உதவிப் பயனுரையாமை நன்று - ஆசாரக் கோவை 88

உதவிப் பயனுரையார் உண்டி பழியார்
அறத்தொடு தானோற்ற நோன்பு வியவார்
திறத்துளி வாழ்துமென் பார். 88 ஆசாரக் கோவை

பொருளுரை:

பெரியோருடைய ஒழுக்கத்தை நினைந்து, அவரைப்போல வாழ வேண்டும்
என்று விரும்புவோர் தாம் செய்த உதவியின் பயனை தாமே எடுத்துச் சொல்ல
மாட்டார்.

தமக்கு ஒருவரிட்ட உணவை இகழ்ந்து உரைக்க மாட்டார். தாம் செய்த
அறச்செயலையும், செய்த விரதத்தையும் தாமே புகழ்ந்துரைக்க மாட்டார்.

கருத்துரை:

தாம் பிறர்க்குச் செய்த உதவியைத் தாமே பாராட்டுதலும், பிறர் இட்ட உணவை
இகழ்தலும், தம் அறச் செய்கையையும் நோன்பையும் தாமே புகழ்தலும் தகாது.

உதவிப்பயன் - உதவியினது பயன்

நோற்ற - செய்த, உளி - உள்ளி என்பதன் தொகுத்தல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Aug-14, 10:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 108

சிறந்த கட்டுரைகள்

மேலே