சரிதாவும் , மேரியும் விட்ட சரியான குத்துக்கள்

நேற்று இரண்டு இந்தியப் பெண்கள் ஆசியப் போட்டியில் கலக்கி இருக்கிறார்கள் . அதுவும் இருவரும் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் . மணிப்பூர் மாநிலம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறது ? எவ்வளவு அதிகாரத்தின் அராஜகம் நடக்கிறது ??எல்லாம் இணையத்தில் தேடி தெரிந்து கொள்ளுங்கள் .

அப்படிப்பட்ட மாநிலத்தில் இருந்து வந்த மேரி கோம் குத்து சண்டையில் தங்கம் வென்று இருக்கிறார் .காடுகளில் விவசாயம் செய்யும் பழங்குடிகளுக்கு பிறந்தவர் இவர் .பள்ளி இறுதித் தேர்வில் தோற்றவர்.

மூன்று குழந்தைகளின் தாய் .குடும்பத்தையும் ,குத்து சண்டையையும் சேர்ந்து தொடர பலப்பல சிரமங்கள்.

.அவர் boxing முறைகள் சரி இல்லை ,அவரால் இனி தொடர முடியாது என சொல்லிக்கொண்டே சில விளையாட்டு மேதாவிகள்........
எல்லாவற்றயும் புறந்தள்ளி ஜெயிக்கிறாள் மேரி கோம் . இம்முறை அல்ல .
இதுவரை உலக அளவில் 13 தங்கம் , 2 வெள்ளி , 2 வெண்கலம் பெற்றவர் .

இருக்கும் சூழல் முக்கியம் அல்ல . மன உறுதி இருந்தால் சூழலை வென்று , சரித்திரம் படைக்கலாம் என்பதை உணர்த்தும் மேரி கோமுக்கு நன்றி செலுத்தி அவரை நம் மனதில் நிறுத்துவோம் .
தடைகளை உடைப்போம் .சரித்திரம் படைப்போம்

அடுத்து ....சரிதா தேவி ..அதே மணிப்பூரி...மிகவும் வறுமையான குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக பிறக்கிறார்..கட்டைகளை சுமந்து , சுள்ளிகளையும் பொருக்கி வயதான பெற்றோரை , குடும்பத்தை பராமரிக்கிறார் இல வயதுகளில் .

இப்போது ஒரு வயது நிரம்பாத குழந்தை வீட்டில் ..அம்மாவை அடையாளம் கண்டுபிடிக்க முடிவதில்லை அக்குழந்தையால் ...அம்மா தனக்காகவும் , நாட்டுக்காகவும் ஓடிக்கொண்டு இருக்கிறாள் ...குழந்தைக்கு தெரியவில்லை பாவம்.!

நேற்று நடந்த போட்டியில் கொரிய மங்கைக்கும் (பெயர் - பர்க்) சரிதவுக்கும் ... முதல் இரண்டு சுற்றுகளில் இரண்டு பேரும் சளைக்காமல் போராடுகிறார்கள் . பாதி பாதி வெற்றி ...என சொல்லலாம் .மூன்றாவது சுற்றில் சரிதா பர்க்கை knockdown செய்கிறார் . நாலாவது சுற்றிலும் எளிதாக ஜெய்க்கிறார் .
முடிவு ????
பர்க் ஜெயித்ததாக அறிவிப்பு .!!! ( இந்த போட்டிகள் கொரியாவில் நடை பெறுகிறது ...மக்களே )

கதறுகிறார் சரிதா .பிறகு இந்திய அதிகாரிகளிடம் முறையிட சொல்கிறார் . அவர்கள் செய்ய வில்லை .

பதக்க அணிவிப்பு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள் ...
செல்கிறார் . வெண்கல பதக்கம் அணிவிக்கிறார்கள் .
அதற்கு குனியாமல் பதக்கத்தை கையில் வாங்கி , கொரிய மங்கைக்கு அணிவித்து விட்டு கீழே இறங்கி விடுகிறார் சரிதா .

மேரி கோம் சொல்கிறார் . சரிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்னை ஆக்ரோஷப் படுத்தியது . அதனால் வெல்ல முடிந்தது .

பதக்கத்தை திருப்பி அளித்த சரிதா சொல்கிறார் -- ( அவர் போட்டிகளை அவமதித்ததாக அவர் மேல் நடவடிக்கை எடுக்க அமைப்பாளர்கள் திட்டம் .!)
...
இது கொரிய நடுவர்களுக்கு என் நன்கொடை ...
நான் சரியான் முடிவுகள் வர வேண்டும் என்று இப்படி செய்தேன் .என் எதிர்காலம் இதனால் பாதிக்கக்..கூடும் .
எனக்கான தண்டனையில் ஒரு நல்ல விழிப்புணர்வும் / ஆக்க பூர்வமான முடிவுகளும் பிறக்கக் கூடும் . அது நடந்தால் என் கனவுகளை தியாகம் செய்து விட்டு கட்டைகள் , சுள்ளிகள் சுமக்க கண்டிப்பாய் போய் விடுகிறேன் .!!!

அவரை போற்றுவோம் . அவருக்காக போராடுவோம் .அவர் போன்றவருக்கும் .....

எழுதியவர் : ராம்வசந்த் (2-Oct-14, 10:00 am)
பார்வை : 170

சிறந்த கட்டுரைகள்

மேலே