உடலே எந்தன் முதலீடு

சாலையோரம் நிற்கின்றேன்..
என்னுடலை நானே விற்கின்றேன்.
வறுமையும் என்னை வாட்டியது-பின்
இளமை இவ்வழி காட்டியது.........

கலவியின் மீதொரு,
ஏக்கம் வரும்,
என் கட்டுடல் அதனை
மீட்டு தரும்........

உடலே எந்தன் முதலீடு-இதில்
கட்டணம் கட்டி விளையாடு......
கற்பை காப்பது பெரும்பாடு..
உடலை விற்றேன் வெறுப்போடு...

காலப்போக்கில் உடையும் நடையும்
மாறிப் போனதடா.......
விலைமகள் என்ற பட்டத்தால்
விதி நாறிப் போனதடா.......

கடவுளின் மீது சத்தியமாய்
நான் பத்தினி பிள்ளையடா....
காலம் செய்த கோலத்தால்
நான் பத்தினியில்லையடா....

நிம்மதியென்பது என் வாழ்வில்
வெறும் கனவாய்ப் போனதடா.....
பாடாய்ப் படுத்தும் பாவிகளால்
உடல் ரணமாய் ஆனதடா....

மங்கையின் மீது போர் தொடுத்தால்
கட்டுடல் தாங்காது...
பலர் வேகத்தால் வரும் சோகத்தால்
என் இரவுகள் தூங்காது....

என் தன்மானம்,
இங்கு அவமானம்..
என் நிர்வாணம்,
தரும் வருமானம்.........

எழுதியவர் : அகத்தியா (2-Sep-14, 3:01 am)
பார்வை : 101

மேலே