கர நாராயணர் கோவில்
பெரும்பால சிவன் கோவில்களில் இந்த வடிவம் கற் சிற்பமாகவே காணப்படுகிறது.

Image : Internet

எழுதியவர் : அரிஷ்டநேமி (20-Aug-14, 3:40 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 205

மேலே