எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் --- விரல் மாறும் தொடர்கதை 11

பள பளக்கும் வெள்ளை புடவையில் சும்மா தக தகவென ஜல் ஜல் ஜல் என்று கொலுசு சத்தம் பற்கள் கூச இடுப்பை ஆட்டி ஆட்டி கண்களை உருட்டி உருட்டி ஒய்யார நடை நடந்து காவல் நிலையத்துக்குள் சென்றாள் ஜீவிதா.இப்போ மழை வந்தா நல்லா இருக்குமே.இந்தா வந்த்ருச்சு.
ஏய் என்ன ஆளு புடிக்க போலிஸ் ஸ்டாசனுக்கே வந்திட்டியா. பாரேன்.இந்த அக்காவுக்கு இந்த மழைலயும் அதுக்கு மேல பேச அந்த போலிஸ்காரனுக்கு வாய் இல்லை. ஒரே குத்து.முன் பற்கள் இரண்டும் ஜீவிதாவின் முஷ்டியோடு ஒட்டி குத்தி நின்றன. நாலு மாமாக்கள் சுற்றி நின்று விட்டார்கள். இனி வேறு வழியில்ல. புடைவையை வேட்டி போல மடித்துக் கட்டிக் கொண்டாள். ஒவ்வொருவராக பார்த்தாள்.கேப்டன் பிரபாகரனில் கேப்டன் அடிப்பாரே. அடி. அப்படி அடுத்த பத்து நிமிடங்களுக்கு பிரித்து மேய்ந்தாள்.என்ன திருநங்கைன்னா புடைவைய தொட்டவுடனே கை எடுத்து கும்பிடுவானு நினைசீங்களா. அது அந்த காலம். அடிக்கு அடி உதைக்கு உதை. இனி எந்த இடத்திலையும் எங்கள பார்த்து உஸ்.. ஒம்போதுன்னு எவனும் கூப்டக் கூடாது. கூப்டா இப்பிடி தான்.. அடிப்பேண்டா... அன்று அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து போட்டுவிட்டு தன் தோழிகளைப் பார்த்துக் கண் அடித்தாள். நால்வரும் வெளியே வந்தார்கள். மழை இன்னும் பிரித்துக் கொண்டு இருந்தது.எல்லாரும் வந்தாச்சா.நான் கடவுள் படத்தில் பிச்சைகாரர்கள் எல்லாரும் சேருவார்களே அந்த மாதிரி ஒரு இடம். எதிரே 50 கும் குறைவில்லாமல் திருநங்கைகள் அமர்ந்திருக்க எதிரே தன் சகாக்களுடன் ஜீவா நின்று கொண்டிருந்தான். கூட்டம் ஆவலா காத்துக் கொண்டு இருக்க. ஜீவா பேச்சைத் தொடங்கினான்.ஒம்போதுன்னு சொன்னா யாருக்கேலாம் கோவம் வரும் என்று கேட்டான் ஜீவா.கூட்டத்தில் எல்லாரும் தனக்கு என்று கையை தூக்கி கச கச என்று கூச்சலிட்டார்கள்.
அடி செருப்பால நாய்களா.. ரோசம் வேற வருதோ... பின் என்ன மயித்துக்குடி போய் கைய நீட்டி நிக்கறீங்க. வெக்கமா இல்ல பிச்சை எடுக்க.முட்டு சந்த பார்த்தா காசுக்கு நின்னறீங்க.பொட்டச்சியா மாறணும்னு தான் மனசும் சொல்லுது,. உடம்பும் சொல்லுது. போரவ வாறவன் கூடெல்லாம் படுக்கனும்னு சொல்லுதோ. கேட்டா பணம் இல்ல.. ஒட்டு இல்ல உறவு இல்லன்னு நொன்ன நியாயம் பேசறது. எல்லாந் தெரிஞ்சு தான புடவைய கட்றோம்.. அபோ உன் சாப்பாட்டுக்கு நீ தான் நேர் வழி பாக்கனும்.வேலை தேடு. படிச்சா தான் வேலைன்னு படிச்ச பல பேரு நம்பிட்டு இருக்கானுங்க.. அப்பிடி எல்லாம் கிடையாது. சாக்கடை அல்றது கூட வேலைதான்.கேளு. தட்டு.எதுவும் கிடைக்கும். அத விட்டு சோம்பேறியா பகல்ல தூங்கிட்டு நைட்ல சந்து பொந்துக்குள்ள எல்லாம் கடவுள் பாத்துப்பான் என்ன பண்ண என் பொறப்பு அப்டின்னு வசனம் பேசிட்டு எவன் கூடையும் போய் படுக்கரத முதல்ல நிறுத்துங்கடி.. நீங்க ஒன்னும் அனாமத்த பொரக்கல. ஆம்பள பொம்பள மாறி திருநங்கை அவ்ளோ தான். சும்மா ஊரெல்லாம் பொய் ஒப்பாரி வைச்சு கிட்டு திரியறத விட போராடுங்க. உங்களுக்கும் ஒட்டு உரிமைல இருந்து எல்லா உரிமையும் வேணும்னு கேளுங்க.. வேலை வாய்ப்பு வேணும்னு கேளுங்க. ரோட்ல உக்காரு. அடிச்சா திருப்பி அடி. கொடி பிடி.இது உன் நாடு. உன் தேசம். உனக்கில்லாத உரிமை வேற யாருக்கு.15 வயசுல எவனாது தொட்டானு சொல்லி படிப்ப விட்டு வீட்ல வந்து அழுது புலம்பாதீங்க. ஆமாண்டா நான் திரு நங்கை தான்னு காலெற தூக்கி விட்டு படிக்கிற வழிய பாருங்க. நல்ல நிலைமைல இருக்கற திருநங்கைகளும் கொஞ்சம் கவனம் எடுத்து வருமையில இருக்கற தன் தோழிகளுக்கு உதவனும். போய் டிவில உக்காந்து பேசறதுல ஒண்ணுமில்ல. ரோட்ல இறங்கி வேலை பாக்கணும்...அப்புறம் இன்னொரு விஷயம். எதுக்கு அவ்ளோ ஒப்பனை. எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் மூஞ்சி முழுக்க சாயத்த பூசித்து நடக்குதுங்களா எதுக்கு கழுத்த அப்படி வெட்ற . எதுக்கு அதீத ஒப்பனை.. எதுக்கு உன்ன பொம்பலன்னு அவ்ளோ அழுத்திக் காட்ற. இயல்பா இருந்துட்டு போ. என்ன பழகிடுச்சு சொல்றீங்களா. தூக்கி போட்டு மிதிப்பேன். இங்க எதுமே மாறர பழக்கம் தான். என்றபடியே திரும்பி சகாக்காளைப் பார்க்க சாகாக்கள் ஒருவனை பின் பக்கமில்ருந்து இழுத்து வந்து ஜீவாவின் அருகினில் உட்கார வைத்தார்கள்.இவன் தான் எங்க சித்தப்பன்.. என்னோட12 வயசுல அவன் ஆம்பலதனத்த என்கிட்டே முதன் முதலா காட்டினவன். என்று சொல்லி கையில் இருந்த பிளேடால் கதக்குனு தொண்டைல ஒரு போடு. குபுக்குன்னு ரத்தம் வர கூட்டத்தில் குழப்பம் கூச்சல் யாரும் சத்தம் போடக் கூடாது. கம்முனு உக்காரணும்.கூட்டம் திருட்டு முழி முழித்துக் கொண்டு அமர்ந்தது. அடுத்து ஒரு ஆன். பேரழகன். குனிய வைத்து முதுகெலும்பில் ஆணி அடித்தான் ஜீவா. இவ பொட்டனு தெரிஞ்சு தான கொஞ்சுன. காதலிச்ச. இபோ கல்யாணம் பண்ணிக்கும் பொது மட்டும் புதுசா ஒரிஜினல் பொம்பள தேவைப் படுதோ.சாவு நாயே. அடுத்து ஒரு திருநங்கை. மண்டையில் சுத்தியலால் அடித்தே கொன்னான். கூட்டம் வெலவலத்தது.இனி வீட்ல இருக்க பிஞ்சு குழந்தைங்க கிட்ட எவனாது எவலாது சில்மிஷம் பண்ணி அவுங்க வாழ்க்கைய நாசம் பண்ண நினைச்சா கொல்லுவேன்.பொண்ணுங்கள காதலிச்சு ஏமாத்ர யாரா இருந்தாலும் கொல்லுவேன்.அதே சமயம் நல்ல பசங்கள் கட்டிகறேனு சொல்லி ஏமாத்தரவ திருநங்கையா இருந்தாலும் கொல்லுவேன்.உங்க முன்னால ஏன் பண்ணினேன் தெரியுமா.. இனி உங்கள்ள யாரையும் நான் தெருவுல பிச்சை எடுக்கறத புடைவைய தூக்கரத பாக்க கூடாது. பார்த்தேன் அவ்ளோதான். போலிஸ் கீளிச்னு எவ்லாது போனீங்கனா. அப்டியே எமலோகம் போயிருங்க. சொல்லிபுட்டேன். போ. போ.. கலைஞ்சு போ.போ போய் பொலப்ப பாரு.அனைவரின் முகத்திலும் ஒரு மறுமலர்ச்சி. ஒரு தன்னம்பிக்கை. கலைந்து போனார்கள்.

மறு
நாள்
காலையில்
எவர்
ஸ்மைல்
தூக்கில்
தொங்கிக்
கொண்டு
இருந்தாள்.

தொடருவது இனி யாரோ.

*
Hearty congratulations to Living Smile Vidya on being awarded a scholarship by the Charles Wallace India Trust to pursue theatre in the UK.

Smiley is a writer, actor and artist who lives and works in Chennai. Her book I am Vidya, published in Tamil, has been subsequently translated into English, Malayalam, Marathi and Kannada. She is also an accomplished actor, known for her work with Srijith Sundaram’s Kattiyakkaari production Molagapodi as well as with other productions and directors. Her art work has won acclaim at both queer and mainstream exhibitions. She has also worked in Tamil and Malayalam movies as Assistant Director.

எழுதியவர் : செந்தேள் (6-Oct-14, 4:20 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 311

மேலே