மன்னரின் மேம்பட்ட செய்யாமை நன்று - ஆசாரக் கோவை 85

அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணுந் - திறப்பட்டார்
மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
மன்னிய செல்வங் கெடும். 85 ஆசாரக் கோவை

பொருளுரை:

அறிவுடையோர் தம்மிடத்துச் செல்வம் மிகப் பெருகினாலும்
அறச்செயல்களையும், கலியாணம் முதலிய விசேசங்களையும்,
செய்யும் முயற்சிகளையும், கட்டும் வீட்டையும் அரசர் செய்வதை
விட மேலாகச் செய்யக் கூடாது.

அவ்வாறு செய்தால், அவர் சேர்த்த செல்வம் அழிந்து விடும்.

கருத்துரை:

எத்தகைய செல்வரும் அறம், மணம், முயற்சி, வீடு
இவ்வகையில் அரசரினும் மேம்படச் செலவு செய்யலாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Aug-14, 12:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 112

மேலே