உனக்கு மட்டும் நான் சொந்தமல்ல1

சோகம் உனக்கு மட்டுமல்ல
உற்றுப்பார் உன் உடனிருக்கும் அனைவரிலும்
ஏதோ ஓர் உருவில்...!

கவலை உனக்கு மட்டுமல்ல
உலகில் பிறக்கின்ற எல்லா ஜீவனுக்கும்
உயிர் உள்ள நொடியெல்லாம்..!

கோவம் உனக்கு மட்டுமல்ல
உணர்வுள்ள நம் எல்லாரிலும்
உலவும் ஆவியாக..!

எனவே இவை அனைத்தும் உனில் காணும் வேளையில்
நினைவில் கொள் "நான் உனக்கு மட்டும் சொந்தமானவன் இல்லை" - என்று




by C.J.C

எழுதியவர் : jenni (1-Sep-14, 12:55 pm)
பார்வை : 255

மேலே