கனம் பேசும் மனம்

மனிதர்களை - நாம், நமது கற்பனைக்குள்ளும்,கர்பிதங்களுக்குள்ளும் பொறுத்த முயற்சிக்கும் போதுதான் நமது தோல்வித் தொடங்குகிறது.இங்கு பலரின் தோல்வி அப்படியே தொடங்கி இருக்கும்(?).படிப்பு,வேலை,பணம்,குடும்பம்,புகழ் என எத்தனையோ சமன் செய்ய முடியாத சுமையானது, நண்பர்கள் மற்றும் உறவுகலினுள் இருந்து கொண்டேத்தான் தவிக்கிறது மனம். இந்த சுமையானது நமக்கு தெரியாத,அந்நியப்பட்ட ஒருவரிடம் வந்தாலும்,சில கன நேரத்திற்கு மேல் நீடிப்பதாய் உணரவில்லை.கடந்த காலத்தின் கனவை,நம்முள் உள்ள சுமைகளினால், நாம் சுமந்து கொண்டேதான் அலைகின்றோம்!
நம் மீது மற்றவர்கள் கொண்ட எண்ணத்தில் சிறிது மாறுதல் ஏற்படின், அவர்களை எதிர்க்கொள்ளும் போது அங்கே நம்முடைய பிம்பம் கொலை செய்யப்படும் என்ற அச்சத்தினை- மனம் பேசிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.அப்போது தெரிந்த மனிதர்களிடம் கூட, ஏனோ மனம் அங்கே அந்நியப்பட்டு நிற்கிறது.சொல்லப்போனால் சமூக எதிர்ப்பார்ப்பு இல்லாத மனிதனால் மட்டுமே நட்பையும்,உறவையும் இறுதிவரைத் தொடர முடிகிறது. மனிதன் மீது கொண்ட எதிர்ப்பார்புகள் இரண்டு கூர்க்கொண்ட கத்தியை போலவே மனம் எச்சரிக்கை செய்கிறது.
உறவுகள்,நண்பர்கள்,தெரிந்தோர் என எவராயினும்,அவர்களிடம் நாம் கொண்ட பினைப்பானது ,அவர்களிடம் கொண்ட சார்புநிலை கொண்டே நம் மனத்தராசில் அளக்கப்படுகிறது.
இது கசப்பாயினும் எற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!.நம் குடும்ப சூழல்களே இதற்க்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம். மேலைநாடுகளின் சூழல் சற்றே மாறுபட்டு இருப்பதன் காரணமும் இந்த சார்புநிலையே.அதீமுதலே, ''உணவு'' என்பதே மனிதம் தொட்டு, விலங்குகளுக்கும் சார்புநிலையை உண்டாக்கியதை வரலாற்றில் பல இடங்களில் காணலாம்.ஆனால் நவநாகரீகமானது, அந்த சார்பினை பணம்,அன்பு(?),பரிவு,அறிவு என எத்தனையோ கோணங்களினால் உருமாற்றிக் கொண்டிருப்பதை நம்மால் காணமுடிகிறது .மனிதகுலம் உள்ள வரை இந்த சார்பானது மாற்றுதலுக்கு உள்ளாகும் என்பதில் ஐயமில்லை.எந்த வாழ்வியல் சுமைகளினாலும், சார்பினை அப்படியே புறம்தள்ள இயலாது.
ஏனெனில்,காலங்கள் வழிநடத்திச் செல்லும் பாதைகளில் உள்ள எதனையும்,ஒரு நிலைப்பாட்டிற்கு உள்ளாக்குவது என்பது முடியாத ஒன்றே!
வாய்ப்பு-வாய்த்தவர்கள் போற்றும்,வாய்க்காதவர்கள் தூற்றும் மனிதனின் தேடலுக்கான வரன்.இதை மனம் உணர்ந்தே வாழ்வின் தேடலானது அமைக்கப்பட வேண்டும்.அந்த அழகிய வரன் அமைந்தவனையே இச்சமூகம் 'திறன்' பற்றிப் பேச அனுமதிக்கிறது என்பதை மனம் உணரவேண்டும்.
அதுவரை நமது பிம்பம், உலகில் தினம் தினம் எவரோ ஒருவரால் அலறிக்கூடையில் அரங்கேற்றப்படும்.நாமும் மற்றவரின் பிம்பத்தினை அரங்கேற்றுவோம்!

-----மனப்பயணம் தொடரும்!

எழுதியவர் : பாரி (28-Aug-14, 1:51 pm)
சேர்த்தது : pari elanchezhiyan V
Tanglish : GNAM pesum manam
பார்வை : 163

சிறந்த கட்டுரைகள்

மேலே