மகாபாரத்தில் ஒரு கேள்வி

மகாபாரத்தில் ஒரு கேள்வி

வியாச முனிவர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம். உண்மையில் அவர் எழுதியது 8000 அடிகளைக் கொண்ட ஒரு நூல் ( கி மு 8 ஆம் நூற்றாண்டு). இது பின்னர் 24,000 அடிகளைக் கொண்ட பாரதம் எனும் நூலாக இருந்து பின்னர் படிப்படியாக அடிகள் சேர்க்கப்பட்டு மகாபாரதம் என்று மாறியது.

உபரிசரன் என்பவருக்கும் பிரம்மாவின் சாபத்தால் மீனான தேவலோகக் கன்னிகளான அப்சரஸ்களில் ஒருத்திக்கும் பிறந்தவள் தான் சத்தியவதி. இவளது குலம் பரத( பாரத அல்ல) குலம்.

மீனின் மகளான சத்தியவதி படகோட்டும் பொது அதில் பிரயாணம் செய்த பராசர் அவள் மீது மோகம் கொண்டு பெற்ற பிள்ளைதான் கிருஷ்ண த்வைபாயனன் என்னும் வியாசர்.

மீன் வாடை வீசியதால் மத்ஸ்யகந்தா என்று அழைக்கப்பட்ட சத்தியாவதி பராசரின் வாக்குப்படி பிள்ளை பெற்ற பின்னர் நறுமணம் வீசியதால் அத்தினாபுரத்தின் அரசரான சாந்தனு என்பவருக்கு இரண்டாந் தாரமாக வாக்கப்பட்டாள்.

இவர்களுக்கு சித்திராங்தன், விசித்திரவீரியன் என்று இரு மகன்கள் பிறந்தனர். சித்திராங்தன் இளவயதில் போரில் இறந்துபோக பீஷ்மர் விசித்திரவீரியனுக்கு அம்பிகா, அம்பலிகா எனும் இரு பெண்களை மணமுடித்து வைத்தார்.

விசித்திரவீரியன் பிள்ளை பெரும் சக்தி இல்லாது இருந்ததால் ராஜமாதாவான சத்தியவதி தனது கணவரின் மகனான பீஷ்மரிடம் தன் மருமகளுக்கு பிள்ளை பெற்றுக் கொடுக்குமாறு வேண்டினார். பீஷ்மர் தான் பிரம்மச்சாரி என்று மறுத்துவிடவே தனது மூத்த மகனான வியாசரிடம் அக்கோரிக்கையை வைத்தார்.

தாயின் சொல்லை ஏற்று வியாசர் அம்பிகையிடம் திருதராட்டிரன் என்ற குருடான குழந்தையையும் அம்பாலிகையிடம் பலவீனமான பாண்டு என்ற குழந்தையையும் பெற்றெடுத்தார்.

திருதராட்டிரன் காந்தாரியோடு பெற்றெடுத்த 101 குழந்தைகளும் கெளரவர் என்றும் பாண்டு குந்தியோடு பெற்றெடுத்த 5 குழந்தைகளும் பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர்.

திருதராட்டிரன் மூத்தவனாக இருந்தாலும் பாண்டுவுக்கே முதலில் குழந்தை பிறந்தது. இளையவனுக்கு முதலில் கிடைத்த குழந்தை (யுதிஷ்டிரன் எனும் தர்மன்) அரசாள்வதா மூத்தவனுக்குக் கிடைத்த குழந்தை அரசாள்வதா என்ற போரே மகாபாரதக் கதை.
இது எனது சிற்றறிவுக்கு விளங்கிய வரலாற்றுச் சுருக்கம்.

இதில் எனக்குள்ள பெரும் கேள்வி என்னவென்றால் இப்பெருங் காவியத்தை கெளரவ, பாண்டவர்களின் பாட்டனார் எப்படி எழுதியிருக்க முடியும் என்பதே.

எழுதியவர் : மது மதி (28-Aug-14, 2:36 pm)
பார்வை : 237

மேலே