நான் வியக்கும் நண்பர்கள்

காதல் கவியில்
கரை புரண்டோடும்
வித்யா...
காதலினூடே சற்று
...........ஐ இழைய விட்டு
கனிரசம் கொடுக்கும் சந்தோஷ்
விழி விரிய வைக்கும்
வியப்பான வரிகளில்
லம்பாடி
தத்துவங்களை
தகைசான்று உரைக்கும்
மல்லி மணியன்
எழுதி குவித்து
எதையும் எதிர்பாரா
இனியவன்
கருத்து செறிவில்
கலக்கும் அஹமது
இலக்கண நயத்தில்
லயம் சேர்க்கும்
கவின்சாரலன்
வித்தியாசம் காட்டி
விறுவிறுக்க வைக்கும்
வேளாங்கன்னி
பெண்ணீயம் பேசும்
புரட்சி கவியில்
சாந்தி
நறுக் சுறுக்
கவிதைகளில் கார்த்திகா
கருத்துரைத்து
பிறர் கவனம் திருப்பும்
பழனிக்குமார்
வெண்பா புனையும்
வஞ்சிப்பா ஷ்யாமளா
கேள்வியின் நாயகன்
இஸ்மாயில்
சமீபத்தில் வந்து
சக்கை போடு போடும்
ராம் வசந்த்
காதலாகி
கசிந்துருகும்
முதல் பூ
எளிய படைப்பில்
எல்லோரையும் கவரும்
சர்நா....
இப்படியாய் நீள்கிறது
எழுத்து தளத்தில்
நான் ரசிப்போர் பட்டியல்.....

எழுதியவர் : சித்ரா ராஜ் (1-Sep-14, 12:52 pm)
பார்வை : 80

மேலே