சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

பதி, பசு, பாசம் ஆகியவை ஞானத்தால் அடையப்பெறுகின்றன எனில் சரியை, கிரியை, யோகம், ஞானம் எதற்கு?

ஞானம் ஆன்மாவின் குணம். இந்த ஞானம் தேகம், இந்திரியம், பிராணன் மற்றும் கரணம் இவற்றோடு கலவாத போது அது அதன் குணத்தில் இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் தேகம் மற்றும் முன் கூறிய வற்றோடு கூடி(கண், காது, மனம், புத்தி இன்ன பிற), அதன் தன்மையை இழக்கிறது.
இவ்வாறு விஷய் சுகத்தில் பட்டு கீழ்வழிக்கு இழுத்துச் செல்லும் தேகாதி இந்திரியங்களை தடுத்து பர சுக வாழ்வினில் பதித்திடச் செய்தலே சரியை, கிரியை மற்றும் யோகத்தின் பண்பாகும்.

சரியை - தேகத்தை ஈஸ்வர விஷயத்தில் செலுத்துதல்
கிரியை - இந்திரியங்களை செலுத்துதல்
யோகம் - பிராணாந்தக்கரணங்களை செலுத்துதல்
ஞானம் - ஈஸ்வரனிடத்தில் அடங்குதல்

சரியை, கிரியை, யோகம் ஆகியவைகள் முதல் நிலைகள். இவைகளை அடைந்த பின்னரே ஞானம் என்ற உயர் நிலையை அடைய முடியும்

வேதத்திலும் சிவன் பற்றிய செய்திகள் உள்ளன. சிவாகமத்திலும் சிவன் பற்றிய செய்திகள் உள்ளன. எனில் இரண்டும் ஒன்றா அல்லது வேறுபாடு உள்ளதா?
வேதம் சுருங்கச் சொல்லும். சிவாகமம் விரிவாகச் சொல்லும்.

வேதம் மற்றும் சிவாகமம் ஆகியவை ஈஸ்வரனை குறிப்பிடுகின்றன. எனில் எதற்காக இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்ளவேண்டும்? இரண்டில் ஒன்று தேவையற்றதா?



வேதம் சிவாகமம்
புருஷாத்தங்கள் அறம், பொருள், இன்பம், வீடு வீடு
உலகம் உலகர் சத்திநிபாதர்
வீடு சொரூப விளக்கம் இல்லை உண்டு
நூல் வகை மூவுலக நூல் வீட்டு நூல்

வேதம் வழியே ஞானம் விளைகிறது. ஞானம் அடைய முதல் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். எனவே இவை இரண்டுமே தேவைப்படுகின்றன.

எழுதியவர் : அரிஷ்டநேமி (22-Aug-14, 10:22 am)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 392

மேலே