கட்டிலிற் கிடந்தாருக்குச் செய்யத்தகாதன - ஆசாரக் கோவை 87

கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
நில்லார்தாங் கட்டின் மிசை. 87 ஆசாரக் கோவை

பொருளுரை:

கட்டில்மீது உடல் நலமின்றிப் படுத்திருப்பவரது காலை எப்பொழுதும் கழுவக் கூடாது.
அவரது உடலின் மீதோ கால்களிலோ பூக்களைத் தூவக் கூடாது. மறந்தும் அவரின் உடல்
மீது சந்தனமும் பூசக் கூடாது. படுக்கையில் கிடப்பவரின் கட்டிலருகில் நிற்கவும் கூடாது.

கருத்துரை: ஒருவர் கட்டிலின்மேற் படுத்திருந்தால் அப்போது அவருடைய காலைக்
கழுவுதலும், அவருக்குப் பூச்சூடுதலும், சந்தனம் பூசுதலும், அவரருகில் நிற்றலும் ஆகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Aug-14, 12:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 129

மேலே