நிரல்யா -2

பூவை விட மென்மையாய் திரும்பிய அவளின் மென்மையை , கெடுக்கும் விதமாய் சீறிக்கொண்டு அவள் முகத்தை கிழித்தன தண்ணீர்…..…………………………………


திடுக்கென விழித்த அவள் திரு திரு வென முழித்தாள்………..


சுட்டெரிக்கும் சூரியன் அவள் முகத்தை ஆரத்தழுவிக்கொண்டிருந்தன……


என்ன வெயில் அடிக்குது……பனி மழை எங்க ??


என்னது பனி மழை-யா ??? என்னடி உலர்-ர என்று சுட்டெரிக்கும் பார்வையில் சாந்தி நின்றாள்…. சாந்தி நிரல்யாவின் தாய்…. மறுபடியும் அதே கனவா??? அதே வெள்ள கவுனு….. பனி மழையில நீ … அதான…….நீ திருந்தவே மாட்டீயா நிரல்யா….. ஏழு கழுத வயசாகுது இன்னும் 10 மணி வர தூங்குற….


சட்டென்று சுயநினைவுக்கு வந்தவளுக்கு தெர்மா மீட்டர் சர்-ன்னு காய்ச்சலில் ஏறுவதுப்போல் கோபம் உச்சந்தலையை தொட்டது…


அதுக்குனு இப்படி தான் மூஞ்சில தண்ணீ ஊத்தி எழுப்புவியா ??? பாரு என் பெட்சீட் , டிரஸ்-லா நனஞ்சுப்போச்சு….. போ என்னால இதெல்லாம் துவைக்க முடியாது… நீ தான என் மூஞ்சுல தண்ணீய ஊத்துன நீயே துவ….. நீதான் எனக்கு அந்த வெள்ளக்கலர் பிராக் வாங்கித்தர மாட்டிக்குற…அட்லீஸ்ட் கனவுலையாவது நிம்மதியா போட்டு இரசிக்கவிடுறீயா……..ச..ச..… இந்த வீட்டுல நிம்மதியா கனவுக்கூட காணமுடியல……


ஆமா பெரிய ஐ.ஏ.எஸ் கனவு பாரு !!!!!!!!! இல்லாட்டி நீ அப்படியே வேலை செஞ்சு கிளிச்சுடுவப் பாரு… அந்த பிராக்-லாம் வெள்ளக்காரங்க போடுறது….நமக்கு எதுக்கு??? முதல்ல பொண்ணா லட்சனமா புடவ கட்டிப் பழகு….கல்யாண வயசு வந்துடுச்சு…. அதவிட்டுட்டு பிராக் வாங்கி தானு இம்ச பண்ணிட்டு இருக்க………போ முதல்ல பல்ல விலக்கி குளிச்சிட்டு சாப்பிட வா……


பல்ல விலக்கிட்டு வரேன் , நா சாப்டு தான் குளிப்பேன்…..…எனக்கு ரொம்ப பசிக்குது அம்மா… அப்பறம் குளிச்சிக்குறேன்……


நீயெல்லாம் திருந்தவே மாட்ட….. உன்னால எனக்கு எல்லா வேலையும் கெட்டுப்போகுது… அந்த மனுஷனுக்கு என்ன , எந்த கவலையும் இல்லாம வெளிநாட்டுல போய் வேலை பாக்குறேனு அங்கயே உக்கார்ந்துட்டாரு…..வீட்டுல என்ன நடக்குதுனு , போன் –ல கூட கேக்கமாட்டாரு….கேட்டா நேரமே இல்லனு சொல்லுவாரு…அவரு ஒழுங்கா இருந்தா நீ இப்படி இருப்பீயா????????? எல்லாம் என் தலையெழுத்து…..நா தான் மாறடிக்க வேண்டிருக்கு உன்கிட்ட……..இப்படி சோம்பேறியா இருந்தா போற வீட்டுல நல்ல மொத்துப்படுவ......உனக்கு கல்யாணம் பண்றவர எனக்கு நிம்மதியே இருக்காது….


முருகா…. காலை-லயே ஆரம்பிச்சுட்டியா உன் சுப்ரபாதத்த….இப்ப தூங்காம பின்ன எப்ப தூங்கப்போறேன் மா…. நானும் மாமியார் வீட்டுக்கு போய்ட்டா இப்படி தான் தூங்க கூட நேரம் இல்லாம வேலை பாத்துட்டு இருப்பேன்…..தூக்கம் –லா ஒரு வரம் …எல்லாருக்கும் கிடைக்காது …. எனக்கு கிடச்சு
இருக்கு…..அனுபவிக்க விடேன்…


ஆமாடி !!!!!!!!!!!!!! இந்த வேதாந்த பேச்சுக்கெல்லாம் குறச்சலே இல்ல…. நல்ல கிழவி மாறி பேசு…… ஒழுங்கா இப்ப எழுந்திருக்கியா இல்ல இன்னொரு கப் தண்ணி மூஞ்சுல ஊத்தவா…. ????????


பின்ன உன் பொண்ணு உன்னமாறி தானே பேசுவேன் மா ……ஹா ஹா ……ஆமா எனக்கு ஒரு சந்தேகம்……உனக்கு யாரு சாந்தி-னு பேரு வச்சா….....ஒரு பாட்டுக்கூட கேட்டு இருக்கேன்….. ” அமைதிக்கு பெயர் தான் சாந்தி “ –னு…… ஆனா உனக்கு கொஞ்சம் கூட பொருந்தலை-யே
மிஸ்சஸ்.சாந்தி…. எந்த நேரத்துல சாந்தி –னு பேரு வச்சாங்களோ எப்ப பாத்தாலும் கத்திட்டே இருக்க…


ஏன்டி நக்கல பண்ண மாட்ட…. பேர்-லாம் கரெக்டா தான் வச்சு இருக்காங்க…என்னைக்கு உன்ன பெத்தேனோ அன்னைக்கே என் மன சாந்தி போய்டுச்சு……..


அதானே என்ன குறசொல்லனா உனக்கு தூக்கமே வராதே…… என்னபத்தி வெளியப்போய் கேட்டுப்பாரு..அப்ப தெரியும் என் அருமை பெருமை-லா……


சரிமா மகாராணி , இப்ப எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்ல…போய் பல்ல விலக்கிட்டு குளிச்சுட்டு வந்தா தான் சாப்பாடு..இல்லனா காக்காக்கு வச்சுடுவேன்….


அய்யயோ !!!!!!!! நீ பண்ணாலும் பண்ணுவ பா……. இரு குளிச்சிட்டு வந்துடுறேன்…..எனக்கு ரொம்ப பசிக்குது….. என்று சிட்டாய் பறந்தாள் நிரல்யா…………


அப்பொழுது நிரல்யாவின் கைப்பேசி ,


ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான் All is well , தோல்வியா டென்ஷனா சொல்லிடு All is well , டைட்டாக
லைஃபே ஆனாலும் லூசாக நீ மாறு , வவ்வாலை போலே நீ வாழ்ந்தால் பூமி எங்கும் தொங்கும் தோட்டம்………….. என்ற பாடலை ஓயாது ஒலித்துக்கொண்டே இருந்தது……………..


நிரல்யாக்கு All is Well சொல்லும் அந்த நபர் யார்???????????????????????????


யாராய் இருக்கும் ??????????????

.
.
.
.
.
.
.
.
அடுத்த பகுதியில் பார்ப்போம் …………

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (18-Oct-14, 1:44 pm)
பார்வை : 349

மேலே