முரண்பாட்டை தீர்த்து சமாதானத்தை பாதுகாத்தல்

எண்ணற்ற பிரிவினைகளால் பிரிந்து கிடக்கும் இந்த மனித இனம் இன்று அடைய நினைக்க ஏங்கித்துடிக்கும் விடயம் நிலையான சமாதானம்.
இன்றய நவீன உலகில் அநாகரிகமான அத்தியாயங்களாக காணப்படுவது மனிதாபிமானமற்ற படுகொலைகளும், துன்புறுத்தலுமாகும். மனிதாபிமானம் மற்றும் மனிதநேயம் என்பது இன்றய உலகில் மிகவும் அரிதான ஒன்றாகவே காணப்படுகிறது.
உலக நாடுகளின் வல்லாதிக்க போட்டிகளும்,முறையற்ற பொருளாதார கொள்கைகளும் சமாதானத்தின் பிரதான அச்சுறுத்தல்களாக காணப்படுகின்றன.
வளர்சியடைந்த நாடுகள் வளர்முக நாடுகளை அடக்கியாள நினைப்பதும், வளர்முக நாடுகள் பொருளாதார ரீதியாகவும்,தொழிநுட்பரீதியாகவும் வளர்ச்சியடைந்த நாடுகளை தங்கியிருப்பதும் கூட சமாதானத்தை அடைய முடியாமைக்கான காரணியாகவே அமைகிறது.

நீதித்துறை என்பது இன்றைய உலகில் மௌனிக்கப்பட்ட விடயமாகவே காணப்படுகின்றது. பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் என்பது வெறும் பேசும் பொருளாகவே காணப்படுகின்றது.
உலகிற்கு உண்மையை எடுத்து கூறக்கூடிய ஊடக்த்துறையானது இன்று அதுதனது சுயாதீன தன்மையை இழந்து பக்கச் சார்பான பொருளாக காணப்படுகின்றது.
இதற்கு காரணம் மாற்று கருத்துகள் உள்ள ஊடக வியாளாளர்கள் படுகொலை செய்யப்படுவதும், துன்புறுத்தபடுவதும் ஆகும். இன்றைய அனைத்து போர் முனைகளிலும் முதல் தாக்குதல் குறியாக இருப்பது ஊடகவியளாளர்களே ஆகும். இதுவே இன்றைய சமாதானத்தின் சாபக்கேடாக காணப்படுகின்றது.

வளர்முக நாடுகளில் காணப்படுகின்ற தனிநபர் இலாப நோக்கம் கொண்ட அரசியல் சித்தாந்த கொள்கைகளானது மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி சமாதானத்திற்கு கேடு விளைவிக்க கூடியதொன்றாக காணப்படுகின்றது.
நிலையான சமாதானமானது தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பதன் ஊடாகவே அடையப்பெற வேண்டும்.மொழி ரீதியாகவும், மத ரீதியாகவும், இன ரீதியாகவும் காணப்படும் முறன்பாடுகள் யாவும் களையப்பெற்று சமாதானத்தின் முக்கியத்துவம் அனைவர் மத்தியிலும் போதிக்கப் பட வேண்டும்.
பாடசாலை மாணவர் களிடமிருந்தே சமாதானத்திற்கான வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.ஒவ்வொரு சமூக மட்டங்களிலும் காணப்படுகின்ற சமாதானத்திற்கு முரணான பழமைவாத கருத்துக்கள் அகற்றப்பட்டு மனித வாழ்வின் மகத்துவம் புரிதலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

எழுதியவர் : கமல்தாஸ் .அ (30-Aug-14, 5:28 pm)
பார்வை : 202

மேலே